பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சர்வதேச குற்றமாக அமையாது என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் யுத்தத்தினால் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத் தூபி அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சியை சர்வதேச சமூகம் பாராட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சகல பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரலாற்று காலத்தைப் போன்றே தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை சர்வதேச சமூகம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்படாவிட்டால் அது ஒரு தனிநாட்டை மட்டுமன்றி முழு உலகத்தையுமே பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Rohan
சரி தான் சில்வா மாத்தையா.
இருந்த ஒரு பாதுகாப்பும் போச்சு.
msri
நீதியரசர் இதை எந்தச் சட்டக்கோவைக்குள் னவத்துப் பார்த்தாலும் பரவாயில்லை! தேசிய சர்வதேசிய ரீதியில்> மகிநதா+கோத்தபாயா+குடும்பமும் அவர் கூட்டாளிகளும் அரச பயங்கரவாதிகளே!
நண்பன்
பிரபாகரன் தேசிய உலக தலைவர் . புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் தேசிய உலக சக்திகள். அல்லது சமாதான புறாக்கள்.
Thirumalaivasan
அதுசரி> அறியாமையால் ஒரு சின்னக் கேள்வி. உலகில் எங்காவது பிரதம நிதியரசர் தரத்தில் இருப்பவர் பொதக்கூட்டங்களில் பேச அனுமதிக்கப்பட்டதை நான் அறியவில்லை. நீதித்துறை தனித்துவமானது. அது அரசியலுடன் பக்கச்சார்புடன் இணையமுடியாதது. ஓ… இது நடப்பது லங்காவில் அல்லவா? அங்கே என்னவும் நடக்கும்.