வட்டுக்கோட்டை தீர்மானம் என்ன கேலிக்கூத்தா? – குலன்

Pirabakaran_V_2008EelamAmir_Mangayatkarasi_._._._._._

….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவாழ் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

: தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தமிழீழப் பிரகடனம் 14 மே 1976

_._._._._._

வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி எழுதவந்த விடயத்திற்கு முன் வரலாறு பற்றி ஒரு முற்குறிப்புக் கொடுக்கவேண்டிய அவசியம் இங்குள்ளது. 1976க்கு முன்னிருந்த முக்கிய பல தமிழ் அரசியற் கட்சிகள் தமிழ் மக்களின் ஏகோபித்த நலன்கருதி தம்வேற்றுமைகளை மறந்து மக்களுக்காக ஒன்றாக இணைந்து உருவாக்கப்பட்டது தான் தமிழர் விடுதலைக் கூட்டணி. இது எமது சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
 
இக்கூட்டணியின் இளைஞர் அமைப்புத்தான் தமிழ் இளைஞர்பேரவை. இன்று தமிழர் கூட்டமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் மாவை சேனாதிராஜாவே தலைமை வகித்தார். இளைஞர்பேரவை என்பது கூட்டணியின் அரசியல் கருத்துக்களுக்கு உயிர்கொடுக்கும் இளைஞர் அமைப்பாகவே இருந்தது. மாவை சேனாதிராஜா அவர்கள் சிறை சென்றபோது யாப்பானது வெறும் பாராளுமன்றத்தை நோக்கிய யாப்பாக இன்றி விடுதலை அமைப்புக்குரிய யாப்பாக நாம் அதை மாற்றினோம். மாவை அண்ணர் சிறை மீண்டதும் முரண்பாடுகள் முண்டியடிக்க இளைஞர் பேரவை இரண்டானது. அதில் தீவீரவாதத்தை விரும்பிய இளைஞர்களாகிய நாம் இளைஞர்பேரவை விடுதலைஇயக்கம் என்று பிரிந்து சென்றோம். இப்படிப் பிரிந்து சென்ற நாம் தனிநபர் தீவீரவாதிகளுடனும், அமைப்புகளுடனும் இணையத் தொடங்கினோம். இருப்பினும் நாம் உடைந்தாலும் பாதை தவறிப்போகவில்லை. எமது போராட்ட வழியில் குறியுள்ளவர்களுடன் இணையத் தொடங்கினோம். இதில் முக்கியமான சிலரை நினைவு கூருவது மிக முக்கியமானது. இறைகுமாரன், உமைபாலன், வாசுதேவா, சந்ததியார், உமாமகேசன், செந்தில், சேயோன், கனககுலசிங்கம், புஸ்பராஜா, இராசநாயகம் போன்ற பலரை இங்கு குறிப்பிடலாம். எனக்கு இன்று தொடர்புகள் அற்றுப்போனதன் விளைவாக எல்லோரது பெயர்களையும் குறிப்பிட முடியவில்லை. முக்கியமாக உயிருடன் இருப்பவர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.
 
இந்த பிரிந்துபோன தீவிரவாத எமது இளைஞர் அமைப்பு தனிநபர் தீவிரவாதிகளாக இருந்த பலரை உள்வாங்க முயன்றதன் விளைவாக பிரபாகரன் போன்றோருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் தான் பிரபாகரன் உமாமகேஸ்வரன் ஒன்றாக இணைந்து செயற்படத் தொடங்கினர். மாணவர்பேரவை, இளைஞர்பேரவை விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்தனர். உருவாகிய அந்த அமைப்புக்கு ஒருமத்திய செயற்குழு உருவாக்கப்பட்டது. அதற்கு உமாமகேஸ்வரன் தலைவராகவும் தளபதியாக பிரபாகரனும் நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில்தான் சி.ஐ.டி யாக கடமையாற்றி தமிழ் இளைஞர்களை 4ம்மாடியில் சித்திரவதை செய்து வந்த இரகசியப் பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தகவல் கொடுத்து அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டார். இக்காலகட்டத்தில் தான் காட்டிக்கொடுப்போர், பொலிஸ் சி.ஐ.டி களும் தேடித்தேடிச் சுடப்பட்டனர். புதியபுலிகள் தோற்றம், உட்பூசல்கள் காரணமாக புளொட் பிரிவு, புளொட் புலிகள் கொலைமுயற்சிகள், சகோதரப் படுகொலைகள் என்று பல பல….
 
இந்த இளைஞர் பேரவை பிரிவதற்கு முன்னரே இந்த வட்டுக்கோட்டை மகாநாடு பண்ணாகத்தில் நடந்தது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 5 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வட்டுக்கோட்டைத் தொகுதி ஐவரில் இன்று உயிருடன் இருப்பது நான் மட்டுமென்றே கருதுகிறேன். ஏன் இதை நான் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அன்று எனக்கு இருந்த வேதனையும் வலியும் எனக்கு மட்டும்தான் தெரியும். நாம் பலர் ஊர்வலமாகச் சென்றபோது பொலிசாரினால் அடித்துதைக்கப்பட்டோம், பிடித்துச் செல்லப்பட்டோம் அதை எழுதுவதற்கு நான் தகுதி உடையவனா? இல்லையா என்பதை வாசகர்கள் தீர்மானிக்குக.
 
இனி சொல்ல வந்த முக்கிய விடயத்துக்கு வருகிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வைத்தே 1977 தேர்தல் நடந்தது. அன்று இருந்த மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியியும் எம்வரலாற்றில் என்றும் இருந்ததில்லை. 98 சதவிகிதமான மக்கள் அன்று தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு என்று அறுதியாகவும் உறுதியாகவும் ஆணையிட்டதன் விளைவாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியானது, என்றும் தமிழர்களுக்குக் கிடைக்காத எதிர் கட்சி என்ற நிலையை அடைந்தது. இதுவும் எம்சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வாகும். அந்த ஆணையானது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் ஏகோபித்த தமிழ் பேசும் மக்களின் ஆணையாகும். அதாவது வடக்குக் கிழக்கு மக்களுடன் முஸ்லீம்களும் இணைந்து தான் வாக்களித்தார்கள் என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. இத்தீர்மானமானது வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரம் கொண்ட தனித் தமிழீழம் என்பதாகும். இது சுயநிர்ணய கோட்பாட்டின் கீழ் ஒரினம் தன் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை கொண்டது. தனித் தமிழீழம் அடையும்வரை விடாது போராட வேண்டும் என்பது முடிவாக்கப்பட்ட ஒன்றானது. விடுதலைப் போராட்டம் எனும்பொழுது இளைஞர்கள் முக்கியத்துவம் பெறுவது இயற்கையே.
 
இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தில் எங்கேயும் இத்தீர்மானம் காலவதியாகும் என்று குறிப்பிடப்படவில்லை. இந்தத் தேர்தல் ஆணையை வைத்தே புலிகள் போராடி வந்தார்கள் என்று பிரபாகரனே தொலைக்காட்சிகளில் செவ்வியதை யாவரும் செவிமடுத்திருப்பர். இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளாய்வு செய்வதோ மீழுறுதிப்படுத்த முயல்வதோ அன்று வாக்களித்த தமிழ் மக்களை கொச்சைபடுத்தும் செயலாகும். அந்த மக்கள் ஆணை என்பது காலவதியற்றது. இதை மீளுறுதி செய்வதற்கு வெளிநாடுகளில் இருக்கும் நீங்கள் யார்? இங்கே வாக்களித்த பலர் ஈழத்தில் பிறந்தவர்களே இல்லை. இவ்வளவு காலமும் தம்முயிர்களை ஈர்ந்த தமிழ்தனையர்கள், யுவதிகள், பொது மக்களின் உயிர்களுக்குக் கொடுக்கும் சன்மானமா இது?
 
தமிழ் மக்களுக்கு சிங்கள இனவாத அரசால் இழைக்கப்பட்ட இன்னல்களை, எதிர்நோக்கும் பேரழிவுகளை மக்கள் முன்கொணர்ந்து மக்களை விழிப்புறச்செய்து தானைத் தளபதி என்று கருதப்பட்ட அமிர்தலிங்கம் போன்றோர்க்குக் கிடைத்தபரிசு தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்). மக்களை அன்று தட்டி எழுப்பியது யார்? இளைஞர்களைத் தான் சொன்னார்கள் ஆயுதம் ஏந்தியாயினும் ஈழம்பெறும் வரை போராடுங்கள் என்று. அன்றைய தலைவர்கள் தம்தகுதிக்கு ஏற்ப போராடினார்கள், கிளர்ச்சியை ஆதரித்தார்கள்.
 
அமிர்தலிங்கம் அவர்களைத் துப்பாக்கி இரவைகள் துளைப்பதற்கு முன்சொன்ன வார்த்தைகளை இங்கே கேளுங்கள். “தம்பிமார்களே எங்களாலை ஆயுதம் தூக்கிப் போராட இயலாது. நீங்கள் போராடுங்கள் எம்மால் இயன்றவரை நாம் போராடுகிறோம். ஒருவரின் வழியில் இன்னொருவர் குறுக்கிடாமல் மக்களின் நலனுக்காகப் போராடுவோம். இந்தியாவின் உதவியின்றி எமக்கு ஒருதீர்வு கிடைக்கப் போவதில்லை.” இந்த அரசியல்மேதை சொன்ன பொன்னான வார்த்தைகள் இன்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் இன்று கூட மறுக்க இயலுமா? முடியுமா?

அன்று இந்திய மத்திய அரசின் லோக்சபாவிலேயே தனித் தமிழனின் குரலாக ஒலித்தது அமரர் அமிர்தலிங்கத்தின் குரல் ஒன்றே. அன்று தேசத்தின் குரல் என்ன செய்தது? அதன்பின் யாராலாவது அது முடிந்ததா? உங்கள் குரல்கள் கணக்கெடுக்கப்பட்டதா? துப்பாக்கிகளின் துர்ப்பாக்கிய தீர்வுகள் திருத்தியமைக்க முடியுமா? அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் போன்றோரை மீளத்தர முடியுமா? உலக நாடெங்கும் நின்று தெருத்தெருவாய் கத்தினோம் யாருக்குக் கேட்டது. எவ்வளவு கேட்டது. ஒரு தனிமனிதனாகச் செய்ய முடிந்ததை இரண்டு இலட்சமாக நாம் தெருவில் இறங்கியும் முடியவில்லையே.
 
இன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீழுறுதி செய்கிறார்களாம். இது வேடிக்கையா? கேலிக்கையா? இன்று வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் 90 விதமானவர்கள்  யாழ்பாணத் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இங்கே கிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமியத் தமிழர்களினதும் கருத்துக்கள், விருப்புக்கள் சாகடிக்கப்படுகிறன்றன. புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள், கிழக்கு முஸ்லீம்களின் கருத்துக்களுக்கு இடமெங்கே? அங்குள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? சரி அங்கே ஒரு நடுநிலையாக தேர்தலை நடக்த முடியாது என்று கருதினால் ஐ.நா அதை அங்கே செய்யட்டும்.
 
வெளிநாட்டில் எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் நீங்கள் ஈழத்து மக்களின் தலைவிதியை இங்கு வசதியாக இருந்து கொண்டு தீர்மானிக்க இயலுமென்றால் பிராந்திய வல்லரசுகளான அண்டை நாடுகள் தம் பாதுகாப்புக்கருதி ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிப்பது சரி என்றாகிவிடும் என்பதை உணர்க.
 
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் குறுஞ்செய்தி வந்தது 99 சதவிகிதமானவர்கள் தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறார்கள் என்று. இது மிகப்பெரிய வேடிக்கை. நோர்வேயில் எந்த மாநகரசபையை தமிழீழம் ஆக்கப்போகிறீர்கள். 99 சதவிகிதம் என்பது எதைவைத்துக் கணிக்கப்பட்டது என்பதுதான் என் கேள்வி? சரி எத்தனை சதவீதமானவர்கள் வாக்களித்தார்கள் என்றால் அது இவர்களுக்குத் சரியாகத் தெரியுமா? இன்று நோர்வேயில் வாழும் ஈழத்தமிழர்கள் எத்தனை? இதில் எத்தனை பேர் 18 வயதைத் தொட்டவர்கள்? இந்த 18வயதைத் தொட்டவர்களில் சமூகம் அழித்தவர்கள் எத்தனை வீதம்? இதுவாவது தெரியாது? அதாவது குஞ்சு குருமான்கள், விசா இல்லாதோர், பாஸ்போட் இல்லாதோர் எல்லாமுமாகச் சேர்த்து சுமார் 20 000 க்கும் குறைந்த நோர்வே வாழ் ஈழத் தமிழர்கள் 3 மில்லியன் ஈழத் தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லை?
 
இந்த வாக்கெடுப்பை நடத்திய உதுறுப் (கத்துதல், அழைத்தல் என்பதே தமிழாக்கம்) என்ற அமைப்பின் இணையத்தள வெளியீட்டில் இருந்து.
 
