மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை மேலும் கிரமமாக்குவதற்கும் பலப்படுத்துவதற்குமான விசேட திட்டமொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க.வினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
முன்னர் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாள்வதற்கென இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. எனினும் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற செயற்பாடுகளை கையாளும் பொறுப்பு ஒரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
Thambiah Sabarutnam
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதில் ஐக்கிய தேசிய கட்சியே முன்னிக்கின்றது. இலங்கை வரலாற்றில் முக்கிய தீர்வு முயற்சிகளான, 1957ம் ஆண்டு பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம், 1987ல் செய்துகொள்ள்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம், 2000ம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கம் கொண்டுவந்த தீர்வுப்பொதி என்பனவற்றை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சியே முறியடித்து வந்துள்ளது. சுதந்திர இலங்கையில் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்து, இந்திய வம்சாவழி மலையக தமிழ்மக்களின் பிரஜாவுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்து, தனிச்சிங்கள சட்ட ஆலோசனையை முன்வைத்து, தமிழர்களுக்கு எதிரான இன வன்செயல்களை முன்னின்று நடாத்திவந்த பிரதான சிங்கள பேரினவாத கட்சி, ஐக்கிய தேசிய கட்சியே. இன்றும் கூட, ஒருபக்கத்தில் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என போலியாக சொல்லிக்கொண்டு, மறுபக்கத்தில் அதற்கான முயற்சிகளை ஐக்கிய தேசிய கட்சி சீர்குலைத்து வருகின்றது. அதற்கு சிறந்த உதாரணம், இனப்பிரச்சினை தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் தற்பொழுது கூட்டிவரும் சர்வகட்சி கூட்டங்களிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி ஒதுங்கியிருப்பதாகும்.
ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு தொடர்ச்சியாக பேரினவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தபோதும், தமிழர்களின் தலைமைகளாக ஆரம்பம் முதல் இருந்து வந்த கட்சிகளான தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, இரண்டும் இணைந்த தமிழர் விடுதலைக்கூட்டணி என்பன மட்டுமல்லாது, இன்றைய புலிகள்வரை அனைவரும் அந்த ஐக்கிய தேசிய கட்சியுடனேயே அரசியல் கூட்டு வைத்து வந்துள்ளன.