அமெரிக்கா மற்றும் கனடா வாழ் தமிழர்கள் இணைந்து வெள்ளை மாளிகை முன்பு இன்று பிரமாண்ட முற்றுகை ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். இதில் அனைத்துத் தமிழர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் 3 ஆயிரம் தமிழர்களை ஒரே இரவில் படுகொலை செய்த கொடும் செயலை ஒபாமா அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், மிச்சம் மீதி உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாரு கோரியும், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
R2P எனப்படும் பாதுகாக்கும் தார்மீகக் கடமை கோட்பாட்டின் அடிப்படையில் உடனடியாக மனிதாபிமான முறையில் தலையிடுமாறு வலியுறுத்தியு இன்று மாலை (அங்கு காலை 9 மணி) இந்த ஆர்ப்பாட்டம் வெள்ளை மாளிகை முன் உள்ள வளாகத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து மாலை 5 மணி வரை (அதாவது இந்திய நேரப்படி விடிய விடிய) நடைபெறவுள்ளது.
வெள்ளை மாளிகை முன்பாக பென்சில்வேனியா அவென்யூ அருகில் உள்ள லஃபாயத் சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்