18 வயதுக்கு மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் தொகை 8797 (எந்த தேர்தல் ஆணையகம் இதைத் தந்தது)
 
வாக்களித்தவர்கள் தொகை 5633 இதில் தமிழீழம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் 5574
 
ஆகவே நோர்வேவாழ் தமிழர்களில் வாக்குரிமை கொண்டவர்களில் ஈழம் வேண்டுவோர் எத்தனை வீதம்? 63 சதவீதம் என்பதே சரியானது (5574தர 100 கீழ் 8797). இதில் வாக்களிக்காதவர்கள் 35 வீதம் என்பதையும் கவனிக்க.
 
தமிழர்சார் உதுறுப் தன்தலையங்கத்தில் எழுதியுள்ளது: 99சதவிகிதமான நோர்வே தமிழர்கள் தனித்தமிழீழம் பிரிவதையே விரும்புகிறார்கள். நோர்வேயில் தமிழர்கள் செறிந்து வாழும் எந்தப் பகுதியில் ஈழம் காணப்போகிறார்கள். ஈழத்தில் நடுநிலையாக ஒருதேர்தல் நடத்தினால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இதற்கு அனுரசணையாக இருந்த பின்புலத்தார் உணர்வார்கள்.
 
கிழக்கிலங்கை, ஈழக்கதை இன்றி ஏதோ ஜனநாயகம் இல்லாத துப்பாக்கித் தனிநியாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. வடபகுதி முஸ்லீங்கள் சொந்த பூமியை விட்டு விரட்டப்பட்டு விட்டார்கள். யாழ்பாணம் ஆமியின் பிடியில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கணக்கில் இருக்கிறது. வன்னியில் புலியழிப்பென மக்கள் அழிப்பு நடக்கிறது. இவர்கள் கருத்துக்கள் கணிக்கப்பட்டதா? இதற்குச் சரியான பதில் சொல்ல வேண்டியவர்கள் அங்குள்ள மக்கள் மட்டுமே. சரி அங்கு தேர்தல் நேர்மையாக நடத்த முடியாது என்றால் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட தேர்தல் எந்த வகையில் முறையானது. இதை ஒரு கருத்துக் கணிப்பாகவே கருதவியலாது. வாக்களித்தவர்கள் யார்? குறிப்பிட்ட வட்டங்களில் உள்ள குழுக்கள். கருத்துக் கணிப்பு என்றும் பரந்துபட்டே எடுக்கப்படும். இந்த வகையான தேர்தல் வெறும் கேலிக்கூத்து என்பதே உண்மை.

இந்தக் கேலி, போலித்தேர்தலில் பங்குபற்றாத பலர் என் காதுபடச் சொன்ன விடயம் என்னவென்றால் ‘கண்டநிண்டவன் எல்லாம் தேர்தல் நடத்துவான். இனி அதை வைத்தோ பாராளுமன்றம் போக வேண்டும்’ என்பர். இவர்களின் கோமாளிக் கூத்துக்கு நாங்களும் ஆடுவதா? ஈழத்தில் எம்மக்களை கோமாளிகளாக்கி கொன்று போட்டது போதாதா? இங்கும் இளைஞர்களைத் தூண்டி இரத்தக்களரிக்குத் தயார்படுத்துகிறார்களா? இராஜதந்திரம் புத்திசாதுரியமான வளைந்து கொடுப்புக்கள் மூலம் எமது நோக்கு வென்றெடுக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் துப்பாக்கிகளே தமிழர்களின் தலைவிதியை அவசர அவசரமாகத் தீர்மானித்தன.
 
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி மக்கள் சர்வஜன வாக்கெடுப்பில் கொடுத்த மக்கள் ஆணை என்பது என்றும் காலாவதியாவதில்லை. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகும் என்று எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. அங்குள்ள மக்கள் கொடுத்த தீர்ப்பை அங்குள்ள மக்களே தம்தலைவிதியை தீர்மானிக்க வேண்டும்.
 
எமது மக்களின் கிளர்ச்சிகளும் உணர்வுகளும் சரியான முறையில் வழிநடத்தப்படவில்லை என்பதுதான் காலம் தந்த பதில். அங்குள்ள மக்கள் என்றோ ஒருநாள் தம்மிடையே உள்ள சக்திகளைத் திரட்டி சரியான தலைமையை தெரிவுசெய்து தம்போராட்டத்தை வென்றெடுப்பார்கள். பலாத்காரத்தினால் மக்கள் எழுற்சியைக் கட்டுப்படுத்த இயலாது. இது சரித்திரச் சான்று.
 
ஈழத்தமிழர் விடுதலைக்கு நாமே ஏகப்பிரதிநிதிகள் என்று எம்மக்கள் போராட்டத்தை மழுங்கடித்தன் விளைவு இன்று எம்தமிழினம் விடுதலை என்ற சொல்லை உச்சரிப்பதற்கே இனி எத்தனை தலைமுறை எடுக்குமோ? இது சுடுகிறது மடியைப்பிடி என்று செய்யும் காரியமல்ல. தாமே ஒட்டுமொத்த தமிழினத்துக்கும், தமிழீழத்திற்கும் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டவர்களே ஈழத்தமிழர் அழிவுக்கு மட்டுமல்ல மக்களின் தன்னம்பிக்கை இழப்புக்கும் காரணமானவர்கள். தன்னம்பிக்கை இழப்பு என்பது தற்கொலைக்குச் சமனானது. ஒரு இனத்தின் தன்னம்பிக்கை மழுங்கடிக்கப் படும்போதுதான் அடிமை நாடகம் அரங்கேறும்.
 
தனிநபர்களின் தலைமையில் விடுதலைப் போராட்டங்களைக் கட்டி எழுப்புவதை விட்டு விட்டு, அதாவது கதாநாயகத்துவம் (கீரோயிசம்) அற்ற மக்கள் அமைப்பைக் கட்டி எழுப்புங்கள். மக்களின் குரல்களுக்குச் செவிசாயுங்கள். விடுதலை மக்களுக்கே தவிர மண்ணுக்கல்ல. மண் என்பது வெறும் இருப்பு மட்டுமே. மண்தான் முக்கியம் என்றால் எமது மண் சிந்துநதிப் பள்ளத்தாக்கிலும் இருக்கிறது. அதையும் போய் மீட்போமா?
 
இக்கட்டுரையைத் தொடர்ந்து பலகட்டுரைகளை ஏனைய வாசகர்களும் எழுதுவீர்களாயின் ஒரு ஆரோக்கியமான கருத்தியலை நாம் பகிர்ந்து கொள்ளலாம். பின்னோட்டங்களும் சிந்தனையைத் தூண்டுவதாய் அமையும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61 Comments

  • varathan
    varathan

    வட்டுக்கோட்டை தீர்மானம் கைவிட்டு போக காரணம் என்ன? — 09.05.2009 – சனிக்கிழமை

    எம் இனிய நோர்வே வாழ் உறவுகளே

    எம் தாயக தேசத்தின் அவலங்களை உங்களுக்கு சொல்லத்தேவையில்லை.
    உறவுகளைப் பலி கொடுத்து உடமைகளை பறி கொடுத்து சொந்த வீடிழந்து சொந்தங்களை பிரிந்து அச்சத்தில் உறைந்து போன உயிர்களோடு மட்டும் ஓடி வந்த எமது உறவுகள் நடுத்தெருவிலும் இன்று நலன்புரி முகாம்களில் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டு இருக்கிறார்கள். 1976 இல் தந்தை செல்வா தலைமையில் எடுக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலை என்பது சுதந்திர ஈழமே என்று அன்றைய சூழலில் இன்னொரு புறத்தில் கிளம்பிய எழுச்சியும் ஆயுதப்போராட்டத்தை தொடக்கி வைத்தன.

    பல்வேறு விடுதலை அமைப்புகளும் பன்முகச்சிந்தனைகளோடு எழுந்து நின்று ஒன்று பட்டு போராட்டக்களத்தில் குருதி சிந்தி தியாகங்களை புரிந்தன. ஆனாலும் தாம் மட்டும் தனித்து நின்று போராட வேண்டும் என்ற தனித்தலைமை வெறிபிடித்த புலித்தலைமை சக விடுதலை அமைப்புகளை தடை செய்து சகோதரப்போராளிகளை தெருத்தெருவாக கொன்றொழித்தது. எதிரி யார் நண்பர் யார் என்று தெரிந்திராத புலித்தலைமையின் ஏக பிரதிநித்துவம் என்ற தனித்தலைமை வெறியினால் எமது போராட்டம் திசை மாறி சென்று சொந்த இனத்தின் குருதி குடித்து தமிழ் பேசும் மக்களின் போராடும் பலத்தை அடித்து நொருக்கி சிதைத்திருந்தது. இதனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நாம் அடைந்து விட முடியாது என்ற நம்பிக்கையீனங்களே தோன்றியிருந்தன. இந்த காலச்சூழலில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு பிறந்திருந்தது. அதை ஏற்றுக்கொள்ள மறுத்த புலித்தலமைமை அன்றிலிருந்து அதன் பின்னர் கிடைத்த அரசியலுரிமை தீர்விற்கான அனைத்து சந்தர்ப்பங்களையும் தமது சுயலாப நோக்கங்களுக்காக சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை. இதனாலேயே எமது மக்கள் இன்று பேரழிவுகளையும், பெருந்துயரங்களையும் சந்தித்து வருகின்றார்கள்.

    சகோதர விடுதலை அமைப்புகள் மீதான படுகொலைகளினால் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் பேசும் மக்களை கைவிட்டுப்போனது. அதன் பின்னர் கிடைத்திருந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை புலித்தலைமை ஏற்று யுத்தத்தை தொடராதிருந்திந்தால் இன்று எமது மக்கள் நடைமுறையில் சுய நிர்ணய உரிமைகளை அனுபவித்திருப்பார்கள். எமது மக்களை இன்று நடுத்தெருவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டிய துயரங்களும் நிகழ்ந்திருக்காது.

    ஆளும் கட்சி அரசியல் தீர்வை முன் வைப்பதும் அதை எதிர்க்கட்சி எதிர்ப்பதும்தான் இலங்கை தீவின் அரசியல் வரலாறு. இதுவே மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இன்று எமது மக்களுக்கு தேவையானது ஒரு அரசியல் தீர்வு மட்டும்தான். இதை இலங்கைத்தீவின் அரசியல் சூழ்நிலையே தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கின்றது. இதை விடுத்து வெறும் சலசலப்பு காட்டுவதற்காகவே இன்றைய சூழலில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற அடைய முடியாத ஒன்றிற்காக புலம் பெயர் நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே 1980 களின் ஆரம்பங்களில் அமெரிக்காவின் மாசாசூஸ் மாநிலத்திலும், இலண்டனிலும் ஈழப்பிரகடனம் செய்து அதை வெற்றி பெறச்செய்வதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. அன்றைய சூழலில் அவைகளை ஒரு வகையில் ஏற்க முடிந்தது. ஆனாலும் இன்றைய காலச்சூழலில் வெறும் சலசலப்பு காட்டுவதற்காக மட்டுமே வட்டுக்கோட்டை தீர்மானத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு உங்கள் மத்தியில் சிலர் வருகின்றார்கள். தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறுமனே சலசலப்பு காட்டுவதற்காக அல்ல. அவைகள் எமது மக்களின் நிம்மதியான வாழ்விற்கும் நீடித்த அரசியல் உரிமை சுதந்திரத்திற்கும் வழி காட்டுவதற்காகவே இருக்க வேண்டும்.

    இது வரை கிடைத்திருந்த தீர்வுகள் அனைத்தையும் அரை குறை தீர்வுகள் என்று கூறி சுயலாப அரசியலுக்காக தட்டிக்கழித்து வந்ததினால் நாம் எமது இலக்கு நோக்கி முன்னேற முடியாமல் இருந்திருக்கின்றோம். ஆகவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தி அதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வும் அரிசியலுரிமையும் பெற்ற சுதந்திர பிiஐகளாக எமது மக்கள் வாழ முடிந்த வாழும் சூழலை நோக்கி நாம் முன்னேறுவதே நடை முறைச்சாத்தியமான வழி முறையாகும். இதுவே அனைத்து கட்சிகளாலும் குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடிந்த ஒன்றாகும். ஆகவே சூழ்நிலைக்கு ஒவ்வாத வெற்றுக்கோசங்களும், வெறும் சுதந்திரப்பிரகடனங்களும் எமது இலக்கு நோக்கி முன்னேறிச்செல்ல முடிந்த நடை முறைச்சாத்தியமான வழிமுறைகளை முற்றாக மூடிவிடுவதற்கான இன்னொரு முயற்சியாகவே கருதப்படும். இதனால் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் நிகழவே வழி வகுக்கும்.

    எமது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையின் பக்கம் அனைவரும் அணிதிரண்டு வெற்றுக்கோசங்களை நிராகரிக்க முன்வரவேண்டும் என்பதே தாயகத்தில் வாழும் எமது மக்களின் விருப்பங்களாகும். நடைபெறப்போகும் வாக்கெடுப்பில் சிந்தித்து செயற்படுமாறு தாயகத்தில் அவலப்படும் எமது மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

    ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
    நோர்வே பிராந்தியம்.
    08. 05. 09

    Reply
  • BC
    BC

    நோர்வேயில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது வாக்குப் பதிவு நடத்தி 99% தமிழர் சுதந்திர தமிழீழமே தமது தாகம் என்று வெளிப்படுத்தியுள்ளனராம். ஆகவே இலங்கையில் உள்ள தமிழர்களும் இந்த முடிவை ஏற்றுகொண்டேயாக வேண்டுமாக்கும்.

