சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு !
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை 846,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாட்களில் 123,945 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான 24,776 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,060 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 10,873 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 9,387 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 8,404 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 5,719 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.