சிறுவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம் ! கிளிநொச்சி விவேகாநந்தா நகரைச் சேர்ந்த அலன் என்று அழைக்கப்படும் திரு. சந்தியோ அலன்டீலன் கனிஷ்ட மகா வித்தியாலயத்தில் 16 மாணவர்களுக்கு எதிராக இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் அங்கத்தவர். மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் விசுவாசியாவார். அலனை தமிழரசுக் கட்சியிலிருந்து குற்றச்சாட்டின் பாரதூர தன்மையை கருத்திற் கொண்டு உடனடியாக கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்துவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். எம். ஏ. சுமந்திரன் அலன் விடயத்தில் காட்டிய அதிரடியை ஏன் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர்கள் என குற்றம் சாட்டப்படும் ஏனைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர். Tags: அலன் தமிழரசுக் கட்சியிலிருந்து இடைநீக்கம்இலங்கை தமிழரசுக் கட்சி Show More Previous Post சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது ! Next Post புலிகளுக்கும் எங்களுக்கும் இலக்கு ஒன்று அணுகுமுறை தான் வேறு – ஈபிடிபி