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    புகலிடத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று வெளிக்கிட்ட கவிஞருக்கும் அவரது வால்களுக்கும் இக்கட்டுரை முக்கியமான வாசிப்பிற்குரியது. தொற்றுநோய்போலப் பரவப்போகும் இந்த கோமாளித்தனமான தேர்தல் காய்ச்சலை தடுத்துநிறுத்த சுயசிந்தனையுள்ளவர்களிடம் இக்கட்டுரை பலவழிகளிலும் போய்ச் சேரவேண்டியது அவசியம். திரு. குலன் இக்கட்டுரையை பிற இணையத்தளங்களிலும் இணைப்பாராக.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    மன்னிக்கவும் 99 விகிதம் என்பது முற்றிறும் தவறானது> 63 சதவிகிதமே சரியானது. குலன் இதுபற்றி மேலே எழுதியுள்ளார். சமூகமளித்தவர்களில் 99விகிதமாக இருக்கலாம் நோர்வே வாழ் 18வயதுக்கு மேற்பட்டவர்களில் 63விகிதம் என்பதே உண்மை. நோர்வேவாழ் தமிழர்களில் இது 25விகிதம் என்பதே உண்மை.

    Reply
  • Kullan
    Kullan

    திருமலைவாசன்! யார் அந்தக்கவிஞர்? ஏன் இதை இங்கு குறிப்பிட்டீர்கள்?

    Reply
  • indiani
    indiani

    /இங்கே கிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமியத் தமிழர்களினதும் கருத்துக்கள் விருப்புக்கள் சாகடிக்கப்படுகிறன்றன. புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லீம்கள் கிழக்கு முஸ்லீம்களின் கருத்துக்களுக்கு இடமெங்கே? அங்குள்ள தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க நீங்கள் யார்? சரி அங்கே ஒரு நடுநிலையாக தேர்தலை நடக்த முடியாது என்று கருதினால் ஐ.நா அதை அங்கே செய்யட்டும்./

    இதையெல்லாம் யோசிக்க அவர்களுக்கு நேரமேது. இது ஆத்துப்பறந்து கடசி நேரத்தில் தயாரிக்கப்படும் சாப்பாடு உப்புப் புளி பார்க்கவே நேரமில்லை. உண்ணாவிரதம் இருக்குமிடத்துக்கு வாற அனுதாபிகளிலேயே உவன்ஆர் அவன்ஆர் என்று பிரித்துப் பார்க்கும் நிலையில் புலியாதரவுகள் இருக்கும்போது கிழக்குச் சனம்பற்றிக் கேட்கவே தேவையில்லை. முஸ்லிம்கள் பற்றி மூச்சும் விடமாட்டாங்கள்.தனிஈழம் அமைக்கிறதை ஒரு பக்கத்தில வச்சிட்டு தலை எங்கை எண்டு தேடுங்கோ… குலன் சிந்துநதிப் பள்ளத்தாக்கு அழகான உவமை. உண்மையும்கூட.

    Reply
  • பேராசிரியர் பெக்கோ
    பேராசிரியர் பெக்கோ

    குலன் அந்தக் கவிஞ்ர் வேறு யாருமல்ல பிரான்ஸ் கவிஞர் ஈரோஸ் கவிஞர் கி பி அரவிந்தன். புலிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தான் இந்த வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்று தனது நண்பர்களுக்கு சொல்கிறாராம். அவருடைய நிலை இப்ப ஆப்பு இழுத்த குரங்கின் நிலையா? அல்லது புலி வாலைப் பிடித்ததன் நிலையா என்று தேசம்நெற் பின்னுட்டக்காரர் ஒரு முடிவுக்கு வர வேணும்.

    Reply
  • kullan
    kullan

    ஒஒஒ அரவிந்தன் அவர்களைக் கருதினீர்களோ? இக்கட்டுரையின் நோக்கம் யாரையும் நோகடிப்பதல்ல. மாற்றமில்லா மனிதனோ கருத்துக்களோ உலகில் கிடையாது. மாற்றம் என்ற ஒன்றே மாறாதது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் மாற்றப்படவேண்டுமானால் அதற்கு உரியவர்களும்> உரிமையாளர்களும்> பொறுப்பானவர்களும் ஈழத்தில் இன்று வாழும் தமிழ்மக்களே. வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கற்பனையில் காதல் கொண்டவர்கள்; யதார்த்தத்தை காணாதவர்கள்; உணராதவர்கள். வோட்டுப்போட்டவர்களில் பலர் இங்குபிறந்தவர்கள் ஊருக்குச் சுற்றுலா போய்வந்தது மட்டும் தான். இவர்கள் அங்கு அல்லுளும் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகிறார்களா? நடைமுறையில் காலவதியான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை காலவதியாக்கும் உரிமையும்; அதிகாரமும் அங்குவாழும் தமிழ்மக்களுக்கு மட்டுமே உரியது.

    Reply
  • thurai
    thurai

    குலனின் ஆய்வுக்கு நன்றிகள். உண்மைகள் என்றும் அழிவதில்லை. கடந்த காலமும், நிகழ்காலமுமே எதிகாலத்தை தீர்மானிக்க உதவும்.

    விட்ட தவறுகளை மறுப்போரும், செய்த குற்ரங்களை ஏற்காதவரும் தமிழினத்தின் தலைவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது.

    இன்றைய சூழலில் இலங்கையில் சமாதானமும், தமிழ் சிஙகள, முஸ்லிம் இனங்களிற்கிடையே ஒற்றுமையுமே முக்கியமானது. புலத்தில் வாழும் தமிழர் சிங்களவர் தமிழரிற்கு பகைவர்கள் என்பதனை மட்டுமே தளமாகவைத்து நடத்தும் போராட்டங்கள் ஈழ்த்தமிழர் நிலைமையை மேலும் மோசமடையச் செயுமே தவிர ஒருவ்கையான தீர்வையும் தரப்போவதில்லை.

    துரை

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    விட்ட தவறுகளை மறுப்போரும், செய்த குற்ரங்களை ஏற்காதவரும் தமிழினத்தின் தலைவராகவோ, அல்லது வழிகாட்டியாகவோ ஒருபோதும் இருக்கமுடியாது.

    இன்றைய சூழலில் இலங்கையில் சமாதானமும், தமிழ் சிஙகள, முஸ்லிம் இனங்களிற்கிடையே ஒற்றுமையுமே முக்கியமானது. புலத்தில் வாழும் தமிழர் சிங்களவர் தமிழரிற்கு பகைவர்கள் என்பதனை மட்டுமே தளமாகவைத்து நடத்தும் போராட்டங்கள் ஈழ்த்தமிழர் நிலைமையை மேலும் மோசமடையச் செயுமே தவிர ஒருவ்கையான தீர்வையும் தரப்போவதில்லை.

    thanks thurai 100% i accept it

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான்யூ, இலங்கையை பார்த்த பின் இலங்கை போல் சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என எண்ணம் கொண்டு சிங்கப்பூரை உருவாக்கினார். பின்னர் அதே லீ குவான்யூவால் இலங்கை போல் என் நாடு ஆகக் கூடாது என்றும் சொன்னார். முன்னது பெருமை. பின்னது வெட்கம்.

    என்னைப் பொறுத்தவரை இந்த வட்டுக் கோட்டைத் தீர்மானமோ அல்லது தமிழருக்கான தனி பகுதிகளோ ஆகியவை குறித்து இன்னும் கனவு காண்பது , எதிர்காலத்தில் இன்னொரு அழிவை உருவாக்கவே உதவும் என்றே நினைக்கிறேன். இனி ஒரு போதும் அழிவுகள் இலங்கை மண்ணில் இல்லாமல் போக வேண்டுமானால் , மிகுதி தமிழரும் சுபீட்சமாக வாழ வேண்டுமானால் அனைத்து மக்களும் இலங்கை முழுவதும் பரவி வாழும் நிலைமை உருவாக வேண்டும்.

    இது சிங்கப்பூரின் தன்மையை ஒத்ததாக உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் விகிதாசாரப்படி அனைத்து இலங்கையரும் கலந்து நாடு முழுவதும் வாழும் ஒரு நிலமை வர வேண்டும். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மொழி அறிவை பகிர்ந்து கொள்ளவும் ,அப் பகுதியின் வளர்ச்சிக்கான நிதி பங்கீடுகளை சம அளவாக பெறவும் உதவும். ஒரு பகுதியின் முன்னேற்றமே அம் மக்களின் வாழ்வை வளமாக்கும். தமிழரோடு சிங்களவரும் கலப்பதால் அங்கு முன்னேற்ற வழிவகைகளுக்கான நிதி பங்கீடுகள் சிங்கள பகுதிகளுக்கு போல் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    மொழி வாழ வேண்டுமானால், அந்த மொழி பேசும் மனிதன் வாழ வேண்டும். அந்த மனிதன் வாழ வேண்டுமானால் அந்த மனிதன் உயிரோடு இருக்க வேண்டும்.

    அதைவிடுத்து இன்னொரு இன அழிப்புக்கான எண்ணங்கள் இனி எவர் மனதிலும் உருவாக்கப்படக் கூடாது.

    தமிழ் அரசியல்வாதிகளுக்கு இப்படியான கருத்துகள் பாவற்காய் போலவே இருக்கும். எம் மக்களை இந்த நிலைக்கு தள்ளியவர்கள் அவர்களே. எனவே எமக்கு தமிழ் அரசியல்வாதிகளை விட என்றும் மக்களே முக்கியம்.

    இதில் உள்ள தீமைகளை விட நன்மைகள் அதிகம். தீமைகள் என்றால் எம் மண் பறி போகும் நிலை ஏற்படும் என்பார்கள். இன்று தமிழ் மக்களில் பெரும் பாலானோர் தன் தாயக பகுதியில் இருந்து வெளியேதான் இருக்கிறார்கள். அநேகமான தமிழர்கள் இன்று, சிங்கள பகுதிகளிலும் , தமிழ் நாட்டிலும் , வெளிநாடுகளிலுமே வாழ்கிறார்கள். மக்களே இல்லாத மண் குறித்து பேசுவதும் அதை மீட்பது குறித்து போராட எண்ணுவதும் கானல் நீர் கதைதான் இனி….

    பொதுவாக பார்த்தால் , தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறி வாழும் தமிழர்களுக்கு இணையாக சிங்களவர்களோ அல்லது முஸ்லீம்களோ தமிழ் பகுதிகளில் இல்லை.

    சிங்களவர்கள் இவற்றை தமிழர் நினைக்கும் அளவுக்கு பெரிதுபடுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி ஒரு நிலை இருந்தால் தமிழர்கள் சிங்கள பகுதிகளை விட்டு எப்போதோ இல்லாமல் போயிருக்க வேண்டும்.

    அடுத்து இந்தியாவை பின் பற்றும் அரசியல் தன்மைகள் மற்றும் பின் பற்றல்கள், நம்மிலிருந்து இல்லாமல் போக வேண்டும். சிறீலங்காவின் அரசியல்வாதிகள், இந்திய அரசியலை பின்பற்றாமையால்தான் இன்று அவர்களது அரசியல் உயிர் பிழைத்து இருக்கிறது. அவர்கள் மேலத் தேசங்களோடு தமக்கு சாதகமானவற்றை உள் வாங்கியிருக்கிறார்கள். நம் அரசியல்வாதிகள் , இன்றும் இந்தியாவையே (தமிழ் நாட்டை) பின்பற்ற நினைப்பது குப்பைகளை தம் தலைகளில் தொடர்ந்தும் கொட்டிக் கொள்வதற்கு சமமானதாகும். இந்திய தமிழ் நாட்டு அரசியல் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் ஒரு அரசியல். அது நம் தமிழ் அரசியல் வாதிகள் தொட்டு போராளிகள் வரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்திருக்கிறது.இருக்கிறது. இதுவும் ஒரு அவலம்தான்.

    இதன் பிரதிபலிப்புதான், உலக நாட்டுத் தலைவர்களிடம், நம்மவர்கள் உணர்ச்சி மேலீட்டால் உருவாக்கும் அனுதாபங்களைக் கூட,சிங்கள அரசியல்வாதிகளால் லொஜிக்காக தகர்க்க முடிந்திருப்பதற்கான காரணம்.

    சிங்கள தலைமைகள் ஐயோ அடிக்கிறான் என்று கத்தியதும் இல்லை. அடிச்சுப் பிடிச்சிட்டோம் என்று குதித்ததுமில்லை. அவர்கள் நிதானமாக தமது சிந்தனைகளை நகர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

    எனவே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வுக்கு வழி ,அனைத்து மக்களும் எங்கும் தனி ஒரு குழுவாக வாழாமல், நாடு முழுவதும் பரந்து வாழ்வதும் , இரு மொழிக் கல்வியை (தமிழ் – சிங்களம்) கட்டாயமாகக் கற்று புரிந்துணர்வோடு வாழ்வதுமேயாகும். ஆங்கிலம் பொது மொழியாக இருத்தல் வேண்டும்.

