பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு தடை வித்தித்த அழகிய குட்டித் தீவு !
பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலைகளை வன்மையாகக் கண்டித்து பாதிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு தோளோடு தோள் கொடுக்கின்ற வகையில் இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதற்குத் தடைவிதித்துள்ளது அழகிய குட்டித்தீவுகள் கொண்ட மாலை தீவு. மாலைதீவு ஜனாதிபதி மொகமட் மொய்சு இதற்கான சட்டமூலத்தை ஏப்ரல் 14 அன்று கையெழுத்திட்டுள்ளார். மாலைதீவினுடைய இந்நடவடிக்கை பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும் ஏனைய முஸ்லீம் நாடுகள் இவ்வாறான இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
2022 இல் 16,000 இஸ்ரேலிய உல்லாசப் பயணிகள் மாலைதீவுக்குச் சென்றிருந்தனர். கடல்அலைச் சறுக்கல் விளையாட்டுகளுக்காகவும் நிம்மதியான விடுமுறைக்காகவும் இவர்கள் மாலைதீவுக்குச் செல்கின்றனர். இஸரேலியர்களுடைய மற்றுமொரு சுற்றுலாத்தலமாக இலங்கை குறிப்பாக அறுகம்பே உள்ளது. மாலைதீவு இஸ்ரேலியர்களுக்கான தடையை கொண்டு வந்தள்ளதால் இவர்கள் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். இலங்கை அரசில் உள்ள சிலர் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை விரும்பினாலும் இலங்கை அரசு சுற்றுலாத்துறை வருமானத்தை நம்பியே இருப்பதால் இவ்வாறான நடவடிக்கைகளுக்குச் செல்வது பொருளாதாரத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் இலங்கை இஸ்ரேலுக்கு தொழிலாளர்களையும் அனுப்பி வருகின்றது. அதனால் இஸ்ரேலுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இலங்கை செல்வாதற்கான வாய்ப்பு இல்லை