இலங்கையில் கரையமுள்ளி வாய்க்கால் பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் முக்கிய தளபதியான செழியன் பலியாகிவிட்டதாகவும் அதே போல விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் பலியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடற் புலிகளின் இரண்டாவது தளபதியான செழியன் கடற்படையினருடன் நடந்த பல மோதல்களில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு மார்ச் 27ம் தேதி கடற்படையினருடன் நடந்த சண்டையில் காயமடைந்திருந்தார். ஆனாலும் இப்போதைய போரிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந் நிலையில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் புலிகள் அமைத்திருந்த மண் அணையை கைப்பற்ற நடந்த மோதலில் செழியன் பலியானதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதே போல இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசையா இளந்திரையனும் படுகாயமடைந்துள்ளார் என்று கூறப்பட்டது. இந் நிலையில் அவரும் பலியாகிவிட்டதாகத் கூறப்படுகிறது. மட்டக்களப்பைச் சேர்ந்தவர் இளந்திரையன். விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இத்தகவல்களை இந்திய இணையத்தளங்களும் தெரிவித்துள்ளன.
thamba
kanakaratnam on May 10, 2009 6:44 pm நேற்று இவர பெரிசுபடுத்தி பேட்டி கொடுக்க வைக்கினம். இண்டைக்கு அவருக்கு காயம் எண்டு அறிக்கை விடுகினம். பெரும்பாலும் நிலைமையைப் பார்த்தால் நாளைக்கோ நாள்கழித்தோ அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அறிக்கை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை//
கனகரட்னம் நேற்று நீங்கள் எழுதியது இன்று நடந்துவிட்டது.
நண்பன்
புலிகள் ஏன் இன்னும் மெளனம்?
பார்த்திபன்
முன்பு ஊரிலே தேர்தல்களில் ஏற்கனவே இறந்தவர்களும் வாக்களிக்கிறவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பதான் ஏற்கனவே இறந்தவர் திரும்பவும் பேட்டி கொடுத்துவிட்டு இறக்கிறதைக் கேள்விப்படுகின்றேன்.
மாயா
நேற்று கூத்தாடிய சொந்தங்கள் நாளைக்கு துரோகி என்று சொல்வதா? இல்லை பங்கரின் குரல் என்று பட்டம் கொடுப்பதா என்று சிந்திப்பதில் ஏற்பட்ட மெளனம். ஏதோ பொய் சொல்ல கதை புனைகிறார்கள்?
மாயா
//பார்த்திபன் on May 11, 2009 10:27 pm முன்பு ஊரிலே தேர்தல்களில் ஏற்கனவே இறந்தவர்களும் வாக்களிக்கிறவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்பதான் ஏற்கனவே இறந்தவர் திரும்பவும் பேட்டி கொடுத்துவிட்டு இறக்கிறதைக் கேள்விப்படுகின்றேன்.//
தெலுங்கு படத்தை தமிழில டப் பண்ணுறது போல, புலிகள் ,இப்ப பழைய ஓடியோவை கேட்டு புதுசு போல மிமிக்கிரி செய்து ரிலீஸ் பண்ணினம். அதுக்கு அவுஸ்திரேலியாவில இருந்தல்ல ரீல் போகுது. சுத்துற இந்த ரீல் சிக்கிறதுக்கு காலம் கொஞ்சம்தான். இன்னும் எத்தனை நாளைக்கு இந்த சுத்தும் சுரண்டலும்……….. பாப்பம்.
Kusumbo
இது உங்களுக்குத் தெரியாதாக்கும். இளந்திரையன் ஏற்கனவே போட்டுத்தள்ளப்பட்ட விடையம் தெரியாதே. செத்தவனை எத்தனை தடவைதான் சாக்காட்டுவீர்கள். கருணாவின் படைக்கு செய்தி கொடுத்து உதவியதாகதான் போடப்பட்டாராம். கிழநொச்சி வீழ்ச்சிக்கு இளந்திரையன்தான் காரணமாம். விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கிறார்கள் புலிகள். வாழ்க புலியிசம்