இலங்கையின் வடக்கே தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும் எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாகவும் கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகளால் ரொறன்ரோ நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தமிழர்களின் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கார்டினர் நெடுஞ்சாலை இரவு முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என பொலிஸார் 7:50 மணியளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வன்னியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கனடிய அரசாங்கம் உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கும் வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான கோர்மி தேவா தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ரொறன்ரோவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும், நகரின் முக்கிய பாதையான கார்டினர் நெடுஞ்சாலையின் போக்குவரத்து இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக செயலிழந்திருந்தது.
மாயா
இன்னமும் வவ்வால்கள் பனை மரத்தை காண இல்லை. அது மட்டுமே குறைச்சல்?
நண்பன்
பனை இல்லாத குறையை றோட்டுகளில குந்தி சரி செய்யினம்.
பார்த்திபன்
//பனை இல்லாத குறையை றோட்டுகளில குந்தி சரி செய்யினம்.- நண்பன்//
அப்ப வெளவால்கள் இல்லாத குறையைப் போக்க எனி தலைகீழாய் நிற்பினமோ??
பார்த்திபன்
மூளை செயலிழந்தவர்களினால் ரொறன்ரோவில் போக்குவரத்து செயலிழப்பு என்று தலையங்கம் தீட்டியிருக்கலாம்.
Sumathy Rupen
நேற்றைய போராட்ட நேரத்தில் நான் ரொறொன்டோ நகரப் பகுதியில்தான் நின்றேன். போலீஸ் கார்களின் சைரன் அதிகம் கேட்ட வண்ணமே இருந்தன. நேற்றைய போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் தொடர்ந்து தமிழ் வானொலிகளிலும் facebook போன்றவற்றிலும் உடனே போராட்டப் பகுதிக்கு வாருங்கள் நாங்கள் நல்ல ஒரு திட்டம் வைத்திருக்கின்றோம் என்று அறிவித்து மக்களை அங்கே வரவழைத்தார்கள் என்று கூறப்படுகின்றது. இன்று காலை ரொறொன்டோ தொலைக்காட்சியில் தொடர்ந்தும் நகரப்பகுதியில் சாலை மறியல் பற்றிக் கூறிய வண்ணமே இருந்தார்கள். பல கனேடியர்களின் போக்கு வரத்துத் தடைப்பட்டதால் சினம் கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.
கனேடியக் குடிவரவுத் திணைக்களம் இத்தனை தொகையான பயங்கரவாதிகளை அகதியாக ஏற்றுக்கொண்டிருக்கின்றது என்று கனேடிய அரசு தற்போது கனேடியக் குடிவரவுத திணைக்களத்திற்கு மிகவும் அழுத்தம் கொடுப்பதாக கனேடியக் குடியரசுத் திணைக்களத்தில் வேலை செய்யும் ஒரு தமிழர் கூறினார். கடந்த வருடங்களில் பல தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இனி அகதி அந்தஸ்த்து கோரும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து அல்லது கனேடிய குடிஉரிமை கொடுப்பது மிகவும் கடுமையாக்கப்படும் என்பது இவரது கருத்;து.
அதே நேரம் விடுதலைப்புலிகள் இப்படி மொக்குத் தனமாக நடந்து தமது பெயரை மற்றைய நாடுகளில் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு நடாத்தப்படும் போராட்டம் என்றும், உணர்வு வசப்பட்ட மக்கள் பின்விளைவுகளை யோசிக்காமல் செயல்பட்டு விடுதலைப்புலிகளின் பெயரை நாசமாக்குகின்றார்கள் என்றும் ஒருவர் உணர்சிவசப்பட்டுக் கூறினார்.
எது எப்படியோ தற்போது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் விடுமுறையில் உள்ளன. பலர் வேலை இழந்து வீட்டில் இருக்கின்றார்கள். காலநிலையும் நன்றாக உள்ளது. எனவே இவர்களது வாழ்க்கை வழமைக்குத் திரும்பும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும். ஆனால் ஒன்று மட்டும் எனக்குப் புரியாமலேயே உள்ளது. இதுவரை எமது மக்களைக் காப்பாற்றுங்கள் என்று குரல் கொடுக்கும் எந்தத் தமிழனும் விடுதலைப்புலிகள் சிறைப்பிடித்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சிறிய குரல் கூட எழுப்பாதது மக்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு உள்ளதா என்ற சந்தேகத்தையே எழுப்புகின்றது.
accu
இந்த வீதிமறிப்புப் போரட்டத்தால் உண்மையாகவே ரொரொன்ரோ ஆடித்தான் போய்விட்டது. வானொலிகள்,தொலைக்காட்சிகள்,பாரளமன்றம் என எங்கும் அதிர்வலைகள். வேலைத்தலத்திலும் இன்று இதுதான் பேச்சு. ஆனால் எல்லாம் எதிர்மறையாகத்தான் உள்ளது. கனேடிய மக்களின் ஆதரவை திரட்டுவதற்க்கு தொடங்கிய ஆர்ப்பட்டங்களும் ஊர்வலங்களும் எதிர்விளைவைத்தான் கொடுத்துள்ளது.
//அதே நேரம் விடுதலைப்புலிகள் இப்படி மொக்குத் தனமாக நடந்து தமது பெயரை மற்றைய நாடுகளில் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுப்பதற்காகத் திட்டமிட்டு நடாத்தப்படும் போராட்டம் என்றும், உணர்வு வசப்பட்ட மக்கள் பின்விளைவுகளை யோசிக்காமல் செயல்பட்டு விடுதலைப்புலிகளின் பெயரை நாசமாக்குகின்றார்கள் என்றும் ஒருவர் உணர்சிவசப்பட்டுக் கூறினார்.// சுமதி ரூபன்.
உணர்சிவசப்பட்டுக் கூறியவர் புலிகளைப்பற்றி பிழையான எண்ணத்தைக் கொண்டுள்ளார். அறிவுபூர்வமாய் எதையாவது செய்தால்த்தான் அங்கே பின்புலத்தில் புலிகள் இல்லையோ எனச் சந்தேகம் வரும். ராஜீவ் கொலை தொடங்கி மகிந்தாவை ஜனாதிபதி ஆக்கியது மாவிலாற்றில் ஆப்பிழுத்தது என எத்தனையோ புலிகளின் திட்டமிடல்களை பார்த்துவிட்டோம். இப்ப நடக்கிறதெல்லாம் அப்பம் சுட்டு முடிக்கெக்க மிஞ்சினதையெல்லம் ஒன்றாய் ஊத்திச் சுடும் சட்டியப்பம்தான்.