சாமி என்ற பெயரில் உலாவந்த மோசடி காமுக ஆசாமி புளிக்களுக்கு 7 ஆண்டுகள் சிறை ! : த ஜெயபாலன்

தன்னைக் கடவுள் என்று சித்தரித்து வயது வேறுபாடின்றி பெண்களைப் பாலியல் பொருளாக நுகர்ந்து தூக்கியெறியும் புளிக்கள் முரளி கிருஷ்ணணுக்கு இன்று ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புளிக்கள் முரளிகிருஷ்ணணின் காம லீலைகளை அம்பலப்படுத்தி லண்டன் மக்களை விழிப்படையச் செய்வதில் தேசம்நெற் முன்நின்றது. இன்றைய தீர்ப்பு கடவுளையும் மதத்தையும் வைத்துக் கொண்டு கல்வியை வைத்துக்கொண்டு பதவிநிலைகளை வைத்துக் கொண்டு பாலியல் லஞ்சம் கோருகின்றவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட மிகச்சிறந்த தீர்ப்பாக அமைந்துள்ளதாக தேசம்நெற் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மிகத்துணிச்சலுடன் போராடி இந்தத் தீர்ப்பினை பெறுவதற்கு முன் வந்த இரு பெண்களுக்கும் தமிழ் சமூகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது என்றும் தேசம்நெற் தெரிவிக்கின்றது.

ஆலயங்களுக்குள்ளும் சாமி வேடத்திலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் வேடத்திலும் இன்னும் பல அயோக்கியர்கள் ஒழிந்துள்ளனர் அவர்களும் விரைவில் களையெடுக்கப்பட வேண்டும்.

மார்ச் 24 முதல் ஆரம்பமான புளிக்கள் முரளிகிருஷ்ணணுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று ஏப்ரல் 3 மாலை முடிவுக்கு வந்தது. இன்று மாலை மூன்று மணிக்குப் பின் வூட்கிரீன் நீதிமன்னத்தில் நீதபதி 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். நீதி மன்றத்துக்கு புன்முறுவலோடு வந்து சென்ற புளிக்கள் முரளிகிருஷ்ணன் தன்னுடைய ஈனச் செயல்களுக்கு எவ்விதமான மனவருத்தத்தையும் காட்டிக்கொள்ளவில்லை.

புளிக்கள் முரளிகிருஷ்ணன் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த இரு குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அவருடைய குற்றச்செயல்களுக்கு 7 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படக் கூடாதென்பதை நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

புளிக்கள் முரளிகிருஷ்ணனுக்கு எதிராக மற்றுமொரு பெண் வைத்து மூன்று பாலியல் தாக்குதல் வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. குறித்த பெண் இந்த மோசடி ஆசாமிக்கு £128,000 பவுண்களையும் வழங்கியிருந்தார். அதாவது அந்த ஆசாமியின் செயரிற்றிக்கு நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த மோசடிக் குற்றச்சாட்டும் முன்னரே கைவிடப்பட்டது.

லண்டன் பானற் பகுதியில் கோயில் அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்ற இந்தக் கள்ளச்சாமியை வணங்குவதற்கு லண்டனின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் பக்தைகள் சென்று வருகின்றனர். கும்பிடுகின்றனர். இன்றைய தீர்ப்பைக் கேட்டு இந்தக் கூட்டம் நீதிமன்றில் கண்ணீரும் விட்டது. இந்தக் கூட்டங்களையும்இ காமுகனாக அறியப்பட்ட பிரேமானந்தாவைக் கும்பிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் மற்றுமொரு காமுகனான சீமானையும் களையெடுக்க எங்களுக்கு ஒரு ஈவேராப் பெரியார் போதாது என்றும் அவர் இன்னும் நூறு பெரியார் உருவாகி எம் தமிழ் சமூகத்தை காக்கவேண்டும்.

முன்னைய பதிவுகள்:

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *