நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை: புலிகளின் பேச்சாளர் இளந்திரையன்

ilanthirayan.jpgவலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு (நேற்று) சனிக்கிழமை இராசையா இளந்திரையன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் விபரம் வருமாறு:

உங்களைப் பற்றி வெளிவந்த வதந்திகள் குறித்து முதலில் தெளிவுபடுத்த முடியுமா?

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போர்க்காலத்தில் மிகவும் முக்கியமான பணிகளில் நான் ஈடுபட வேண்டியிருந்தது. தற்போது மீண்டும் உங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

தற்போதைய களநிலவரம் குறித்து கூற முடியுமா?

களத்தில் மிகவும் தீவிரமான சூழ்நிலைதான் காணப்படுகிறது.

களத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு நிற்பது என்பதைவிட, தருணம் கிடைக்கும்போது எல்லாம் பொதுமக்களை படுகொலை செய்வது என்ற கொலைவெறியோடு சிங்களப் படையினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சுதந்திரமான நிலத்தில் சிங்களவர்களுக்கு அடிமைப்படாத வாழ்க்கை வாழ்வதை விரும்பி எமது போராட்டத்தோடு இணைந்து நிற்கின்ற மக்கள், சாவிற்கும் பட்டினிக் கொடுமைக்கும் மத்தியில் தமிழினத்தின் தலையை நிமிரவைத்துக்கொண்டு இங்கு இருக்கின்றனர்.  இந்த மக்களை பாதுகாப்பதற்காக எமது போராளிகள் மிகவும் தீரமுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் தலைவரின் வழிகாட்டலில் மிகவும் திறமையாகப் போராடி வருகின்றனர்.

மிகவும் குறுகிய பகுதிக்குள் புலிகளையும் மக்களையும் படையினர் நெருக்கியிருப்பது எதனைக் காட்டுகிறது?

நிலம் குறுகிவிட்டதை வைத்துக்கொண்டு நாம் தோல்விகளைச் சந்தித்திருக்கிறோம், பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். அப்படி கூறுவது பொருத்தமற்றது. நாம் நிலத்தை இழந்திருப்பினும் பலத்தை இழக்கவில்லை.

சிங்களவர்கள் இன்னமும் வெற்றியீட்டவில்லை, தமிழர்கள் இன்னமும் தோல்வியடையவில்லை. அதனையும் நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலை நெருக்கடிமிக்கதுதான். போராளிகளைப் போன்றே மக்களும் இந்த போரை எதிர்கொண்டுள்ளனர். பசிக்கொடுமை என்ற கொடிய நிலையை முன்னிறுத்தி ராஜபக்சவும் அவரது படைகளும் கொடிய போரை திட்டமிடப்பட்ட வகையில் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

எனினும் நாம் போராடுவதற்கான மன உறுதியை இழக்கவில்லை.

கனரக ஆயுதங்களை களத்தில் படையினர் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா படைத்தரப்பில் கூறப்படுவது உண்மையானதா?

இத்தகைய கருத்துக்களை சிங்களத்தரப்பில் இருந்துவரும் ஒரு கேலிக்கூத்தாகவே நாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், சிறிலங்கா படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கூறியிருக்கிறார்.

இங்கே முழுமையான உச்ச ஆயுதவலுப் பயன்பாட்டுடன்கூடிய போரைத்தான் சிறிலங்கா அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது.

களத்தில் சிறிலங்கா படையினரின் பலம் குறித்து?

மாவிலாற்றில் இருந்து இன்றுவரை நாங்கள் போரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம். சிங்களப் படைகள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் எமது தரப்பில் இன்னமும் போரிடும் ஆற்றல் நிற்கவில்லை. சிங்களப் படைகள் முன்னேறி வந்த ஒவ்வொரு அங்குலத்திற்கும் பலத்த இழப்புகளைச் சந்தித்தன. பல டிவிசன்கள் நொந்து நூலாகி பின்களத்தில் ஓய்வில் விடப்பட்டுள்ளன, பற்றாலியன் கணக்கில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஓரிரு படையணிகளை முன்னே வைத்தே சிறிலங்கா அரசாங்கம் போரை தற்போது முன்னெடுத்து வருகிறது.

விடுதலைப் புலிகள் தமது வலிந்த தாக்குதல் திறனை இழந்திருப்பதாக கூறப்படுகிறதே?

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு தாக்குதலை செய்யவேண்டுமா, இல்லையா என்ற முடிவு தலைமையால் எடுக்கப்படுவது. எனவே அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து தற்போதைய நிலையில் அனைத்துலக ரீதியில் பரப்பப்படும் கருத்துக்கள் குறித்து?

அவசரப்பட்ட, பக்கச்சார்பான முடிவை அனைத்துலகம் பரப்புரை செய்வதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது இன்று உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஒரு பாரிய விடயம். எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற விடயம். பக்கச்சார்பான கருத்துக்களை சில ஊடகங்கள் தூக்கிப்பிடிப்பதால்தான் இத்தகையதொரு தோற்றப்பாட்டு நிலை ஏற்படுகிறது.

