பிள்ளையானால் பாதிக்கப்பட்ட தங்கள் தாய் உதயகலாவை மீட்டுத்தர ஜனாதிபதியிடம் மகள் கோரிக்கை !
யாழ்ப்பாண சிறையிலிருக்கும் சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா தயாபராஜ்யை விடுதலை செய்யும்படி அவரது மகள் நேற்றைய தினம் யாழ் ஊடகமையத்தில் அளித்த பேட்டியில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார். இதேபோன்று 4 மாதங்களுக்கு முதல் உதயகலாவின் கணவர் தயாபரராஜ் சிறையில் தனது மனைவிக்கு கொடுமைகள் நடப்பதாக புகார் கூறியுள்ளார். பதினொட்டு வயதிற்கு குறைந்த உதயகலாவின் மகள் தனது மூன்று சகோதரர்களுடன் அம்மம்மாவின் வழிகாட்டுதலில் யாழ் ஊடக மையத்தில் பேட்டியளித்துள்ளார்.
தனது தாயார் மட்டக்களப்பில் அரசியல் கட்சி தொடங்கி செயற்பட்டது பிடிக்காமல் சூழ்ச்சி செய்து பிள்ளையான் தனது தாயாரை சிறையிலடைத்துள்ளதாக கூறினார். மேலும் பிள்ளையானால் தனது தாய்க்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் அச்சிறுமி தானும் தனது சகோதரர்களும் அம்மம்மாவின் பராமரிப்பில் பல அசொளகரியங்களுடன் வாழ்வதாகவும் தெரிவித்தார். தனது தாயார் சிறையில் மிகுந்த மன உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளுடன் அவதிப்படுவதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.