    மொழி, மனிதனை புரிந்து கொள்வதற்கான வழி. உலகமெல்லாம் பரவி விட்ட தமிழர்கள் , தாம் வந்த நாட்டு மொழியை கற்றுக் கொள்ள முடியுமானால், தான் வாழும் நாட்டின் சகோதர மொழியைக் கற்க முடியாது என்பது பிடிவாதமாக மறுப்பதாகவே இருக்கிறது. அந்த சிந்தனையை உருவாக்கிய பெரும் தவறு நம் தமிழ் அரசியல்வாதிகள் சார்ந்தது. அந்நிலை மாற வேண்டும்.

    உன்னால் ஒரு மனிதனை புரிந்து கொள்ள முடியுமானால், அவனோடு இணைந்து வாழ்வது ஒன்றும் சாதனையல்ல. அது சரித்திரம். அதற்காக அவன் மொழி நமக்கு தெரிய வேண்டும்.

    ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் மொழி அறிவும் , கலந்து நட்போடு வாழும் மன நிலையும் , அந்த இணைப்பினால் அனைவருக்கும் கிடைக்கும் வசதி வாய்ப்புகளும் ஒற்றுமையான புது வசந்தத்தை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வழி அமைக்கும். அதற்கான எண்ணங்களை நம் தலைவர்கள் நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

    நன்றி.

    Reply
  • மாயா
    மாயா

    பேராசிரியர் பெக்கோ
    கி பி அரவிந்தன் கவிஞர் என்பதை விட கொலைஞர் என்பதே சரி. தம்மை வளர்த்துக் கொள்ள புலிவாதியாகி , புலி வீழும் போது தொந்தரவு என கவிதை புனைகிறாரோ? நல்ல பகிடி.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    வட்டுக்கோட்டைத் தீர்மானம் அன்றையகாலப் பகுதிகளில் பேரினவாதிகள் தங்கள் லாபத்திற்காக அரசியல் நடத்தியபோது தேவையும் அவசியமாகவும் ஒட்டுமொத்த தமிழ்மக்களின் தேவையாகவும் இருந்தது. அதை “பொடியள்” என்ற வெஞ்சினமும் பழிதீர்ப்பதும் சுயநலமும் கொண்ட புலிகள் நாறடித்து விட்டார்கள். யதார்தத்தில் தமிழ் மக்கள் வ.கோ பக்கம் திரும்பியும் படுக்கமாட்டார்கள். பிச்சை வேண்டாம் நாயை பிடித்தால் போதுமானதே என்ற அளவில் தான்.
    அப்படியென்றால் வ.கோ தீர்மானத்துக்கு இப்ப என்ன வயிற்றுவலி வந்தது. உண்மையில் புலிகளின் இரண்டாம் தலைமுறைக்கு வயிற்றுவலி தான். புலிகள் இருந்த இடம்தெரியாமல் போகும் போது தமதுசொகுசு வாழ்கையை எப்படி தொடருவது? புலம்பெயர் மறைவாக இருக்கும் பல்லாயிரம் கோடிசொத்துகளுக்கும் ஆப்புவைப்பதற்கான தேவையே வ.கோ.தீர்மானத்தை அலசி வாக்கெடுத்து தமது வாரிசுஉரிமை முறையை வெளிப்படுத்துகிறார்கள்

    ஒன்றைமட்டும் தான் நான் உறுதியாகச் சொல்லுகிறேன். ஈழத்தில்வாழும் தமிழ்மக்கள் தமது அனுபவத்தைக்கொண்டு தமது அரசியல் வழியை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். புலம்பெயர் புண்னாக்குகள் எந்த அறிவுரையையும் வழங்கவதற்கு எந்த யோக்கியதையும் இல்லை. உங்கள் கண்ணீர் எல்லாம் நீலீக்கண்ணீர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    முன்பு கூட்டணியினரால் பெடியளை உசுப்பேற்றி விட வைக்கப்பட்டது இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானம். ஆனால் பின்பு அதே பெடியளால் (புலிகளால்) இத்தீர்மானத்தையும் புறந்தள்ளி தீர்மானத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்களையும் போட்டுத் தள்ளி, போராட்டத்தின் பாதையையும் மாற்றி, தாம் தான் ஏகபிரதிநிதி என்ற நிலைப்பாட்டை உருவாக்கி இன்று தமிழ்மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளனர்.

    மீண்டும் புலிகள் எப்படியாவது தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசையில், புலத்துப் பொடியளை உசுப்பேத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் பாழடிக்க, இந்த வட்டுக்கோட்டைத் தீரமானத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விடயத்தில் பெற்றோர்கள் உசாராக இல்லாது விட்டால், எதிர்கால சந்ததி பாழாகப் போனதிற்கு அவர்களும் துணை போனதாகவே அமைந்துவிடும்.

    Reply
  • BC
    BC

    // என்னைப் பொறுத்தவரை இந்த வட்டுக் கோட்டைத் தீர்மானமோ அல்லது தமிழருக்கான தனி பகுதிகளோ ஆகியவை குறித்து இன்னும் கனவு காண்பது எதிர்காலத்தில் இன்னொரு அழிவை உருவாக்கவே உதவும் என்றே நினைக்கிறேன். இனி ஒரு போதும் அழிவுகள் இலங்கை மண்ணில் இல்லாமல் போக வேண்டுமானால் மிகுதி தமிழரும் சுபீட்சமாக வாழ வேண்டுமானால் அனைத்து மக்களும் இலங்கை முழுவதும் பரவி வாழும் நிலைமை உருவாக வேண்டும்.//அஜீவன்

    சிறந்த கருத்து அஜீவன்.

    Reply
  • BC
    BC

    பார்த்திபன் – மீண்டும் புலிகள் எப்படியாவது தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நப்பாசையில் புலத்துப் பொடியளை உசுப்பேத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் பாழடிக்க இந்த வட்டுக்கோட்டைத் தீரமானத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விடயத்தில் பெற்றோர்கள் உசாராக இல்லாது விட்டால் எதிர்கால சந்ததி பாழாகப் போனதிற்கு அவர்களும் துணை போனதாகவே அமைந்துவிடும்.

    பார்த்திபனின் இந்த எச்சரிக்கையை வெளிநாடுகளில் வாழும் பெற்றோர்களால் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவிடயமாகும்.

    Reply
  • Raj
    Raj

    காலம் காலமாக வாழ்ந்த குடிநிலத்திலிருந்து ஒரு குடியை கிளப்பி துரத்தியடிக்க சில மணித்தியாலங்களே போதுமானதாகும்.அதே இடத்தில் மீள நட உள்ள சாத்தியப்பாடுகள் பற்றி நாமறிவோம்.நமது தமிழ் பிரதேசங்கள் இழந்த வளங்களையும் தொலைத்தமக்களையும் என்று காணும் எம் தேசம்?புலம்பெயர்ந்த மக்களில் கூட எத்தனை பேர் திரும்ப தமது வாழ்விடங்களில் சென்று குடியேறுவார்களென எவராலும் கூற முடியுமா?இந்த நிலையில் போராட்டம் வட்டுக்கோட்டை ஈழம் என திரும்ப ஓர் திருவிளையாடலில் இறங்காது அங்குள்ள மக்கள் எப்படி வாழ விரும்புகிறார்களோ அதற்கு முடிந்தால் ஏதாவது செய்வோம் அல்லது ஒதுங்கிக்கொள்வதே அவர்களுக்கு புலம்பெயர்ந்தோர் செய்யும் பேருதவியாகும்.

    Reply
  • ross
    ross

    //ஆகவே நோர்வேவாழ் தமிழர்களில் வாக்குரிமை கொண்டவர்களில் ஈழம் வேண்டுவோர் எத்தனை வீதம்? 63 சதவீதம் என்பதே சரியானது (5574தர 100 கீழ் 8797). இதில் வாக்களிக்காதவர்கள் 35 வீதம் என்பதையும் கவனிக்க.//

    What a stupid philosophy of calculation.
    Is the 35% is against the Tamil Eelam. They couldn’t come to the election and they all support the TAMIL EELAM (Posiiblt 99%).

    STOP YOUR STUPID CALCULATION AND STOP AGAINST ACTING TAMILS……….

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலிகள் தமது பணம் புடுங்கும் வியாபாரத்தை வட்டுக் கோட்டைத் தீர்மானத்தை தூசு தட்டி இளைஞர்கள் மூலம் புலத்தில் இருந்து கூர்மையாக்க முயல்கின்றனர். இதுவே அனைவராலும் அவதானிக்க வேண்டியது. புலிகளால் தூக்கி எறியப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானம் ,திம்பு பேச்சு வார்த்தை ,ராஜீவ் – ஜெயவர்தன ஒப்பந்தம் ,…………இவை அனைத்தையும் மீண்டும் தூசி தட்டி எடுப்பதில் உள்ள உள் நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    புலத்திலுள்ள புலி முகவர்கள், தொடர்ந்தும் தமது சுருட்டல்களை இதன் மூலம் தொடர்ந்து நடத்த முடியும்.தமது வாழ்வை நடத்த முடியும். அத்தோடு இலங்கையில் உள்ள இளைஞர்கள் வழி இங்கே இருந்து பணம் கொடுத்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்தும் தன்மையை கூட இவர்கள் உருவாக்கலாம். அல்லது இங்கிருந்து இளைஞர்களை அனுப்பி சில விடயங்களை செய்யலாம். இது மீண்டும் ஆரம்ப காலத்தில் இயக்கங்கள் செய்தது போன்ற மறைந்து தாக்கிவிட்டு மறையும் நிலைக்கு மாறும் வாய்ப்பாகிவிடும்.

    இதனால் மீண்டும் தமிழர்களே பாதிக்கப்படப் போவது மட்டும் வேதனையான உண்மை. இந் நடவடிக்கைகளால் சந்தேகத்துக்கிடமாக அரச படைகளால் தொடர் தமிழர் கைதுகளும், துரோகிகளென கொலைகளும் இடம்பெறும். இதனாலும் எஞ்சியிருக்கும் தமிழர்களே அழிவார்கள்.

    புலிகளுக்கு ஆதரவான இளையோர்கள் இணையத்தின் வழி பரப்புரைகளை தொடர்ந்து செய்யும் வல்லமையும் கொண்டவர்கள். இது அனைவரும் அறிந்ததே. புலத்தில் பெரிதாக கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த சுதந்திரம் அல்கொய்தா அமைப்புகள் மேலத் தேசங்களில் தாக்குதல்களை நடத்தும் வரை எப்படி அமைதியாக இருந்து பின்னர் திடீர் கைதுகள் நடந்ததோ அது போன்ற தன்மையை தோற்றுவிக்கக் கூடிய அபாயத்தை ஏற்படுத்தும்.இங்குள்ள பள்ளிகள் கூட இவர்களது நடத்தைகளை கட்டுப்படுத்தாது. எனவே வருமுன் காக்கும் பணி பெற்றோர் கைகளிலேயே தங்கியுள்ளது.

    இவை மீறும் தருணத்தில் , பெற்றோர்களின் நடவடிக்கையாக , இது போன்ற செயல்களுக்கு புலத்தில் ஊதுகுழலாக இருக்கும் முக்கியமானவர்கள் தொடர்பான தகவல்களை காவல் துறையினரிடம் முறையிடுவதால் நிச்சயம் நன்மை உண்டாகும். இல்லாவிடில் இளையோருக்குள் ஆசைகளை உருவாக்கியும் , பணம் கொடுத்தும் அவர்களது வாழ்வு பாழாவது குறித்துக் கூட கவலைப்படாமல் தம் தேவைகளை நிறைவேற்ற இவர்கள் நிச்சயம் முனைவார்கள்.

    இன்று நடக்கும் வீதி மறியல் , போராட்டம் , தாக்குதல்கள் அனைத்துக்கும் பின்னால் புலத்து புலி முகவர்கள் உசுப்பேத்தி விட்டு பின்னால் நிற்கின்றனர். ஊடகங்களும் நடக்கப் போகும் அனர்த்தங்களை சிந்திக்காமல் தமது வியாபாரத்தில் கண்ணாக இருப்பது கவலைதரும் விடயமாக இருக்கிறது. இதுவும் தமிழ் திரைப்பட கீரோயிசமாகிவிட்டது. தலைவரது கீரோயிசம் மறையும் போது இங்கே பல கீரோக்கள் உருவாகி வருகிறார்கள். தொலைக் காட்சியிலும் பத்திரிகைகளிலும் பெயரும் படமும் வருகிறது. பழைய சிறை சென்ற செம்மல்களுக்கு மாலை அணிவித்த கதை இங்கே அரங்கேறி வருகிறது.

    இங்கே பிறந்து வளரும் குழந்தைகள் மற்றும் இளையோர் அப்பாவிகளாக எதையும் நம்பக் கூடியவர்கள். பல தவறானவர்களது பரப்புரைகள் மற்றும் வழிகாட்டல்கள் இவர்களது வாழ்வையும் பாழாக்கி விடும்.