தரையால் மூன்று பக்கத்தால் படை நடவடிக்கைகள் இடம்பெறும்போது நான்காவது பக்கமான கடலில் கடற்புலிகளின் பலம் தற்போது எப்படியிருக்கிறது?

கடந்த வாரம் இண்டு தடவைகள் கடல்வழியாக தரையிறங்க சிறிலங்கா படை முயற்சி மேற்கொண்டது. கடற்புலிகள்தான் அந்த முயற்சியை வழிமறித்து நின்றார்கள். அந்த மோதல்களில் கடற்படையினர் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சிறப்பு படையணியைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சிறப்பு படையணியைச் சேர்ந்த இரண்டாவது நிலை கட்டளை அதிகாரியும் இதில் உயிரிழந்திருக்கிறார்.

கடல்பகுதியில் சிறிலங்கா கடற்படை அத்துமீறாத வகையில் கடற்புலிகள் இப்போதும் காவல் காத்து வருகின்றனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்திற்குள் புலிகள் பீரங்கிகளை வைத்திருந்து தாக்குதல்களை நடத்துவதாகக் கூறப்படுகிறதே?

சிறிலங்கா படையினர் ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்ற ஒன்றை தாங்களே அறிவித்து, அங்கே மக்களை வருமாறு கூறினர். அங்கு சென்ற மக்கள் மீது உலகில் மிக மோசமான ஆயுதங்கள் எனக்கூறப்படும் கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், இராசாயன விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

ஆனால், ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ என்று கூறப்படும் பகுதியில் விடுதலைப் புலிகள் ஆயுதங்களையோ அல்லது தமது சேனைகளையோ வைத்திருக்கவில்லை. மாறாக, மக்களை பாதுகாப்பதற்காக எல்லைகளில் நின்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் பலத்தை அழித்திருப்பதாக, தளபதிகளை அழித்திருப்பதான பரப்புரைகளால் புலம்பெயர் வாழ் மக்களிடையே ஒருவித சோர்வு ஏற்பட்டுள்ளமை குறித்து?

“சத்தியத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் சத்தியமே வெல்லும்” என ஒரு பழமொழி இருக்கிறது. இழப்புக்கள் ஏற்படுவது உண்மை. ஆனால் இந்த போராட்டம் எத்தனை நாட்களானாலும், எத்தனை ஆண்டுகளானாலும், ஏன் தலைமுறைகளானாலும் தொடரும்.

நாம் அடிமை வாழ்வு வாழப் போவதும் இல்லை, அதனை ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, மண்டியிடப் போவதும் இல்லை.

உலகத் தமிழர்கள் அனைவரும் எம்முடன் நிற்கும்வரை –

வன்னி மக்கள் பசிக்கொடுமைக்கு மத்தியிலும் எம்முடன் நிற்கும்வரை – எமது போராட்டம் வீறுநடை போடும். தலைவர் அதனை வென்று முடிப்பார் என்ற நம்பிக்கையை நான் கூறுகிறேன்.

களத்தில் படையினருக்கு ஏற்படும் இழப்புகள் குறித்த தகவல்களை புலிகள் வெளியிடாமல் தவிர்த்து வருவதற்கான காரணம் என்ன?

ஒவ்வொரு எறிகணைக்கும் பொதுமக்கள் செத்து மடிகின்ற கொடூரம் இங்கே நடக்கின்றபோது – பசியாலும் பஞ்சத்தாலும் இங்கே குழந்தைகள் வாடுகின்றபோது – நாங்கள் இறந்த சிங்களவர்களின் உடல்களை எண்ணிக்கொண்டிருப்பதைவிட வாழ வேண்டிய எமது மக்களின் நிலையில் கவனம் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் மக்கள் குறித்த செய்திகளையே நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

ஊடகங்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?

ஊடகங்கள் பெரும்பணியை இங்கே ஆற்ற வேண்டியுள்ளது. அவை பக்கச்சார்பின்றி உண்மையைச் சொல்ல வேண்டும், ஊடக தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும், நியாயத்திற்கு குரல்கொடுக்க வேண்டும்.

உதாரணமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இங்குள்ள மக்கள் குறித்து தெரிவிக்கும்போது அவர்களை போரில் சிக்கியுள்ள மக்கள் என்றே கூறுகிறது. அது தவறு. அவர்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுகின்ற மக்கள். மக்கள் இங்கே படுகொலை செய்யப்படும்போது போரில் சிக்கி உயிரிழப்பதாகவே கூறுகிறார்கள். இது தவறு. சிங்களப் படைகளால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதனை ஊடகங்கள்தான் வெளிக்கொணர வேண்டும்.

சிறிலங்கா படைத்தரப்போடு மட்டும் மோதவில்லை என்று புலிகள் கூறி வருகின்றனர். இது குறித்து?

