இலங்கையர்கள் 40 ஆயிரம் பேருக்கு இத்தாலியில் வேலை வாய்ப்புக் கிடைக்கவுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று விரைவில் செய்து கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையர்களுக்கு இன்னும் சில மாதங்களில் வேலை வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இத்தாலிய அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் சுகாதாரததுறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கைத் தாதியர் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு அங்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.
Anton
இது ஒரு சுத்த பம்மாத்து. இத்தாலியில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பா? இத்தாலிக்காரருக்கே அங்கு வேலையில்லை, இந்த லட்சணத்தில் நாற்பதாயிரம் இலங்கையருக்கா? யார் தலையில் யார் மிளகாய் அரைப்பது. இது ஒரு பக்கா பணமோசடி. ஏற்கனவே இதற்கான விசா வழங்கப்பட்டு நிறையப்பேர் இத்தாலிக்கு வந்து சீரழியத்தொடங்கி விட்டார்கள். தரங்கெட்ட தரகர்கள் மூலம் தலா இருபத்து ஐந்து லட்சங்கள் கறக்கப்பட்டு, ஒரு வருட இத்தாலி விசாவுடன் வந்து தற்சமயம் வேலையுமில்லாமல் செய்வதுமறியாமல் திண்டாடி, பக்கத்து நாடுகளில் அகதி அந்தஸ்த்து கோரி, அரசபதிலுக்காக காத்திருக்கும் அப்பாவிகளின் பெற்றோர்களின் கண்ணீர் இந்த ஏமாற்றுக்காரர்களை எப்படி தண்டிக்கப்போகின்றது.? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஏமாறும் பெற்றோர்களும் வட்டி கட்டிக்கொண்டே இருப்பர்கள். இதுதான் தலைவிதி. இதற்கு மட்டும் சாதி, மத,பேதம் எதுவுமே கிடையாது.
மாயா
இது சுகாதார துறையில் உள்ள வேலை வாய்ப்பு. சும்மா ஏறி வருவோருக்கான வீட்டு வேலை இல்லை என நினைக்கிறேன்.
அன்டன் ,நீங்கள் சொல்வது ஏஜன்சி மூலம் இடம் பெறுவது. இது அரசு மூலம் நடை பெறுவது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என நினைக்கிறேன்.
BC
Anton அண்ணா, தம்பி,
இங்கே நம்மவர் இருக்கும் நாடுகளிலும் வேலையில்லா பிரச்சனை நிறைய உள்ளது.அது தான் இங்கே முக்கிய செய்தி.ஆனால் எங்கடை ஆட்கள் பலர் வேலை செய்கிறார்கள்.