    தாயகத்தில் இளையோரது அழிவுக்கு யாரெல்லாம் காரணமாக இருக்கின்றனரோ, அவர்களே புலத்தில் உள்ள இளையோரது அழிவுக்கும் காரணமாகப் போகிறார்கள்.
    பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை உங்கள் அன்புக்குள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

    Reply
  • kamal
    kamal

    வெளிநாட்டுப் புலிகளைப் பொறுத்தவரை தற்போது தங்களின் இருப்பை காட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர்கள் அவ்வப்போது ஏதாவது தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அந்தவரிசையில் இது இப்ப.
    கண்டன ஊர்வலங்கள்.
    கவனயீர்ப்பு போராட்டங்கள்.
    கொடி பட கட்டவுட்டுடனான கூத்துக்கள்.
    பாராளுமன்ற முற்றுகைகள்.
    தீக்குளிப்புக்கள் -மரண சாசனங்கள்
    தூதராலயங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள்
    ஒபாமாவுக்கு கடிதங்கள். போன் கோல்கள். ஈ மெயில்கள்
    மனிதச் சங்கிலி.
    கடையடைப்புக்கள்
    வீதிமறிப்புப் போராட்டங்கள்
    வணங்காமண்
    அடங்காப்பற்று
    இளையோர் போராட்டம்/படையெடுப்பு
    தண்ணிக்குழிப்புகள் (தேம்ஸ் நதி).
    பட கொடி கட்டவுட் இல்லாத கூத்துக்கள்
    சாகும்வரை உண்ணாவிரதம்
    தூதராலய உடைப்புகள்
    லேட்டஸ்ட் வட்டுக்கோட்டைத் தீர்மானம்/மினி வாக்கெடுப்பு
    whats next??

    Reply
  • thurai
    thurai

    //STOP YOUR STUPID CALCULATION AND STOP AGAINST ACTING TAMILS……….//ross

    you can say 100% support Tamileelam in Norway.
    are you able to ensure minimum 1% go back to Tamileelam from Norway? Tamileelam is a Dreamland of Bloodthirsty Tamils.

    thurai

    Reply
  • Kullan
    Kullan

    றெஸ்!
    மற்றவர்களை மடையர் என்று கூறமுன்பு அதை நடத்தியவர்கள் எப்படி எழுதியுள்ளார்கள் என்பதை நோவேயிய மொழியில் சரியாகவாசியும். முதலில் தமிழில் எழுதவும். நான் எழுதியதைச் சரியாக வாசிப்பீராயின் உண்மை விளங்கியிருக்கும். உதுறூ என்ற ஊடகம் நடத்திய தேர்தல்தான் இது. ரோட்டில் நிற்பவர்கள் எல்லாரும் கூப்பிடுவார்கள் குஞ்சு குருமன்கள் எல்லாரும் போய் வோட்டுப்போடுங்கோ. அவர்கள்யார் தேர்தல் நடத்த. எந்தஆணையகம் அனுமதித்தது. கணிதத்தைச் சரியாகப்படியும். தலைப்பு எழுதியிருந்தார்கள் உதுறூப்(தமிழ்மொழியாக்கம்- கூவல்> கத்தல்) நோர்வேவாழ் தமிழ்மக்கள் 98வீதமானோர் தமிழீழம் பிரிவதையே விரும்புகிறார்கள். நோர்வேயில் எத்தனை ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் தெரியுமா? வாக்குரிமை உள்ளவர்கள் எத்தனை பேர் தெரியுமா? சரியான கணக்கற்ற தகவல்படி அந்த ஊடகமே எழுதிய எண்ணி 18வயதைத் தொட்டவர்கள் 8797> வந்ததே 5594. இது எத்தனை வீதம் என்று உம்முறைய இங்கிலிசுவில் கணக்குப்பாரும். சிலவேளை இங்கிலிசு கல்குலேற்றர்கள் வித்தியாசமாகக் கணக்குப்பார்க்கிறதோ தெரியாது. இப்பதான் தெரிகிறது லண்டனில் தெருத்தெருவாய் நின்று தமிழ்மக்கள் இந்தக் கத்துக்கத்தியும் ஏன் ஆங்கிலேயனுக்கு ஒன்றும் இன்னும் சரியாக விளங்கவில்லை என்று. ஒருபானை சோறுக்கு ஒருசோறுதானே பதம். வோட்டுப்போகாதவர்கள் த.ஈழத்தை எதிர்ப்பர்வர்கள் என்பதை அறிக. முதலில் இருந்து தமிழையும் கணிதத்தையும் படியும். என்ன எல்லோரையும் தெருவில் கிடக்கும் செல்லாக்காசு என்று எண்ணினீரோ கண்டவன் நிண்டவன் எடுத்துப்போகவும் கூப்பிட்டவுடன் ஓடிப்போகவும் மக்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? வாக்களிக்க வந்தவர்களில் ஆதரவாக வாக்கித்தவர்கள் 98வீதம் என்பது வேறு. மொத்த நோர்வேவாழ் ஈழத்தமிழர்களில் 98வீதம் என்பது வேறு.

    Reply
  • Constantine
    Constantine

    Yes – Tamils will go,,, To buy holiday homes and land. Then they will rent it come back to Europe to live.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    அஜீவன் எழுதிய பின்னோட்டத்தில் பெரும்பகுதியுடன் ஒத்துப்போனாலும் கூட சிலசிறு விடயங்களை தொட்டுக்காட்டுவது முக்கியம். விகிதாராரப்படி என்று வரும்போது இனப்பிரிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றது. இது துவேசத்தைத் மேலும் மேலும் வளர்க்கவே உதவும். இதுதான் இவ்வளவுகாலமும் அரசியல்வாதிகளின் பிழைப்பாக இருந்தது. எல்லோரும் இலங்கையர் என்றால் வீதாசாரம் எதற்கு. சட்டம் என்பது ஒன்று என்றால் இதில் எதற்குப்பாகுபாடு. எல்லாமக்களும் எங்குவாழ விரும்புகிறார்களோ அரசியல் தலையீடு இன்றி வாழட்டும். இதேவேளை கடந்தகால அனுபவங்களில் நின்றும் சிலமுடிவுகளை எடுப்பது முக்கியமானது. சிங்களமக்களிடையேயும் துவேசம் வளர்க்கப்பட்டு மிக ஆளமாக வேரூன்றியுள்ளது. இதுவும் மிக இலகுவாகக் களைப்படவேண்டிய விடயமல்ல. மகாவம்சத்தை அரசியல் அமைப்புச்சட்டத்தில் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது முக்கியமானது. ஸ்கன்டிநேவியா போன்று இனத்துவேசம் கதைப்பவர்களும்> காட்ட முயல்பவர்களும் உடனுக்குடன் சட்டதால் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்களாயின் இனக்கலவரங்களைக் குறைக்கலாம். இந்த இனக்கலவரங்களும் இனமறுப்புமே ஆயுதம் தூக்கத் தூண்டியது என்பதை யாரும் மறுக்க இயலாது. சரித்திரங்கள் எம்பாடங்கள் முதன் முதலில் பண்டாரநாயக்கா ஒருதேசியவாதியச் சிந்தித்திருந்தால் நாடு இந்த நிலைக்கு வராது. முழு இலங்கை மக்களிடையேயும் உண்மையான மனமாற்றம் ஏற்படக்கூடியதாக அரசு அடித்தளத்தில் வேலைத்திட்டங்களைத் தொடங்குவது முக்கியம். சிங்களப்பாலர் புத்தகங்களில் தமிழர்கள் இழிவானவர்கள்> என்ற எண்ணத்தை ஊட்டுமாறு துவேசநச்சு விதைகளை விதைத்துவிட்டு ஒருமைக்பாடு கதைப்பது என்பது நடக்க்கூடிய காரியம் இல்லை. புலிகள் ஆயுதத்தில் மனநோய் கொண்டிருந்தார்களே தவிர அரசியல் என்ற ஒன்று உண்டு; இராஜதந்திரமாக சிலவிடயங்களைச் செய்யலாம் என்பதை உணராதன் விளைவே இது. புலிகள் பிழைவிட்டு விட்டார்கள் என்பதால் அரசு செய்வது சரி என்று ஆகிவிடாது.

    Reply
  • Nila
    Nila

    சந்திரன சொல்வதே முற்றிலும் உண்மை. வாழ்வதா? அழிவதா? போராடுவதா? என்பதை அங்குள்ள மக்களே தீர்மானிப்பார்கள். அடக்குமுறைக்கெதிராக மிருகங்கள் கூட கிளர்ந்து எழும். தமிழர்களின் எழுற்சி ஆயுதங்கள் தாங்கிய அறிவிலிகளால் முடக்கப்பட்டது. இன்று புலிகள் தம் புலிமுகங்களை ஈழத்தமிழர்கள் முன்னால் காட்ட முடியாது அதனால்தான் புலிகளை வளர்த்துவந்த வெளிநாட்டுத் தமிழர்களிடம் ஒடிவருகிறார்கள். நாம் கொடுத்து காசில் கொழுத்தவர்கள் இதை எப்படி விடுவார்கள். கண்ணை மூடிக்கொண்டு கொடுக்கச் சனம் இருக்கிறதே. இவர்களை எப்படி விடுவது. நோர்வேயில் வோட்டுப்போட்ட வெத்து வேட்டுக்கள் இன்னும் இருக்கிறன்றனவே. புலிவாழக் காசுவேணும். கேட்காமல் கொடுக்க வெங்காயங்கள் உண்டு. ருசிகண்ட பூனை விடுமோ?

    Reply
  • அஜீவன்
    அஜீவன்

    Kusumbo எழுதியவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருந்தாலும் சில கருத்துகளை அத்தோடு இணைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அது உங்கள் கருத்தோடு இணைந்து முன் செல்லும் என நம்புகிறேன்.

    புலத்தில் ஏதாவது பேசும் போது forward எனும் பதத்தை பாவிப்பார்கள். ஆரம்பத்தில் என்னுள்ளும் இது எரிச்சலை உண்டு பண்ணியது. முடிந்ததை விடு , அடுத்து என்ன செய்யலாம் என்று சொல்லு என்று முன்னோக்கிச் செல்ல எமது சிந்தனையை நகர்த்த முற்படுவார்கள். அது இப்போது எமக்கும் தேவை?

    “ஸ்கன்டிநேவியா போன்று இனத்துவேசம் கதைப்பவர்களும், காட்ட முயல்பவர்களும் உடனுக்குடன் சட்டத்தால் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்படுவார்களாயின் இனக்கலவரங்களைக் குறைக்கலாம்.” – Kusumbo
    இது சுவிஸிலும் உண்டு.

    இங்கே இனவாதம் பேசுவோர் சட்டத்துக்கு பயப்படுகிறார்களே தவிர தர்மத்துக்கு பயப்படவில்லை. அந்த மனித நேயம் நமக்குள் உருவாக வேண்டும். அதை நான் சுனாமி காலத்தில் பார்த்தேன். அக் காலத்தில் தமிழர் பகுதிகளில் இருந்த இராணுவமும் புலிகளும் ஒன்றாக உதவிகளை செய்ததையும், ஒரே மோட்டார் சைக்கிளில் ஏறி பயணம் செய்ததையும் நேரில் காண முடிந்தது. இது சமாதானத்துக்கான நல்லதொரு தருணம் என பலர் எண்ணினார்கள்.

    அதற்கு ஒரு உதாரணமான நிகழ்வு இது:
    http://www.blog.ajeevan.com/2005/01/blog-post_10.html
    (Monday, January 10, 2005)

    //எல்லோரும் இலங்கையர் என்றால் வீதாசாரம் எதற்கு. சட்டம் என்பது ஒன்று என்றால் இதில் எதற்குப்பாகுபாடு. எல்லாமக்களும் எங்குவாழ விரும்புகிறார்களோ அரசியல் தலையீடு இன்றி வாழட்டும்.//

    இங்கே அரசியல் தலையீடு வராது. ஆனால் குழு வாதம் என்பது தொடரும். இதை புலம் பெயர்ந்த எம்மாலும் விலத்த முடியாமல் இருக்கிறது. ஒரு விழாவுக்கு அல்லது நிகழ்ச்சிக்கு சென்றால் கூட ஒரு சிலரோடு மட்டுமே எம்மை குறுகிக் கொள்கிறோம். அந்த பழக்கப்பட்ட நாலு பேரோடு கடைசி வரை பேசிவிட்டு வருகிறோம். புதிய ஒருவரோடு கூட அறிமுகமாக எத்தனிப்பதில்லை. இங்கே வாழும் குழந்தைகளிடம் அந்த தாழ்வு மனப்பான்மை இல்லை.

    நாம், நமது விருப்பப்படி வாழ முடிந்தால் எம்மை சார்ந்தவர்கள் மட்டுமே எம்மோடு வாழ்வார்கள். இப்படி குழு சேர்வதில் உள்ள கேடுகளில் சாதி – மத – மொழி – இன நிலைப்பாடுகளில் இருந்து எம்மால் வெளிவர முடியாமல் ஆகிவிடும். அவை அனைத்தும் இல்லாமல் ஒழிக்க விகிதாசார படி குழுவாகாது கலந்து வாழும் முறை சிறந்தது என்பதை நான் வாழ்ந்த சிங்கப்பூரில் பார்த்திருக்கிறேன்.

