இலங்கையின் வடக்கே முள்ளிவாய்க்கால் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளரை பீபீஸி தமிழோசை பேட்டி கண்டிருந்தது. பீபீஸி இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த அப்பேட்டியின் விபரம் வருமாறு:
பீபீஸி தமிழோசை: இன்று (நேற்று 10ஆம் திகதி) 106 சிறுவர்கள் உட்பட 378 கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படமாட்டாது, வான்வழித் தாக்குதல்கள் இடம் பெறமாட்டாது என்று அரசாங்கம் கூறியிருந்தும் இத்தகைய செய்தி வந்துள்ளது, இது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
கோத்தாபய ராஜபக்ஷ: புலிகளின் கடைசிக் கட்டம் இது. தாங்கள் தப்ப எந்தத் தில்லுமுல்லுகளையும் அவர்கள் இந்த நேரத்தில் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது உள்ள ஒரே வழி, அரசாங்கத்தின் மீது அவதூறைச் சுமத்துவது அல்லது சர்வதேச அழுத்தத்தைக் கொண்டு வருவது, அவ்வளவுதான். அதனால் தான் அவர்களின் பிரச்சார இயத்திரம் இப்படியான புரளிகளைக் கிளப்பி 350, 200, 2000 என்று கதை கட்டி விட்டுள்ளது. எனவே இது விடுதலைப் புலிகளின் ஒரு பிரச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
பீபீஸி தமிழோசை: 378 பேரின் சடலங்கள் வந்துள்ளன, அதில் 106 சிறுவர்கள், 1122 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசாங்க மருத்துவரே தெரிவித்துள்ளாரே?
கோத்தாபாய: அவர் அரசாங்க மருத்துவர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் இருப்பது புலிகளின் தலைமைப்பீடமும், போராளிகளும், ஆயுதங்களும் செறிந்துள்ள மூன்றரை சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய மிகச் சிறிய இடம். இதற்குள் இருந்து கொண்டு அவரால் முற்று முழுக்க உண்மையைப் பேசிவிட முடியும் என்று புத்தியுள்ள எவராலும் நம்ப முடியாது.
பீபீஸி தமிழோசை: நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள். புலிகள் ஒன்று சொல்கிறார்கள். இருவரும் சொல்வதை விட, தனிப்பட்ட முறையில் அங்கு சென்று பார்த்து உண்மையைச் சொல்ல செய்தியாளர்களை நீங்கள் அங்கு அனுமதிப்பது தானே? ஏன் தடுக்கிறீர்கள்.
கோத்தாபாய: செய்தியாளர்கள் உண்மையைச் சொல்ல நாங்கள் ஒன்றும் தடுக்கவில்லை. புலிகள் பகுதியிலிருந்து தப்பி வந்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கும் முகாம்களுக்குப் போய்த் தனிப்பட்ட முறையில் செய்திகளை அறிய வழிவிட்டிருக்கிறோம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிற இடத்தை விட்டு, சிறிதளவு பேர் இருக்கிற இடத்தில் போய் உண்மையை அறியப் போகிறேன் என்கிறார்கள்.
பீபீஸி தமிழோசை: அந்த முகாம்களுக்குக் கூடப் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணத்தின் மூலம் தானே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சுதந்திரமாகப் போக அனுமதிக்கப்படுவதில்லையே.
கோத்தாபய: ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அங்கே என்ன திருவிழாவா நடக்கிறது? வேடிக்கை பார்க்க? அங்கே முக்கியமான வேலைகள் நடந்து கொண்டுள்ளன. அவை பாதிப்படைய அனுமதிக்க முடியாது. அங்கு இயங்கும் சர்வதேச உதவி அமைப்புகள் கூட குழப்பம் வேண்டாம், அனைத்தையும் ஒழுங்கு செய்யுங்கள் என்கின்றன. அதனால் தான் நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம். முகாமுக்குப் போனவுடன் சுதந்திரமாகப் பேச அனுமதிக்கிறோம் என்று கூறியிருந்தார்.
