அரச சேவையில் 30,000 புதிய ஆட்சேர்ப்புகள் – அமைச்சரவை அங்கீகாரம்!
அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏப்ரல் 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது . அதில் ஆட்சேர்ப்பு திட்டமும் அனுமதிக்கப்பட்டது. தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையிலான ஆட்சேர்ப்பே அரசின் கொள்கையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அரச துறையின் பணிச்சுமையை சமநிலைப்படுத்தவும் என 2025 வரவு செலவுத் திட்டத்தில் ரூ.10 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தற்போதைய நிலவரத்தில் 18,853 பேரை அரச சேவையில் இணைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், மொத்தமாக 30,000 பேரை இணைக்கும் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் துறைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.