    சிங்கப்பூர் மிகச் சிறியதொரு பிரதேசம். அதை நாடென்று சொல்வதே தவறு. ஒரு நகரத்தை உலகமே வியந்து பார்க்கும் தேசமாக ஆக்கிய பெருமை, அந்த சிறப்பு லீ குவான்யூ அவர்களது அவரது தீர்க்க தரிசனத்திலேயே உருவானது என்பார்கள் சிங்கப்பூரர்கள்.

    அங்கு வாழும் மக்களில் சீனர்களும் – மலாயர்களும் – இந்தியர்களும் (இதில் பெரும் பாலானவர்கள் தமிழர்கள்), யுரேசியர்களும் (ஆசிய ஐரோப்பிய கலப்பு = பெர்கர்) அடக்கம்.

    சிங்கப்பூரின் சைனா டவுண் ,அரபு ஸ்டிரீட் ,லிட்டில் இந்தியா (சிராங்கூன்) தவிர்த்து வேறு எங்குமே ஒரு இனம் குழுவாக தனித்து வாழ்வதை காண முடியாது. மேற் குறிப்பிட்ட இடங்கள் பாரம்பரிய விழுமியங்களாக வைப்பதற்கு பலரால் பெரு முயற்சி எடுக்கப்பட்டு விடப்பட்டது. இவற்றைக்கூட அழித்து விட வேண்டும் என்ற கருத்தே லீ அவர்களிடம் இருந்தது.

    இந்த கலப்பு வாழ்கையில் சன சமூக நிலையங்கள் வாயிலாகவும், பல்வேறு பொது நிகழ்வுகள் ஊடாகவும் அனைவரும் சந்திக்கும், அறிமுகமாகும் தருணங்கள் உருவாகின. ஒரு ஊர்காரர்கள் அடுத்த ஊர்காரரோடு மோதுவது தவிர்க்கப்பட்டது. இரு பகுதிகளிலும் அனைத்து இனமும் இருந்தது. கடுமையான சட்டங்கள் மெதுவாக தளர்த்தப்பட்டன. ஆட்சி ஒருவித சர்வாதிகாரமாக இருந்தாலும், அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் சமம் என்பதாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் சிறு குறைகள் இருந்தாலும் எவரும் அதனால் பாதிக்கப்படவில்லை என்பதே மகிழ்வான விடயம்.

    இந்தியா – சினா – மலேசியா எங்கிருந்து வந்திருந்தாலும் நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள் என்பதை அடி மனதில் பதிய வைத்தார் லீ. பூர்வீகம் இந்தியா என்றாலும் எமது நாடு சிங்கப்பூர் என்பதாகவே இருக்கும்.

    எமது தலைமைகள் இங்கேதான் ஆரம்ப பிழை விட்டார்கள்.

    பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலேயே
    சிங்களவர் – சிங்களவர் என்றும்,
    தமிழர் – இலங்கைத் தமிழர் , இந்தியத் தமிழர் என்றும்,
    முஸ்லீம்கள் – இலங்கை சோனகர் , இந்திய சோனகர் என்றும்
    பறங்கியர் , மலே (ஜாவா தீவிலிருந்து வந்தோர்)என்றும் எழுதப்பட்டு பிறப்பிலேயே பிரிவினையை நம்மை அறியாமலே விஷமாக செலுத்தி விட்டார்கள். இதை அன்றைய அரசியல்வாதிகள் ஏன் செய்தார்கள் என்பது தெரியாத வினா?

    அனைவரும் சிங்கப்பூரர்கள் என்பது போல, அனைவரும் இலங்கையர் என வைத்திருக்கலாமே? ஒற்றை ஆட்சி என்றால் இவையும் மாற வேண்டும்.

    அத்தோடு ஒரு இனத்தை அவமதிக்கும் கருத்துகள் பாடப் புத்தகங்களில் மட்டுமல்ல , மனங்களில் கூட எழுவது தவிர்க்கப்பட வேண்டும். பிரிவினையற்ற எண்ணமும் , கருத்துகளும் புத்தரது போதனைகளில் இருந்தாலும் , அவை அதை பின்பற்றுபவர்களால் சரியாக நடைமுறைப் படுத்தப்படாததற்கு ஆரம்ப கால சிங்கள தலைமைகளுடன் இருந்த தமிழ் தலைமைகளும் தவறிழைத்தன என்றே சொல்லத் தோன்றுகிறது. இவை அனைத்தும் கலந்து வாழ்தல் , தன் நாட்டின் சகோதர மொழியை கற்றல் , மனம் விட்டு பேசுதல் , நம்பகத் தன்மையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமே உருவாக்க முடியும்.

    ஒருவன் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும். அந்த நம்பிக்கை இருவருக்குள்ளும் வந்து விட்டால் அதுவே ஆரம்ப வெற்றி….நம்பிக்கைதான் வாழ்கை.

    நன்றி

    Reply
  • Nila
    Nila

    துரை சரியாகச் சொன்னீர்கள். ஈழத்துக்குத் திரும்பிப் போக முடியாத நோவேதமிழர்களுக்கு தமிழ்ஈழம் வேண்டுமாம். மக்கள் சாகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு புதிய சுடலைகளைத் தயார்படுத்துகிறார்கள் தமிழ்ஈழம் என்று. பிரந்துபோவதோ சேர்ந்து வாழுவதோ என்பதை அங்குள்ளவர்கள் தீர்மானிக்கவும். அப்பு ஆச்சியெல்லாரையும் வெளிநாட்டுக்குக் கூப்பிட்டு விட்டு விட்டு யாருங்கு அங்கு தமிழ்ஈழம் என்று கும்மி அடிக்கிறீயள். இஞ்சைவந்த அப்பு கோவணமே களட்டமாட்டன் என்று நிக்கிறார். தமிழீழம் யாருக்கு. இப்ப அங்குள்ளவர்களுக்கு முதல் இப்பதேவை உணவு; உடை; உறையுள். சொந்த இனத்தையெ வதைத்த தலை எங்கையோ? அவரப்பிடித்துக் கொடுத்தாலே போதும் மக்கள் நிம்மதியாகக் கண்ணை மூடுங்கள். ……………………

    Reply
  • மாயா
    மாயா

    நோர்வேயில தமிழீழம் உருவாக்க சொல்கெய்ம் கிட்ட நிலம் கேட்கிறதுதான் மீதி வேலை?

    தமிழீழம் இங்கதான் என்று காட்டினது ஆரப்பா? , நோர்வேயில உள்ள சிறீலங்கா எம்பஸிக்குள்ள புகுந்து , பொடிகள் புலிக் கொடியை இல்ல நாட்டிட்டு வந்திச்சினம் ?

    Reply
  • Nila
    Nila

    அஜீவனின் கருத்துக்களுடன் நானும் சில விடயங்களைச் சொல்ல முனைகிறேன். ஐரோப்பாவில் முன்னுக்குப்பார் முன்னுக்குப்போ என்பார்கள். இவர்கள்தான் கல்யாணம் கட்டுவதற்கே அனுபவம் கேட்பவர்களுமாவர். கீழத்தேயத்தவரை இறந்தகாலத்தில் வாழ்பவர்கள் என்று நகைப்பர். காரணம் எமது இறந்தகாலங்கள் வளமாக இருந்தன. காலணித்துவ காலங்களில் எம்மையும் எம்மக்களையும் கசக்கிப்பிழ்ந்தவர்கள்.
    குழுவாதம் பிரிவுகள் என்பது மனித இயல்பு இது தவிர்க்க முடியாத ஒன்றே. குசும்பு சொல்வது போல் விகிதாசாரம் எனவந்தால் இனம் என்பது தூக்கிப்பிடிக்கப்படும். சுனாமி எனும் பொது எதிரி வந்தபோது இணைந்து செயற்பட்டார்கள். ஏன் இந்தியாவின் காந்திபுத்திரர்கள் சமாதானம் என்று சங்காரம் செய்தபோதும் தமிழ் சிங்களம் என்றுபாராது இணைந்து செயற்பட்டார்கள். ஆனால் தமிழர்களின் பிரிவுகள் இணைந்து செயற்பட்டார்களா? இது கேள்விக்குரியது. நான் என்றும் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றிசொல்லும் வார்த்தை இதுதான் “தமிழ்மக்களின் தலைவிதி யாரிடம் நாம் அடிமையாக வாழ்வது என்பதுதான்” மனிதனுக்கு இறந்தகாலம் வரலாறு மட்டுமல்ல அனுபவமும்.பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட வெள்ளைப் பிள்ளை ஒன்றை வெள்ளையர் மொழில் மற பழையதை மற முன்நோக்கிப்பார்:எதிர்காலத்தைக் கவனி என்றர்கள் பிள்ளை பார்த்தது மறந்தது. அதன்பின் மீண்டும் இரண்டு தடவை வல்லுறவினுள் தள்ளப்பட்டது. சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பது போல் இறந்தகாலம் அனுபவம் என்பது ஒருவகையில் எமது எதிர்காலப்பயணத்துக்கான தற்பாதுகாப்பே. நடந்ததை எண்ணிப்பழிதீர்பதை விடுத்து மறப்பதை மறப்பதும்> தேவையானதை எடுத்துச் செல்வதும் முக்கியம்

    Reply
  • அறிவானவன்
    அறிவானவன்

    அஜீவன் on May 12, 2009 10:03 am சிங்கப்பூரை உருவாக்கிய லீ குவான்யூ, இலங்கையை பார்த்த பின் இலங்கை போல்

    Well done , well said அஜீவன்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என்பது, நேருவின் மொழிவாரி விளையாட்டால் “தமிழ்நாடு” இறுக்கிப் பிடித்த உயிர் மூச்சாகும். அதையே இன்று “கும்பலில் கோய்ந்தா போட்ட” கலைஞர் கருணாநிதி, “வடக்கு வழங்குகிறது, தெற்கு தேறுகிறது” என்கிறார். யாருக்கு வழங்குகிறார்கள்? “மில்லியன் டாலர் குவஸ்டின்”. “அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்” இப்போது இருந்தாலும் இதையேதான் செய்திருப்பார்!. “சிங்களவன் தோலை செருப்பாக தைத்துப் போடுவேன்” என்று கூறியவர்கள், தற்போது “சிங்களவனுக்கு போலை பிடிக்கும் போது”,இதை நிச்சயம் செய்வார்கள். என்னமோ, மங்கையற்கரசியும், காண்டீபனும் கலைஞரை(சிவபெருமான்) அழைத்துக் கொண்டு “சோனியா காந்தியிடம்” போய்,”பார் வேந்தே என்னைப் பார் வேந்தே” என்று கூறினால்,சோனியா காந்தி,”தமிழர் உரிமை பொற்கிழியையை” அள்ளி கொடுத்துவிடும் அளவுக்கு இது “ஓவர் சிம்ளிஃபைடா?”. மோட்டு சிங்களவன் என்பதும், வீவாண்ட் டமிலீலம் என்பதும், “இனப் பிரச்சனை? என்று ஒன்று இருப்பதை மறைத்து”, பேரினவாதம்? தன் கோர முகத்தை, “ஒளித்துக் கொள்ள” இடமளிக்கிறது. நீங்கள் உங்களுடைய உரிமைக்காக ஆயுதம் தாங்கி போராட வேண்டாம், “உங்கள் உரிமை என்னவென்று புரிந்துக்கொண்டாலே போதும்”. வடக்கு வழங்குவதும், சிங்களவர்களில் சிலர், இனவாதத்தை “ஒட்டு மொத்த தமிழினத்தின்? மீதும்” “வருங்காலத்தில்” நிறுவனமயப்படுத்தும் பாதையில், தீர்மானமாக சென்றுக் கொண்டிருப்பதும், டமிலீலம் வியாபாரத்தனத்திற்கு ஆதரவும், அதற்கு கலைஞரின்(தமிழக அரசியல்வாதிகள்) அணுசரனையும், “ஒரே நோக்கம் கொண்டவையே”.

    Reply
  • ross
    ross

    //are you able to ensure minimum 1% go back to Tamileelam from Norway// thurai
    This is not about going back, This is about saving thousands of Tamils and free to live in our homeland with equal rights.

    The sucees is the percent of people voted/attendenedd the norway-election. We, Tamils, don’t want to live as slaves or 2nd citizen in our own country…….