சிங்களப் படையினர் தனியே எம்முடன் மோதி இருப்பார்கள் ஆயின் சூழ்நிலை எப்போதோ வேறுவிதமாக அமைந்திருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்கிறேன்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்களுக்கு அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்வதற்கு எங்களிடம் செய்திகள் இல்லை. ஆனால் எமது உளமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்தான் உள்ளன. வன்னியில் உள்ள சிறிய குழந்தைகளினதும் மனதை தளராமல் வைத்திருக்கும் முதியவர்களினதும் அன்பை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.

எமது மண் விடிய வேண்டும் என்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்துகின்ற போராட்டம்தான் இங்கே எம்முடைய கால்களை உறுதிப்படுத்தி எம்மை நிமிர்ந்து நடக்க வைத்திருக்கின்றது என்றார் இளந்திரையன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 Comments

  • மாயா
    மாயா

    புலிகள் (பிரபாகரன்) ஒரு போதும் அரசியல் ரீதியாக இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கு எண்ணவே இல்லை. தலைவர்களை கொலை செய்வதூடாக ஒரு சிங்களத் தலைமையில் பலகீனம் ஏற்படும் , அதை வைத்து தனி நாட்டை அல்லது முழு இலங்கையையும் தன் வசப்படுத்தலாம் என்பதே புலிகளின் கொள்கையாக இருந்தது.

    இங்கு நடக்கும் போராட்டங்கள் தமிழருக்கும் சிங்களவருக்குமான போராட்டமாக இருந்து , அது பிரபாகரனுக்கும் சிங்களவருக்குமான போராட்டமாக மாறியது.

    பிரபாகரன் மற்றும் புலிகள் தமது பலத்தை மட்டுமே நம்பினார்கள். அடுத்தவன் பலத்தை நினைக்கவே இல்லை. தம்மை பலப்படுத்த புதிய சிங்கள தலைமைகளை உருவாக்க வழியமைத்து தலைவர்களைக் சாகடித்தால் அது தமக்கு சாதகமாக இருக்கும் என்றே நம்பினர். இதையே ராஜீவ் கொலையூடாகவும் செய்தனர்.

    இதற்கு இவர்கள் ஏனைய தமிழ் இயக்க குழுக்களின் தலைமைகளை அழித்ததை முன் உதாரணமாகக் கொண்டிருக்கலாம். இயக்க முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டதும் அவ் இயக்கங்கள் சிதறிப் போயின. அவை அழியவில்லை. அந்த நேரத்துக்காக காத்திருக்கின்றன.

    புளொட் செயலதிபர் தோழர். உமா மகேஸ்வரனின் (முகுந்தன்) எண்ணங்களை இங்கே பதிக்க இது சரியான நேரம் என நினைக்கிறேன். அவர் தனி நாட்டு கோரிக்கை சரி வராது சுவிஸ் மாகாண ஆட்சிக் கொள்கையே இலங்கைக்கு சரியானது என எதிர்வு கூறினார். அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதையே நாம் இப்போது கண்கூடாகக் காண்கிறோம். அடுத்து தமிழீழ போராட்டம் நீண்டதொரு போராட்டம். அது உடனடியாக முடிவுக்கு வராது. புலிகளின் தாக்குதல்களால் தமிழர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அது அரச படைகளை பலப்படுத்த உதவப் போகிறது. நாம் நமது பலத்தை பெற்ற பின்னர் , சிங்கள மக்களோடு இணைந்த ஒட்டு மொத்த நாட்டிலும் ஒரே நேரத்திலான புரட்சியொன்றைக் கொண்டு வந்து அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிந்து சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். புலிகளோடு கைகோர்ப்பதை கூட அவர் சம்மதிக்காமல் இணைந்தவர்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்பதை சூசமாக சொன்னார். இவை என்னதான் இருந்தாலும் இந்தியாவை நாம் நம்பவே கூடாது. இந்தியாதான் எமக்கு எதிரியாக இருக்கப் போகிறது என்பது அவரது தீர்கதரிசனமாக இருந்தது.

    உண்மையிலேயே அவரது தீர்க்கதரிசனம் இன்று கண்கூடாகத் தெரிகிறது. இருந்தாலும் இயக்கத்தில் இருந்த மத்திய குழு உறுப்பினர்கள் சிலரது தவறான செயல்பாடுகள் , உட் கொலைகள் ஆகியவற்றோடு இந்தியாவின் சூழ்ச்சியால் தோழர். உமா மாலைதீவு தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்து இறுதியில் கொல்லப்பட்டது அநியாயமான ஒரு இழப்பு. இவற்றை அவர் தடுக்காதது அவரது தவறும் கூட…. ஆனாலும் அவரது எண்ணங்கள் தவறவில்லை என்பதே என் கணிப்பு. தோழர். உமா, தமது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சியை மட்டுமல்ல அரசியல் ஞானத்தையும் வளர்க்க T3S எனும் கல்வி நிலையம் ஊடாக அரசியல் அறிவுக்கான பயிற்சிகளையும் வழங்கினார். எந்த ஒரு போராளியும் தற்கொலை செய்து கொள்வதைக் கூட எதிர்த்தவர் அவர். போராட்டம் தமிழர்கள் வாழ்வதற்கேயன்றி சாவதற்காக அல்ல என்பதே அவரது தியரி.

