மணல் ஊழலில் கைதான முன்னாள் எம்பி வியாழேந்திரன் பிணையில் விடுதலை !
ஏப்பிரல் 8 ஆன நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் 14 நாட்கள் கழித்து பிணையில் விடுதலை. மணல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 1.5 மில்லியன் இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டிலேயே வியாழேந்திரன் கைதாகியிருந்தார். இதே வழக்கில் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். எனினும் வழக்கு விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான முன்னாள் பதுளை நாடாளுமன்ற எம்பி சாமர சம்பத் தசநாயக்க எம்பியும் இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார். இதேபோன்று தரமற்ற ஊசிமருந்துகளை ஊழல் செய்து இறக்குமதி செய்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கெல தொடர்ந்து விளக்கமறியலில் உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.