    Reply
  • Thirumalaivasan
    Thirumalaivasan

    இங்கே பிறந்து வளரும் குழந்தைகள் மற்றும் இளையோர் அப்பாவிகளாக எதையும் நம்பக் கூடியவர்கள். பல தவறானவர்களது பரப்புரைகள் மற்றும் வழிகாட்டல்கள் இவர்களது வாழ்வையும் பாழாக்கி விடும். தாயகத்தில் இளையோரது அழிவுக்கு யாரெல்லாம் காரணமாக இருக்கின்றனரோ, அவர்களே புலத்தில் உள்ள இளையோரது அழிவுக்கும் காரணமாகப் போகிறார்கள். பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை உங்கள் அன்புக்குள் அடிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.—நண்பன்

    இக்கருத்தை வலியுறுத்தும் அதே வேளை புலம்பெயர்ந்த பெற்றோர்கள் எவ்வளவு து}ரம் ஈழத்து அரசியலில் மற்றும் உலக அரசியலில், ஏன் பொது அறிவில்கூட அறிவிலிகளாக இரக்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். தமது அறிவை வளர்த்துக்கொள்ள தாமே தமக்குக் கடிவாளம் இட்டுக்கொள்ளும் பொதுசனங்களுக்கு தமது பிள்ளைகளுக்கு சிக்கலான எங்கள் அரசியலை புகட்ட வாய்ப்பு இல்லை. அதை எதிர்பார்ப்பதும் மடமை. இல்லாவிட்டால் வா என்றதும் கேட்டுக்கேள்வி இல்லாமல் பார்லிமென்ட் ஸ்குவையாருக்கு தமது பிள்ளை குட்டிகளையும் காவிக்கொண்டு செல்லும் எம்மவருக்கு ஒர நிமிடம் வன்னியில் நிகழும் அவலங்களின் ஊற்றுப்பற்றியோ> விடுதலைப்புலிகள் மக்களைக் கேடயங்களாகப் பாவிப்பது பற்றியோ> சிந்திக்க நிதானமில்லை.

    ஒரு தடவை ஜீடீவியிலும் தீபத்திலும் காட்டப்படம் நேரலைகளில் காணும் முகங்களை உற்று நோக்குங்கள். பேட்டியளிக்கும் பொதுமக்களின் கருத்துக்களை ஊன்றிக் கவனியுங்கள். அவர்களின் முகத்திலும்> வார்த்தைகளிலும் தீவிரமான அறிவார்த்தமான கருத்துக்கள் வெளிப்படுகின்றனவா? இல்லையே. இந்நிலையில் ஆளுக்காள் பேசிக்கொண்டும் பின்னூட்டங்கள் விட்டுக்கொண்டும் இருப்பதைவிட தீவிரமாக இலங்கை அரசியல்> உலக அரசியல்> விடுதலைப் போராட்டங்கள் பற்றிய ஆழ அகலங்களை ஆங்கிலத்தில் சிறு கட்டுரைகளாக அல்லது 12-16 பக்க கையடக்க பம்ப்லட்டுகளாக (முன்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுமலர்ச்சிக்கழகம் 1978-83களில் வெளியிட்டது போல) சொந்தக்காசிலாவது வெளியிட்டு டீவைஓ போன்ற பல்கலைக்கழக மாணவர்களைச் சென்றடைய வழிசெய்யுங்கள். பின்னூட்டங்களை விட அவை சமூகப் பயன்மிக்கவையாக இருக்கும். தேசம்நெற் வெளியீடாகவே இது அமையலாம். அஜீவனின் கடிதம் மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு பற்றிய குலத்தின் கட்டுரை என்பன மிகவும் முக்கியமானவை. ஆங்கில அறிவுள்ளவர்கள் இவற்றை ஆங்கில மூலமாக வெளியிட்டால் அதிகமான இளையோரைச் சென்றடையும். அவர்களையும் காலக்கிரமத்தில் இந்த ஈழப்பிரச்சினை பற்றிய பரந்தபட்ட அறிவைத்தேட வாய்ப்பளிக்கும். செய்வீர்களா?

    Reply
  • kosompo
    kosompo

    ஜனநாயகம்! அப்ப என்ன புலிவாலை மீண்டும் பிடிக்கலாம் என்கிறீரா? புலிகளிடன் என்று அரசியல் இருந்தது? 16வயதில் வெளிக்கிட்த தம்பி இன்னும் 16ஐ தாண்டேல்லை…… இத்தனை உயிர்ளைக் காவு கொண்டது போதாதா? இன்னும் யாருடைய உயிர்களை எடுக்க நிற்கிறீர்கள்……..

    Reply
  • Kullan
    Kullan

    டெமோகிரசி செல்வதுபோல் இனப்பிரச்சனை என்ற ஒன்று இருக்கிறது என்ற ஒன்றை யாரும் மறக்கக்கூடாது. இப்படி ஒரு இனப்பிரச்சனை உள்ளது என்பதை வெளியில் கொண்டுவந்து மக்களிடையே போட்டவர்கள் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள்தான். பிரிந்துபோகும் சுயநிர்ணய உரிமை உள்ளது என்று சமூகத்துக்கு விளங்கப்படுத்தியவர்களும் அவர்கள்தான். இப்படி ஒரு மக்கள் பேரளிவு ஏற்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக அக்கறையாக இருந்திருந்தார்கள்.நாடு நாடாய் சென்று எம்பிரச்சனையை வெளியுலகிற்குக் கொண்ட வந்தார்கள். புலிகளைப்போல் எம்மை அகதிகளாக்கியதுவு மல்லாமல் வெளிநாட்டுத்தெருக்களில் பட்டிணியாகவும் பிச்சைகேட்டும் நிற்க விடவில்லை. பிரபாகரனின் குழந்தைப்பிள்ளைக் கூத்தால் அமிர்தலிங்கம் போன்றோர் எத்தனை தடவை இலவசமாக கோடேறினார்கள் தெரியுமா? இவர்களுக்குக் கிடைத்த பரிசு என்ன? வழக்கறிஞராக இருந்த அமிர்தலிங்கம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பண்ணாகத்தைப் பிறப்பிடாகக் கொண்டாலும் மூளாய் வாழ்ந்து வந்தவர். அரசியலில் வந்து சாகவேண்டும் என்ற எந்த எழுத்தும் இல்லை. மக்களிடையே எழுற்சியை ஏற்படுத்தியவர்கள் இவர்கள்தான் என்பதை யாரும் மறக்கவே மறுக்கவோ முடியாது

    Reply
  • ross
    ross

    அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்தான் வல்வெட்டித் துரைக்கு போய் இரத்த பொட்டு வைத்து போராட்டத்தை தொடக்கியவர், இளம் பொடியளை உசுப்பெத்தி விட்டவர். பிறகு இத்தியாவுடன் பாதை மாறி போய், பயணம் மேல போய் விட்டார்.

    தமிழர்களின் இன்றைய நிலைக்கு, இவர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறக்கவே மறுக்கவோ முடியாது.

    Reply
  • thurai
    thurai

    //are you able to ensure minimum 1% go back to Tamileelam from Norway// thurai
    //This is not about going back, This is about saving thousands of Tamils and free to live in our homeland with equal rights.//ross

    If the voting helps Tamils, please say to LTTE lay down their arms and Surrender. At the same time stop talking about Piabakaren and LTTE.

    thurai

    Reply
  • BC
    BC

    30 வருடங்கள். புலிகள் தான் தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் என்பதை யாரும் மறக்கவே மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

    Reply
  • ross
    ross

    //If the voting helps Tamils, please say to LTTE lay down their arms and Surrender. At the same time stop talking about Piabakaren and LTTE.//

    Why? ….. They are freedom fighters and fight barvely like brave Tamils. They would fight until we get Tamil Eelam.

    Reply
  • thurai
    thurai

    //Why? ….. They are freedom fighters and fight barvely like brave Tamils. They would fight until we get Tamil Eelam//ross

    Please say your freedom fighters to save at least 10 Tamils in Vanni and 1 Square Km of Land.

    thurai

    Reply
  • BC
    BC

    தலைவர் மாதிரி Rossம் சனத்துக்கு முடிவுகட்டுவதில் உறுதியாக தான் இருக்கிறார்.

    Reply
  • kosompo
    kosompo

    றோசு, நோர்வேயில் நடந்த ஒருகேலிக்கூத்தை தேர்தல் என்று சொல்கிறீரே. எந்தத் தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தது. நிகழ்தகவு (மன்னிக்கவேண்டும் உங்கள் மொழியில் இதை ஸ்ரட்டிஸ்ரிக் என்பார்கள்)படி வாக்குரிமை பெற்றவர்கள் மிக மிக அதிகம். உம்மைப் போன்றவர்கள் உள்ளவரை புலிகாட்டில் மழைதான். தேர்தலை நடத்திய ஊடகம் ஒருபிரபல்யமானதோ அன்றி பெரிதாகப் பேசப்படும் அமைப்போ கிடையாது. இப்படி ஒருதேர்தல் நடந்தது என்று எத்தனை வெள்ளையருக்குத் தெரியும்? இப்படித்தான் எல்லாவிடயமும் நடந்து இன்று இந்த நிலையில் எம்சனம் நிற்கிறது. நானும் ஒரு தேர்தல் நேற்று நடத்தினேன். நூறு வீதமான மக்கள் பங்குபற்றினர். அந்த நூறுவீதமும் தந்தபதில் தமிழ்ஈழம் வேண்டாம் என்று. நம்புகிறீரா? எனது வீட்டில் நாம் 10பேர் இருக்கிறோம். இத்தேர்தலின் முடிவு நோர்வேவாழ் தமிழ்மக்கள் 100 வீதமானவர்கள் தமிழீழம் வேண்டாம் சரியான அரசியல் தீர்வே வேண்டும் என்கிறார்கள்.

    Reply
  • kosompo
    kosompo

    //They are freedom fighters and fight barvely like brave Tamils. They would fight until we get Tamil Eelam.//ross

    கடசியாகப் பிச்சை எடுக்கக் கூட அங்கு மக்களை விடமாட்டியள் போலை கிடக்கு

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //They would fight until we get Tamil Eelam.- ross//
    ஏன் ross அந்த அவர்களுள் நீங்கள் அடக்கமில்லை?? யாராவது உயிரைக் கொடுத்து போராட வேண்டும். நீங்கள் நோகாமல் நொங்கு குடிக்கலாம் என்கிறீங்க. தலை போல உங்களுக்கும் நல்ல சிந்தனைகள்.

    Reply
  • Nila
    Nila

    மக்களின் இந்தநிலைக்க றொஸ் கூட்டணியோ அமிர்தலிங்கமோ காரணம் இல்லை.புலிகள் மட்டுமே காரணம். வல்வெட்டித்துறையில் இரத்தப்போட்டை யார்கேட்டது. இரத்தத்தைக்காட்டி கடசியல் இரத்தவெள்ளத்தில் பிட்டுடது யார்? சட்டவல்லுணர்கள் சட்டரீதியாக தீர்க்க முயன்றார்கள். அரசியல் ரீதியாக தீர்வென்றைக்காண முயன்றார்கள். இதைவிட்டுப்போட்டு அரசிலையே துப்பாக்கிகளால் சுட்டுச்சிதறடித்தபின்பு அரசியல் அரசியல் என்றால் அது எப்படி வரும். அதைத்தானே புலிகள் எப்பபோ போட்டுத்தள்ளி விட்டார்களே

    Reply
  • indiani
    indiani

    வட்டுக்கோட்டை தீர்மானத்தின் நாயகனே அமிர்தலிங்கம் இந்த அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றதிற்கு இன்று என்ன? பதில் புலிகளம் இன்று தீர்மானத்தை கேவலப்படுத்தும் கி பி அரவிந்தன் கோஸ்டி பதில் தரமா? இந்த அமிரின் கொலையை கண்டிக்குமா? இந்த வாக்கெடுப்புக்கு முன்பு அமிரின் கொலைளை கண்டித்து இந்த தீர்மானத்தின் மீது ஏன் இப்படி செய்கிறார்கள் என்பதை யபருக்கும் விளக்கமளித்தாக எமக்கு தெரியவில்லை எல்லாம் இதுவும் ஏக போகபிரதிநிதித்துவத்தின் விளைவோ எடுத்தது எல்லாம் செய்யலாம் நீங்கள் போடு எண்டால் போட வேண்டும் தெருவுக்கு வா எண்டால் வரவேண்டும் இல்லாவிட்டால் அழுது எண்டாலும் கூப்பிடுவியள்.

    கி பி அரவிந்தன் உமது மாக்ஸீய அரசியல் புளித்து விட்டது புலிகளின் திருகு தாளங்களை இப்போ நீங்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டு புலிகள் தான் கட்டாயப்படத்தி செய்விக்கிறாங்கள் எண்டு கதையும் வேற அளப்புக்கு குறைவில்லை.

    வாக்களித்தவர்களுக்கு மண்டையில் என்ன இருக்கு தாங்கள் ஜரோப்பிய பிரஜைகள் எப்படி ஈழப்பிரச்சினைக்கு வாக்களிக்க முடியும்.
    முதலில் வெளியேறி கஸ்டப்படும் மக்களுக்கு வணங்கா மண்ணுக்கு சேர்த்த உணவுப் பொருட்களை அனுப்பச் சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடாத்தினால் பிரயோசனமாக இருக்கும்.

    வணங்காமண் பொருட்கள் எட்மன்டனில் தனியார் களஞசியத்தில் கிடந்து பழுதடைகிறதாம் புலிகள் அவரை வித்துவிட்டு காசுதரும்படி கேட்டுள்ளனர் ஆனால் அந்த கடை முதலாளி பின்னாளில் தனக்கு பிரச்சினை வரப்போகுது எண்டு பயப்பிடுகிறாராம்.