    ஆனால் புலிகளின் தியரி, சாகடி அல்லது செத்து மடி என்பதேயாகும். இவற்றை வைத்துப் பார்த்தால் , அன்றும் – இன்றும் புலிகளிடம் அரசியல் ரீதியான எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை.

    புலிகள் மாத்தையா தலைமையில் ஆரம்பித்த அரசியல் கட்சியைக் கூட அழித்தது அவர்களது அரசியல் ஞானமற்ற தன்மையையே காட்டுகிறது. ஆகக் குறைந்தது வெளிநாடுகளில் இருக்கும் கல்விமான்களையாவது அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதைக் கூட நம்பவில்லை. இங்கு பேசுவோர் எல்லாம் வரையறை மீற முடியாது.அட்வைஸ் பண்ண முடியாது. உலக நீரோட்டம் குறித்த எந்த தேவையுமிருக்கவில்லை. ஆயுத பலத்தைத் தவிர அவர்களிடம் வேறு எந்த ஞானமும் இருந்ததில்லை.

    இன்றும் புலிகளிடம் நாம் காண்பது சிறு பிள்ளைத்தனத்தைத்தான். சிறு பிள்ளைகள் அடம் பிடிக்கும், முரண்டு பிடிக்கும் அல்லது அழும். இப்போதும் புலிகள் ஒரு புறம் ஆயுதங்களை கீழே வைப்பதையோ அல்லது சரணடைவதையோ விட்டு விட்டு கடைசி வரை போராடுவோம் என அடம் பிடிக்கின்றன. அத்தோடு மறுபுறம் ஐயோ இத்தனை அழிவுகள் நடக்கின்றன, யாரும் பார்க்க மாட்டீங்களோ என அழகையும் , ஓலமும்தான் கேட்கிறது.

    இரண்டு சண்டியர்கள் இப்போது கோதாவில் பிரபாகரனும் – மகிந்தவும் (பலம், கோத்தாபய + சரத்). இங்கே பலம் பெற்றவன் வெல்வான். பலமிழந்தவன் வீழ்வான். இடையில் அகப்பட்ட அப்பாவிகள் நசிகின்றனர். ரசிகர்கள் கை கொட்டி ஆரவாரம் செய்கின்றனர். உலக நாடுகள் கோதாவில் இருப்பவர்களுக்கு விட்டமின் கொடுக்கிறது.போர் முடிந்தால் ஆயுத வியாபாரம் தடைப்பட்டுவிடும்.எனவே சமாதானத்துக்காக அவர்கள் சார்பாக ஏதோ செய்வதாகவும் பாசாங்கு செய்கிறது. புலி ஆதரவாளர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள் போல கத்தி ஊரைக் கூட்டுகிறார்கள். மோட சிங்களவன் ஒருபுறம் மண்டையையும் பாவித்து, மறுபுறம் செவிடனாக தன் போக்கில் நடந்து கொண்டேயிருக்கிறான்.

    புலிகளின் பரப்புரைகளின் படி அரசால் கொல்லப்பட்ட இளைஞர்களை புளொட்டும் ஈபீஆர்எல்பும் சந்தித்து வந்திருக்கிறார்கள். பிரித்தானிய அமைச்சர் புறூஸ் புலிகளின் அகதி முகாமை பார்த்த பின் இடைத் தங்கல் முகாம் குறித்த பரப்புரைகள் பொய்யானது என தெரிவித்துள்ளார். இவை எல்லாம் அவரோகனமாக நடக்க , புலி ஆதரவாளர்களோ சிறைப்பட்டு இருக்கும் புலித் தேவனும் இளந்திரையனும் உயிரோடிருக்கிறார்கள் என்பதை பேச வைத்து வானோலி பேட்டி எடுத்து போட்டு காட்டி மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள்? ஆயிரக் கணக்கில் மக்கள் கொல்லப்பட, புலித்தேவனும் இளந்திரையனும் இருக்கிறார்கள் எனும் ஒரு சிறு விடயத்தை காட்டி சைக்கிள் கேட்ட குழந்தைக்கு ஐஸ்கிறீம் கிடைத்தது மாதிரி சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும் இவர்கள் செய்வது சிறுபிள்ளைத்தனம் என்பது உண்மைதானே?

    Reply
  • Rohan
    Rohan

    ஐயகோ ஐயகோ எங்கள் மாற்றுக கருத்து தோழர்கள் எல்லாரும் சேர்ந்து இளந்திரையனைக் கொன்று அவருக்கு அந்தியேட்டியும் செய்து விட்டோம். எங்கிருந்து முளைத்தார் இந்த புது இளந்திரையன்!

