சீனாவுக்குப் போட்டியாக இந்தியாவில் ஐஃபோன்கள் உற்பத்தி அதிகரிப்பு !
ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 22 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐஃபோன்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 60 வீதம் அதிகமான உற்பத்தியை அப்பிள் நிறுவனம் இந்தியாவில் செய்துள்ளது. ஒரு வகையில் அப்பிள் நிறுவனம் சீனாவிற்குப் பதில் இந்தியாவில் அதன் தயாரிப்பையும் விநியோகத்தையும் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது. முன்னர் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐஃபோன்களை அமெரிக்கா அனுப்புவது விரைவுபடுத்தப்பட்டது. ஆனால் ஏப்பில் 11 அமெரிக்க ஜனாதிபதி திறன்பேசிகள், கணினிகள் உட்பட்ட மின்னணுப்பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதனால் இந்தியா சற்று ஆறுதலடைந்துள்ளது.
10.2: ஆகவே ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் கனவு விரைவில் பலிக்காது எனவே கூறப்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் வசதியின்மை போன்ற இன்ன பல காரணங்களால் அப்பிள் ஐஃபோன்கள் உற்பத்தியை அமெரிக்காவிற்கு இடம்மாற்றுமா? என்பது கேள்விக்குறியேயாகும்.