கிளி உடற்கல்விப் பயிற்றுவிப்பாளரின் பாலியல் துஸ்பிரயோகம் ! 16 மாணவர்கள் பாதிப்பு ! பொலிஸ் தேடுதல் ! பெற்றோர் பா உ சிறிதரன் மீது காட்டம் !
கிளி கனிஸ்டா விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அலன் என்பவர் தன்னிடம் பயிற்சி பெற்று வந்த 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பா உ சிறிதரனுக்கு நெருக்கமான இவரது விடயம் பொதுமக்களுக்குத் தெரிய வந்ததும் அதனை மறைக்க பா உ சிறிதரன் முயற்சித்தாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது சந்தேக நபரான அலனைக் கைது செய்h பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமனற உறுப்பினர் ரஜீவன் காணொலி ஒன்றை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்க நம்பிக்கை அளித்துள்ளார்.
இந்த சிறுவர்கள் 10 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை விளையாட்டு பயிற்றுனர் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரது நடவடிக்கைகளில் மாற்றமும் கல்வியில் பின்னடைவும் அவதானிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் இருவர் மூலமே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசாருக்கு மேற்குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சந்தேக நபரை கைது செய்யாத போலீசார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஏப்ரல் 9 பொலிஸார் சிறார்களை பாடசாலையில் தடுத்து வைத்து குற்றவாளிகள் போல் விசாரித்துள்ளனர். அதையடுத்தே பெற்றோர் கலவரம் அடைந்து காணொலிகளைப் பரப்பினர்.
கிளி கனிஸ்டா பாடசாலை பா உ சிறிதரன் அதிபராக இருந்த பாடசாலை. பா உ சிறிதரனுக்குத் தெரியாமல் அங்கு ஓரணுவும் அசையாது. அப்படியிருக்கையில் இந்தப் பாலியல் துஸ்பிரயோகம் வெளிவந்ததும் அதனை மறைக்க அவர் முயற்சித்தார் எனக் குற்றம்சாட்டப்படுகின்றது. சந்தேகநபரான அலன் பா உ சிறிதரனது அரசியல் நடவடிக்கைகளுக்கு துணைநிற்பவர் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. அதனால் பா சிறிதரன் குற்றம்சாட்டப்பட்ட அலனை காப்பாற்ற முற்பட்டதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான வேளமாலிதனின் பாலியல் லீலைகள் அம்பலமானதுடன் தமிழரசுக் கட்சியின் அலுவலகமும் வேளமாலிதனின் சிற்றின்ப தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்தது. கிளிநொச்சியின் மண் மாபியாக்கள், வட்டி மாபியாக்கள், சாராய மாபியாக்களுடன் தற்போது பாலியல் மாபியாக்களும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாகவும் பா உ சிறிதரனின் நிதி வழங்குநர்களாகவும் இருப்பதாக பெருமளவு குற்றச்சாட்டுகள் வெள வருகின்றது.
சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டு பயிற்சியாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கிளிநொச்சி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று சனிக்கிழமை உறுதியளித்திருந்தார்.
இதேபோல் வன்னி முல்லைத்தீவில் கணித ஆசிரியர் தச்சுதன் 20 வயது வரையானமாணவிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்திருந்தமை தெரிந்ததே. தன்னுடைய மாணவர்களுக்கு போதை வழங்கி மாணவிகளை அவர்களின் வலையில் விழ வைத்து காணொலிகளை பதிவு செய்து சிற்றின்பம் கண்டவர். இவர் குறுகிய கால தண்டனையோடு தற்போது வெளிவந்துவிட்டார். அவர் தற்போதும் முல்லைத்தீவில் கணக்கு கற்பிக்கின்றார். பெற்றோர்கள் மீண்டும் மாணவிகளை அவரிடம் அனுப்புகின்றனர்