    Reply
  • chandran.raja
    chandran.raja

    தலைவர் எதைசெய்தாலும் ஒரு திட்டத்துடன் தான் செய்வார். இது குறிப்பாக புலம்பெயர் தமிழரிடம் பெயர் எடுக்கும். செத்தவன் எழும்பி வருவதும் எழும்பிவருபவன் செத்துபோகிறதும் அவர் நிகழ்சிநிரலில் சாதாரணமாவை. நாளை தலைவர் சயினட்டை கடிச்சு தற்கொலை செய்து கொண்டாலும் “தலைவர் திட்டத்தோடு தான் தற்கொலை செய்து கொண்டார்” என தமக்குதாமே சமாதானம் செய்து கொண்டு தப்பப்போகும் சமூகம் புலம்பெயர் தமிழ் சமூகம்.

    Reply
  • padamman
    padamman

    இவ்வளவு காலமும் பங்கர் வெட்டிக்கொண்டு இருந்திருக்கின்றர் இளந்திரையன் இப்போ வெட்டஇடம் இல்லாதால் வெளியே வந்துள்ளர் போலும் மதவாச்சியில் நிறைய இடம் இருக்கின்றது.

    Reply
  • thurai
    thurai

    //எங்களின் விடுதலை சித்தாந்தம் என்பது இன்று உலகத் தமிழர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்ற //

    சிங்கள இராணுவத்தை போரில் மட்டும் வெல்வதே புலிகளினதும் புலத்துத் தமிழரினதும் விடுதலைச் சித்தாந்தம். ஈழத்தமிழரின் விடுதலை என்பதும், புலிகழும் இரு துருவங்கள்.

    தமிழரின் அழிவில் வாழ்பவர்களிற்கும் விடுதலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

    துரை

    Reply
  • mani
    mani

    நண்பர்களே !
    உங்களுக்கு விடுதலை புலிகளோடு சண்டை என்றால் வைத்துக் கொள்ளுங்களேன். அதற்காக ஏன் தமிழ் இனத்துக்கு எதிராகச் செயற்படுகிறீர்கள்? நீங்கள் யார் என்று தெரிய வந்தால் ஒரு தமிழனும் உங்களை மன்னிக்க மாட்டான்.

    Reply
  • palli.
    palli.

    அது சரி இந்த ஆறு மாத காலம் தாங்கள் இதை சொல்ல தான் ரகசிய பயிற்ச்சி எடுத்தீர்களா?? தயாமஸ்றர் தங்களின் நிலை பற்றி கவலையாக சொன்னதாக கொழும்பு செய்திகள் சொல்லும் போது உயிருடன் இருப்பதா இல்லையாஎன சந்தேகபடும் தாங்கள் வந்து இப்படி ரசாயன குண்டை எங்கள் மீது வீசி அதிர்ச்சி ஆக்கி விட்டீர்கள். ஏதாவது ஒரு பதவி தாங்களுக்கு கொழும்பில் காத்திருக்கும் என நினைக்கிறேன் முயற்ச்சி செய்து பாருங்கோ. (உன்மையில் இருந்தால்)

    Reply
  • thurai
    thurai

    //நண்பர்களே!உங்களுக்கு விடுதலை புலிகளோடு சண்டை என்றால் வைத்துக் கொள்ளுங்களேன். அதற்காக ஏன் தமிழ் இனத்துக்கு எதிராகச் செயற்படுகிறீர்கள்? நீங்கள் யார் என்று தெரிய வந்தால் ஒரு தமிழனும் உங்களை மன்னிக்க மாட்டான்//mani

    தமிழினத்திற்கு எதிராகச் செயற்பட்டதால்தான் உலகில் புலிகள் தடைசெயயப்பட்டுள்ளனர். உலகத்தைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தலால் அல்ல. 30 வருட குத்தகைக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள் புலிகள்.

    ஈழத்தமிழரை கொன்றவர்கழும், சிங்களவ்ர்களிற்கு பலியாகக் கொடுப்பவர்கழும் புலிகளேயாகும். தமிழினத்திற்கு எதிராக விடுதலை என்னும் பெயரால் செய்ற்பட்டு தங்களை வளர்ப்பவர்களே புலிகள். யாரை யார் மன்னிக்க மாட்டார்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

    துரை

    Reply
  • accu
    accu

    இளந்திரையனிடம் இந்தக் கேள்வியையும் கேட்டிருக்கலாமே!
    கிளிநொச்சியில் ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டால் தெற்க்கில் நூறு கட்டிடங்கள் தரைமட்டமாகும் என பாலகுமார் சொன்னார். எமது மண்ணில் ஒரு அங்குலமேனும் சிங்கள இராணுவத்திடம் இழக்கமாட்டோமென தீபன் வீரம் பேசினார். (தீபன் இருக்கிறாரா? றோகன்தான் சொல்லவேணும்) மடுவுக்குள் இலங்கை இராணுவம் வந்தால் நாம் மதவாச்சிக்குள் நிற்ப்போம் என நீங்களும் கூறினீர்களே! இப்போ துண்டு அளவு நிலத்தில் அப்பாவி மக்களை அடைத்து அதன் நடுவில் தலைவரை விட்டு (தலைவர் எங்கே? றோகன்தான் சொல்லவேணும்) உங்களை நம்பியிருந்த மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இறந்த மக்களை ஒழுங்காக கணக்கெடுத்து அந்தக் கணக்கை காட்டி புலன்பெயர்ந்த தமிழர்களையும் புலம்பெயர்ந்த தமிழ் தெரியாத தமிழர்களையும் கொண்டு உலகநாடுகளின் தலைநகரமெல்லாம் ஒப்பாரிவைக்க வைக்கிறீர்களே உங்களுக்கு மானரோசமில்லையா? இப்பொழுதாவது உண்மையை ஒத்துக்கொண்டு உங்கள் கைகளை தூக்கிக்கொண்டு பெரிசுகளெல்லாம் வெளியே வந்தால் எஞ்சியிருக்கிற குழந்தைப் போரளிகளும் அப்பாவி மக்களும் தப்புவார்கள் அல்லவா?

    //ஐயகோ ஐயகோ எங்கள் மாற்றுக கருத்து தோழர்கள் எல்லாரும் சேர்ந்து இளந்திரையனைக் கொன்று அவருக்கு அந்தியேட்டியும் செய்து விட்டோம். எங்கிருந்து முளைத்தார் இந்த புது இளந்திரையன்!// றோகன்.
    இளந்திரையனுக்கு புலன்பெயர் புலியும் சேர்ந்துதான் அந்தியேட்டி செய்தது. இளந்திரையன் மட்டக்களப்பை சேர்ந்தவர் அவருக்கும் முதலமைச்சர் பிள்ளையானுக்கும் தொடர்பு உண்டென்றும், இளந்திரையன் அரசாங்கத்தின் உளவாளியாகச் செயல்ப்பட்டவர் அதனால்தான் மரணதண்டனை கொடுக்கப்பட்டது என்றும் கூறி துரோகியக்கிய புலன்பெயர் புலிகளை நான் சந்தித்தனான்.

    Reply
  • murugan
    murugan

    இளந்திரையன்தான் கிளிநொச்சி வீழ்ந்ததற்கு காரணம் என சொல்லி சனங்களை கொண்டு அடிப்பித்து கொன்றதாக தீவிர புலியாதரவாளர்கள் தான் எனக்கு சொன்னார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வன்னிராஜ்யம் இழக்கப்பட்டாலும் தமிழ்மக்களால் எமக்கு “விசா” மறுக்கப்பட்டாலும் எமது வெறிகுணத்தை நாம் இழக்கப் போவதில்லை. அவையெல்லாம் எம்மோடு உடன்பிறந்தவை. எமது முப்பது வருட தலைவரின் சுயமாய் தோன்றிய சிந்தனையில் எப்படியெல்லாம் தமிழ்மக்களின் ஐக்கியத்தை தொலைத்தடித்தோம். தமிழ்மக்களுக்கு பாரம்பரியமாக இருக்கக்கூடிய விருந்தோம்பல் பழக்கங்களைக்கூடா முறையடித்து ஒருவருக்கு ஒருவர் விசுவாசிக்காத மாதிரி பிரித்து வைத்ததை இன்னும் முப்பது வருடத்திற்கு தமிழ்மக்கள் மறக்கமாட்டார்கள்.
    இதெல்லாம் எமது தேசியத்தலைவரின் தீர்கதரிசனத்தால் தான்.அப்படித்தானே? இளம்திரையன்.

    Reply
  • kanakaratnam
    kanakaratnam

    நேற்று இவர பெரிசுபடுத்தி பேட்டி கொடுக்க வைக்கினம். இண்டைக்கு அவருக்கு காயம் எண்டு அறிக்கை விடுகினம். பெரும்பாலும் நிலைமையைப் பார்த்தால் நாளைக்கோ நாள்கழித்தோ அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அறிக்கை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

    Reply
  • padamman
    padamman

    இளந்திரையன் செல்விச்சில் படுகாயம்! நம்பமுடியவில்லை

    Reply
  • Valarmathi
    Valarmathi

    The people who comment over here have not an iota of concern over the sufferings of the destitute people in the war-torn regions of Eelam.

    These people are fighting over pro x anti LTTE stances. And what the hell do these people know aboout the liberation struggles of other such autocratic movements like LTTE?!

    Any person with some minimal basic knowledge of political movements will be aware of the autocratic nature of ‘liberation’ movements including the Bolsheviks under the direction of Lenin (forget Stalin). What the hell about other movements? The “Hamas” and the “Hizbullah”, the “Communist Party of Vietnam” under the direction of HO – CHI – MIN that struggled against the US invasion?

    Can these people mount a criticism against the above said movements and compare it with LTTE?!

    I feel it’s absolutely dishonest about this tirade against LTTE in the present context of a combined assault against the Eelam Tamils by the Sinhala Chauvinist government and their Indian and Chinese accolades

    Sorry for the non – tamil register over here

    But let people try to come over their own “ideological bubbles” and crass prejudices to combine efforts to stop the political impasse.

    Sorry for the intervention …

    valar …

    Reply
  • மாயா
    மாயா

    நேற்று இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த இளந்திரையன் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

    அவருடன் கடற்புலிகளின் இரண்டாம் தரத்திலுள்ள செழியனும் கொல்லப்பட்டுள்ளார்.

    இளந்திரயனை பலிக் களத்துக்கு அனுப்புவதற்கு முன் அவுஸ்திரேலிய வானோலி ஊடாக பேட்டியளிக்க வைத்து, அவர் உயிரோடு இருப்பதாக செய்திகளை பரப்பி விட்டு இன்று அவர் செல்வீச்சில் படுகாயமடைந்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இதில் ஏதோ மர்மம் தெரிகிறது.

    இதோ அவரது இறுதி நேர் காணல்
    http://www.zshare.net/download/59855084a1c67afb/

    Reply
  • palli.
    palli.

    ஜயோ ஜயோ பல்லி சொன்னால் யார் கேக்கிறார்கள். பல காலத்துக்கு முன்பே மடிந்து போன (அழிக்கபட்ட) பேச்சாளர் நேற்று பேசி இன்று மறுபடியும் தூங்கி விட்டாரோ. படுபாவிகளா? கடசியில் ஆவிகளை கூட உங்கள் சதிராட்டத்தில் பங்கு கொள்ள செய்வது தேவையா?? ரோகனுக்கு ஒரு சின்ன செய்தி மிக விரைவில் யோகி அல்லது இளம்வளுதி ஏதாவது ஒரு ஊடகத்துக்கு பேட்டி கொடுக்கலாம். சிலவேளை மாத்தையா கூட
    இன்றய அரசிசின் செல் வீச்சில் மடிந்து விட்டார் என எம்மீது புலிகள் கல் வீசலாம். இப்படி எத்தனை திருகு தாளங்களை இந்த 30வருடத்தில் பார்த்து விட்டோம். உங்களை (புலி புண்ணாக்குகளை) புலிகள் ஏமாத்துவது ஏற்று கொள்ள கூடியதே. ஆனால் அதை நம்பி வந்து எமக்கு சாபம் கொடுப்பதும் சாம்பல் தூவுவதும் சின்ன பிள்ளைதனமாய் இல்லை. நம்புங்கையா நாங்க நல்லவங்கோ நல்லவங்கோ.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி புலிகள் றோகன் போன்றோருக்கு கொடுத்த சந்தோசத்தைக் கூட அற்ப சந்தோசமாக்கிட்டாங்களென்று எனக்கும் தான் ரொம்பக் கவலையாகக் கிடக்குது. ஆனாலும் எனி மாத்தையா, யோகி போன்றோரின் பேட்டிகளையும் வெகு விரைவில் ஒலி பரப்புவார்கள் என்று றோகன் போன்றோர் நம்பியிருக்கலாம் தான்.

    Reply
  • Rohan
    Rohan

    சரி பார்த்திபன் – வாய்க்கு ஏதோ அவல் கிடைத்திருப்பதாகப் படுகிறது. ஒரு ஆதாரமும் இல்லாமல் வதந்தி கட்டிய ஆள் நான் இல்லை. இளந்திரையனுடன் எதோ 300 பேரை மண்டையில் போட்டதாகவும் பலர் பேசிக் கொண்டதும் இங்கு நடந்தது. இங்கு நான் புலிக்குப் பல்லக்குத் தூக்க வரவில்லை. மாற்றுக் கருத்து என்று சொல்லிக் கொண்டு சாகிற தமிழனைப் புலியின் கணக்கில் எழுதி புல்லரிக்கிறார்கள் சிலர்.

    இளந்திரையன் செத்தார் – இருந்தார் – எனக்கு என்ன வந்தது? முள்ளிவாய்க்காலில் தேவையில்லாமல் செத்து புள்ளிவிபரத்துக்கும் பெறுமதியில்லாமல் போகிறானே தமிழன் – அவனுக்காகத் தான் என் மனசு துடிக்கிறது. ஏதோ நான் சொல்லி உங்களை என்ன மாற்றவா முடியும்? …

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    றோகன் நீங்கள் தான் வாய்க்கு அவல் கிடைத்தது போல் இங்கு கேள்வி கேட்க வெளிக்கிட்டீர்கள். இளந்திரையன் புலிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதை புலத்திலுள்ள இளந்திரையனின் இரத்த உறவுகள் தான் உறுதி செய்தார்கள் புலிகளை எதிர்ப்பவர்களல்ல. உண்மை அப்படியிருக்க புலிகள் இளந்திரையன் உயிரோடிருப்பது போல் ஒரு மாயையை ஏற்படுத்தி விட்டு மறுநாளே சானகடித்து விட்டார்கள். இதை உங்களைப் போன்றவர்கள் ஏற்றுக் கொள்ளவதால் இன்னும் இப்படியான புலுடாக்களை புலிகள் செய்து கொண்டேயிருப்பார்கள்.

