யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் !
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய பிராந்திய அலுவலகம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இந்த அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண மக்கள் அதிக அளவில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர் என்பதால், துரிதமான சேவைகளை வழங்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தால் பொதுமக்களின் நேரம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படும். ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.