Thambiah Sabarutnam
இந்த செய்தியின் ஒரே மூல கர்த்தா வைத்தியர் ஷன்முகராஜா முல்லைத்தீவை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். படிக்கும்போதே புலியில் சேர்ந்தவர். இந்திய இராணுவத்திற்கு எதிராக பல தாக்குதல்களை தொடுத்தவர். இந்திய இராணுவத்தினுடனான மோதலில் பலத்த காயமடைந்தவர். இன்னமும் பல தழும்புகள் அவர் உடலில் உண்டு. பின்னர் முல்லைத்தீவு பகுதியில் அரச வைத்தியராக பணியாற்றியதோடு புலிகளின் மருத்துவ துறைக்கான சகல உதவிகளையும் செய்தவர்.யாழ் பலகலைக்கழக மாணவர்களுக்கு இவர் புலி என்பது நன்கு தெரியும்
தன பிள்ளைகளை படிபித்து கொண்டு எம் பிள்ளைகளை மாவீரராக்கி வெளி நாட்டு புலன் பெயர்ந்த மக்குகளிடம் கோடி கோடியாக பணம் சேர்த்து தன பிள்ளைகளை வெளி நாட்டுக்கு அனுப்பி தானும் நீச்சல் தடாகம் முதல் எல்லாம் கட்டி நல்லாக திண்டு குளித்து நீந்தி அனுபவித்து விட்டு இப்போ தனது பாதுகாப்புக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தானே இன்னொரு பக்கத்தில் இருந்து ஷெல் அனுப்பி கமெராவும் வீடியோவும் ரெடியாக படம் எடுத்து பொய் பிரச்சாரம் மூலம் தன்னை காப்பாத்த யாராவது வெளிநாட்டு அல்லது ஐ.நா.காரர் வந்தால் அவர் காலில் சரண் அடைந்து ராஜபக்சேவிடமிருந்து தப்பலாம் என்று பிரபாகரன் பிளான் பண்ணி இருக்கிறார். ஒன்றும் சரிவராடி ரெட்குரோஸ் காரரை தாக்கி விட்டு பழியை அரசாங்கத்தில் போட்டு விட்டு பாக்க வருகிற ரெட்குரோஸ்காரிடம் சரண் அடைவது தான் கடைசி வழியாம்.
chandran.raja
சபா!
பிரபாகரன் தலைமையில்-தீர்கதரினத்தில் சர்வதேசத்தின் ஆதரவை எப்படி வென்றிடுப்பது என்பதை பழையசெய்திகளை விட்டு கடைசிச் செய்தியாக பார்தாலும் அல்லப்பிட்டிகொலைகள் வங்காலை மாட்டின் மூர்த்தியின் குடும்பத்தின் கொலைகள் செஞ்சோலை மாணவர் மாணவிகள் விமானக்குண்டு வீச்சுக்கு பலியாவதற்கு திட்டம் தயாரித்தது பிரான்சு தொண்டுஊழியர்கள் கொலைகள் இப்படியே அடிக்கிக்கொண்டேபோகலாம். உண்மையிலே சிங்கள இராணுவத்தால் சில சம்பவங்கள் நடந்தேறினாலும் அது பிரபாகரன் கணக்குகொப்பியிலேயே வரவு வைக்கப்படும்.
சர்வதேசத்திற்கு மதிப்பளிப்பவர்களாக இருந்தால் அவர்கள்கள் சிறுபிள்ளைகளை படையில் இணைப்பதையும் தற்கொலை தாக்குதலையும் என்றோ நிறுத்தியிருப்பார்கள். இதுதான் அவர்களின் பலமும்-பலயீனமும்.இது தமிழ் மக்களுக்கு முழுமையாக புரியமறுத்தாலும் சர்வதேசம் முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார்கள். தனிஈழகனவு என்ற வக்கிரபுத்திக்கும் மக்களை நேசித்தல் என்றஅரசியல் பணிக்கும் உள்ள வேறுபாட்டு வித்தியாசங்களை அனுபவங்களை இலங்கை இந்தியாவின் வரும்காலப் போராட்டத்திற்கு புலிகள் விட்டு செல்லுகிறார்கள். தூக்கிய பாறாங்கல்லுக்குள் நசிபட்டுசிதைந்து போவது தவிர்கமுடியாதது. இதற்கு தமிழ்முஸ்லீம் மக்கள் மட்டுமல்ல சிங்களமக்களும் கூடியவிலையைச் செலுத்தி விட்டோம்.
pothu
//உண்மையிலே சிங்கள இராணுவத்தால் சில சம்பவங்கள் நடந்தேறினாலும்… //
இதற்கு மேல் நீங்கள் எவ்வளவு உண்மை சொல்பவர் என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
சபா எழுதியது
//இப்போ தனது பாதுகாப்புக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை தானே இன்னொரு பக்கத்தில் இருந்து ஷெல் அனுப்பி கமெராவும் வீடியோவும் ரெடியாக படம் எடுத்து பொய் பிரச்சாரம் மூலம் தன்னை காப்பாத்த//
புலிகளின் நம்பிக்கை துரோகத்தை மறுக்க முடியாது. ஆனால் அரசின் அப்பட்டமான இனப் படுகொலைகளை மூடி மறைக்க முயல்வது அயோக்கியத் தனம்.
பார்த்திபன்
//புலிகளின் நம்பிக்கை துரோகத்தை மறுக்க முடியாது. ஆனால் அரசின் அப்பட்டமான இனப் படுகொலைகளை மூடி மறைக்க முயல்வது அயோக்கியத் தனம்.-pothu //
இராணுவத் தாக்குதல்களிலும் மககள் இறப்பதை எவரும் இல்லையென்று கூற வரவில்லை. ஆனால் புலிகளும் தம்மக்கள் மீதே செல் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கள் நடாத்தியிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய பிபிசி செய்தியில் கூட முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு பல மக்கள் துப்பாக்கிச் சூடடுக் காயங்களுடன் வந்திருந்ததை வைத்தியரே உறுதிப்படுத்தியிருந்தார். இவை எப்படி இராணுவத்தால் ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதையும் கொஞ்சம் சிந்தியுங்களேன்.