    இங்கே மக்கள் அழிவதை எவரும் நியாயப்படுத்தவில்லை. அதற்காகத் தான் நாம் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகளை ஒன்று ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அரசிடம் சரணடையுங்கள் அல்லது மக்களை வெளியேற விட்டுவிட்டு இராணுவத்துடன் நேரடி மோதல் நடத்துங்கள் என்று கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் இலட்சக் கணக்காக மக்கள் அழிந்தாலும் பறுவாயில்லை விடுதலைப்புலிகள் மட்டும் காப்பாற்றப் பட வேண்டுமென்றல்லவா தொடர்ந்தம் புலத்தில் குரல் கொடுத்த வருகின்றீர்கள். முதலில் நீங்கள் தெளிவான ஒரு முடிவிற்கு வாருங்கள் உங்கள் தேவை மக்களா? விடுதலைப்புலிகளா? என்று…….

    Reply
  • மாயா
    மாயா

    இந்த பேய் சும்மா போகாது. அது நரபலி எடுக்க வந்த (பிரபா) பேய். ….சூரியத் தேவன். முழு தமிழினத்தையும் எரிக்க வந்தது. யார் செய்த புண்ணியமோ, ஓடித் தப்பினவனும் , வெளி நாடு போனவனும் மிஞ்ச , சுத்தி நிக்கிற எல்லாத்தையும் மட்டுமில்ல , புலத்தில நல்லா இருக்கிறர்களுக்கும் அந்த ஆவியை ஏத்திப் போட்டுத்தான் போகும்.

    உங்கள் தேசியத் தலைவன் தேசத்தையே சுடு காடாக்கிப் போட்டு போவார்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலிகள் கடவுளுக்கு சமமானவர்கள். இருக்கிறதை இல்லாமல் ஆக்கவும் , இல்லாததை இருக்கிறதாக ஆக்கவும் கூடிய வல்லமை கடவுளுக்கு அடுத்தாக புலிகளுக்கு மட்டுமே உண்டு.

    சிறீலங்கா தமிழரின் நல்ல காலம் புலிகளின் அழிவில்தான் பிறக்கப் போகிறது. புலவர்கள்தான் பொய் சொல்வார்கள் என்பார்கள். புலியுமா?

    Reply
  • மகுடி
    மகுடி

    நண்பர்களே ஏன்தான் உங்களுக்குள் இத்தனை குழப்பம் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் அவர்கள் சில தினங்களுக்குமுன் வானெலியில் பேசினாரா? அவரது குரலில் பேசுவதற்கு எவ்வளவு முயற்சி எடுக்கப்பட்டது என்பதை ஏன் உங்களால் அவதானிக்க முடியவில்லை? அவர் உள்ரகசியங்களை கருணா அம்மானுக்கு வளங்கியதாலும் அதனால்தான் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதாகவும் கதை புனையப்பட்டு ஒருசில மாதங்களுக்கு முன்பே அவரது கதை முடிக்கப்பட்டதாக புலி ஆதரவாளர் ஒருவர் சொன்னார் கூடவே அவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பதையும் நசுக்காக சொல்லி இப்போதைய தோல்வியில் திருப்திபட்டுக்கொண்டார். மகுடி

    Reply
  • palli.
    palli.

    ரோகன் நாம் திருந்தி 25வருடத்துக்கு மேல் ஆகி விட்டது. ஆக அந்த கஸ்றத்தை தமக்கு நாம் கொடுக்கவில்லை. எனக்கு ஒன்று மட்டும் புரியவில்ல. வன்னியில் மக்கள் அழிவதுக்கும் புலி கொடி போராட்டம் புலம் பெயரில் நடப்பதுக்கும் அல்லது தலையின் படத்தை தலைக்கு மேல் தூக்குவதுக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?? மூதேவி போனால் சீதேவி தானாக வீட்டுக்குள் வருவா என சொல்வார்கள். அது போல் புலி போனாலே எம்மவர்க்கு புதுமைகள் (புதுவாழ்வு) தானாகவரும்.

    முள்ளிவாய்காலில் மக்கள் இறப்பதுக்கும் திரையன் அவுஸ்ரேலியாவுக்கு பேட்டி கொடுப்பதுக்கும் என்ன வேண்டுதல். புலம் பெயர் தமிழரே அனைவரும் ரோட்டில் வந்து கும்மியடியுங்கள் என பளய பொலிஸ்காரன் கத்துவதும். இடைகாட்டார் இளயோரின் படிப்பை கெடுக்க விரதம் இருப்பதும் பாரிசில்………..
    இப்படி பலர் கட்டிய வீட்டை முடிப்பதுக்கு பணம் சேர்க்க துடிப்பதும் முள்ளிவாய்க்கால் பிரச்சனையை தீர்க்கவா?? சம்பந்தரே திருந்த போகும் நேரத்தில் தாங்கள் மட்டும் ஒரு பேப்பர் போல் தடுமாறி வருவது தமிழனாய் அல்ல மனிதனாய் கவலையாக உள்ளது.

    Reply
  • மாயா
    மாயா

    இளந்திரையன் கொல்லப்பட்டதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.

    Reply