    Reply
  • indiani
    indiani

    குலன் இன்று தெருத்தெருவாய் பல லட்சம் பேர் வந்தாலும் ஒன்றும் நடக்குதில்லை ஆனால் ஒரு அமிர்தலிங்கம் இன்று நடக்க முடியாத கிழவனாக அல்லத பேச்சு தடுமாறும் வயதினனாக எண்டாலும் உயிரோடு இருந்திருந்தால் அமிர்தலிங்கம் சொல்வதை உலகம் மதிக்திருக்கும். அது எல்லோரக்கும் விளங்கக் கூடியது.

    Reply
  • மாயா
    மாயா

    சாகடி அல்லது செத்து மடி எனும் மன நோயாளருக்கு
    //They are freedom fighters and fight barvely like brave Tamils. They would fight until we get Tamil Eelam.//ross என்று சொல்லத் தோன்றும் They என்று யாரையாவது கொன்று உங்கள் தேவை நிறைவேறினால் போதும் என்ற மனம்.

    We are freedom fighters and fight barvely like brave Tamils. We would fight until we get Tamil Eelam.என WE என்று கூட உங்களை சாகடித்துக் கொள்ளும் மன நிலை இல்லை. இதுதானப்பா பொதுநலம்.

    Reply
  • Kullan
    Kullan

    இன்டியானி சொல்வது முற்றிலும் உண்மை. அன்றைய அரசியல்வாதிகள் ஒரு உயிரை எடுத்தார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? அமிர் அன்று சொன்ன சொற்கள் இன்றும் என்காதுகளில் கேட்கிறது. “தம்பியவை நீங்கள் போராடுங்கள் நாம் தடுக்கவில்லை. அதேபோல் எங்கள் பாதையிலும் நீங்கள் வராதையுங்கோ. எங்களாலை முடிந்ததை நாம் செய்கிறோம். அன்று இந்தியாவுடனே இலங்கையரசுடனோ கதைக்கக் கூடாது என்று தானே சுட்டீர்கள் இன்று உங்கள் பிரதிநிதிகளாக த.தே.கூ அனுப்பினீர்கள். இராச்சத பக்கவைத் தெரிவு செய்தீர்கள் இது எந்தக்கணக்கு. அன்று தமிழீழம் என்ற சொல்லை எமக்கு உச்சரிக்கத்தந்த அவர்களைச் சுட்டபோதே தமிழீழத்தையுமல்லவா சேர்த்துச் சுட்டீர்கள். இந்தியானி சொன்னதையே மீண்டும் நினைவுறுத்துகிறேன். //ஒரு அமிர்தலிங்கம் இன்று நடக்க முடியாத கிழவனாக அல்லத பேச்சு தடுமாறும் வயதினனாக எண்டாலும் உயிரோடு இருந்திருந்தால் அமிர்தலிங்கம் சொல்வதை உலகம் மதிக்திருக்கும். //

    Reply
  • Kusumbo
    Kusumbo

    என்கேள்விக்கு தயவுசெய்து யாராவது பதில் சொல்லுங்கள். இலங்கையில் நடப்பதைப் படங்களில் பார்த்தே பதறுகிறது உலகச்சனம். இவ்வளவையும் பக்கத்தில் இருந்து பார்த்தும்; கட்டிப்பிடித்துக் கொண்டு நின்று படம் எடுத்து சாகப்போ என்று அனுப்பி விட்டு விட்டு படம்படமாக அல்ல நேரே பார்த்தும் இரங்காத வேலுப்பிள்ளையின் மகன் என்ன அரக்கனா? இலங்கையில் அரக்கர் வாழ்ந்ததற்கு இதுதான் சாட்சியா? தயவு செய்து தெரிந்தால் கூறுங்கள். புலிகளாலும் புலித்தலைமைகளாலும் இது எப்படி முடிகிறது. கண்முன்னால் சிதறிக்கிடக்கிறது பிணங்கள் சிரித்தபடி படத்துக்க தோற்றம் கொடுக்க எப்படி முடிகிறது?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Kusumbo
    அரக்க இனம் கூட தன் இனம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்ததில்லை. ஆனால் தலையோ அடுத்தவர்களின் உழைப்பில் சுகபோகம் கண்டு அதை இழக்க விரும்பாது, தன் இனத்தையே காவு கொடுத்து, தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு மனநோயாளி.

    Reply
  • thurai
    thurai

    //என்கேள்விக்கு தயவுசெய்து யாராவது பதில் சொல்லுங்கள்//Kusumbo

    அநேக தமிழர் மத்தியில் அன்பிற்கு இடமில்லை. பணத்திற்காக அகதிகள் வேசம்போட்டு வாழத் தொடங்கியவர்கள் நாங்கள். எங்கழுடன் கொடிய மனம் கொண்டவர்கழும் சேர்ந்து வ்ந்து விட்டார்கள், சேர்ந்தும் வாழ்கிறார்கள்,

    இந்தக் கொடியவர்கள் பணத்திற்காக கொலை, கொள்ளைகள் செய்பவர்கள். ஈழப்பிரச்சினையை இவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். இவர்களின் பின் அப்பாவித் தமிழரும் பிள்ளைகழும் வீதியில் செல்கின்றார்கள்.

    மேற்குலகம் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு தடைசெய்துவிட்டது. கணிசமான தமிழர் இந்தக் கொடியவர்களை அடையாளம் காண்த் தொடங்கிவிட்டன்ர். சிங்களவ்ர் கொடியவர்கள் என்று கூறியும், தமிழ்ர்களின் பிணங்களையும் காட்டுவதே இவர்களின் வாழ்க்கை.

    துரை

    Reply
  • Nila
    Nila

    வட்டுக்கோட்டைத்தீர்மானம் ஒரு கேலிக்கூத்தல்ல. அதன் முடிவுகளை பலாற்காரமாக தம்கைகளில் எடுத்த புலிகளாலேயே அது கேலிக்கூத்தானது. எத்தனையோ நாடுகள் இரத்தக்களரியி ன்றிப் பிரிந்து போயிருக்கின்றன. அதற்கான சரியான ஒரு தளத்தை அமைக்காது கொலை வெறியுடன் நின்ற புலிகளே அதைக் கேலிக்கூத்தாக்கினார்கள்.வீர தீரமற்ற தற்கொலைக் கும்பலையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தாங்கள் தற்கொலை செய்வது மட்டுமல்ல மக்களையுமல்லவா கொன்று குவிக்கிறார்கள்

    Reply
  • palli.
    palli.

    குலன் தங்கள் கருத்தில் பல்லி கருத்த்து முரன்படுகிறேன். தாங்கள் சொல்வது போல் அமிர் இன்று இருந்தால் நிலமை வேறுதான். அதுக்காக அவர்களை உத்தமர்கள் என்பதில் பல்லிக்கு உடன்பாடு இல்லை. சுந்தரத்தின் கொலை பிரபா என்னும் முட்டாளால் செய்யபட்டது. ஆனால் சுந்தரத்தை அழிக்கும்படி யார் பிரபாவை தூண்டி விட்டது அம்மையார் மங்கயர் இதுக்கு பதில் சொல்லட்டும். அதே போல் இன்று அமிர் கூட சில வேளை சம்பந்தர் போல் எடுபிடியாக இருந்திருக்கலாம். இருப்பினும் அவர்களது திறமையை பல்லி குறைவாக எடைபோடவில்லை. ஆனால் அவர்களுக்கும் தமிழர் அழிவில் போதிய பங்கு உண்டு. இராசதுரைக்கு கிழக்கை ஒதுக்கி விட்டு அவருக்கு எதிராக காசியை உசுப்பேத்தியது அமிர் இல்லாமல் யார். புலிகள் தமிழரால் மன்னிக்க முடியாதவர்கள். ஆனால் கூட்டனியினரோ தமிழரால் மறக்கபட வேண்டியவர்கள் என்பது பல்லியின் தனிகருத்து.

    Reply
  • palli.
    palli.

    நண்பர்களே தயவு செய்து வட்டுகோட்டை கொட்டைபாக்கு வியாபாரத்தை நிறுத்தி இன்று வன்னியின் அவலநிலை, அந்த மக்களின் எதிர்காலம் என்ன, இதை பற்றி சிந்திப்பதே நல்லது. வட்டுகோட்டை தீர்மானம் ஒரு வெள்ளை பேப்பர் மட்டுமே.

    Reply
  • santhanam
    santhanam

    கி.பி அரவிந்தன் நோர்வேவாழ் தமிழர் தலையில் சந்தனம் அரைத்துவிட்டார் எமது போரட்டத்தை வளர்த்தபெருமை நோர்வேயும் ஓருவகையில் காரணியாக இருந்துள்ளது 1970காலபகுதியில் சீநோர் நிறுவனத்திற்கு ஊடாக பலவலுசக்திகொண்ட வள்ளஉற்பத்தி எமது இளஞையர்கள் கடல்தாண்ட உதவியது. போரட்டத்தை அழித்தபெருமையும் நோர்வேயையும் சாரும் 2002காலப்பகுதியில் சமாதான வேடம் போட்டு உலகை ஒன்று திரட்டி தமிழனை நடுவீதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    santhanam
    மக்கள், அரவிந்தன் போன்றவர்களை அரைப்பார்கள். அவரை பிரமுகராக்கியவர்களுக்கும் அடி இருக்கு

    Reply
  • Nila
    Nila

    பல்லியவர்களே. உங்களைக் காணாது தவித்துப் போனோம். சரியாகக் குறிசொல்ல யாரும் இல்லை. நீங்களாவது கி.பிக்கு சரியாகக் குறி சொல்லியிருப்பீர்கள். எங்கு சென்றிருந்தீர்கள்!

    Reply
  • Kullan
    Kullan

    பல்லி! நீங்கள் மேல்கூறியவற்றில் எனக்கு உடன்பாடு இருப்பினும் ஒருவிடயத்தை நான் இங்கு சுட்டீக்காட்ட விரும்புகிறறேன். சுந்தரம் படுகொலையில் மங்கையற்கரசி அமிருக்கோ சம்பந்தம் இல்லை. சுந்தரம் எனக்கு நன்கு தெரிந்துவர் மட்டுமல்ல படுகொலை செய்வதற்கு முன் நான் சுந்தரத்துடனும் தளபதி கண்ணனுடனும் தொடர்பு கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் புலி புளொட் பிரிவுற்று சகோரக்கொலைக்களம் திறக்கப்பட்டது. இதேவேளை இறைகுமாரன் இறப்பதற்கு முன் பிற்பகல் 6 மணியளவில் இறைகுமாரன் என்வீட்டித்தான் இருந்தார் (இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பது இத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளங்கும்). நிச்சயமாக என்னால் சொல்முடியும் அமிர்தலிங்கம் மங்கையயற்கரசி போன்றோர்ருடன் புலிகளும் மிக மோசமாக முரண்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். பிரபாகரனும் அவரின் துணைவனும் சுந்தரத்தைச் சுற்றித்திரிகிறார்கள் என்பதை சுந்தரம் நன்கறிந்திருந்தார். சுந்தரம் கொலைபற்றி பல ஊகங்கள் இருந்தாலும் சுந்தரத்துடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு எல்லாம் நன்கு தெரியும். பலர் தேடப்பட்டார்கள் போடப்பட்டார்கள். எது எப்படி இருப்பினும் எந்தஒரு சகோதரப் படுகொலையும் நல்லமுடிவைத் தந்ததும் இல்லை தரப்போவதும் இல்லை. ஒன்று மட்டும் உறுதி சுந்தரம் இருந்திருந்தால் குறைந்தபட்சம் புலிகளின் தலைவிதி மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். புளொட் புலி பிணக்குகளை இறைகுமாரன் தீர்க்க முயன்றது எனக்குத்தெரியும் அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கைகளை தம்பி பிரபாவிடமே கேட்கவும். விட்டுக்கொடுத்தல் ஒத்துப்போதல் என்பவற்றில் சுந்தரம் நம்பிக்கையுடையவர் என்பது பலர் அறிந்தது.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குள்ளன்
    பல்லி சொல்வதை முற்றாகப் புறந்தள்ளவும் முடியாது. காரணம் இறைகுமாரன், உமைகுமாரன், சுந்தரம் போன்றவர்களின் படுகொலையின் பின்னணியில் அமிர்தலிங்கம் குடும்பத்தினர் பெயர் அடிபட்டதும் உண்மை. புலிகளை அன்றைய காலகட்டத்தில் (சில அரசியல்வாதிகள் தமக்கு எடுபிடிகளை வைத்து காரியம் சாதிப்பது போல்) அமிர்தலிங்கம் அவரர்களும் தனது எடுபிடிகளாக வைத்திருந்து காரியங்களை சாதித்ததும் உண்மை. அமெரிக்காவால் வளர்த்தெடுக்கப்பட்ட தலிபான் எப்படி பின்னாளில் அமெரிக்காவிற்கு எதிராகக் கிளம்பியதோ?? அதேபோல் அமிர்தலிங்கம் போன்றவர்களால் தமது சுயநலத்திற்காக வளர்த்து விடப்பட்ட புலிகளும் பின்னாளில் வளர்த்து விட்டவர்களையே போட்டுத் தள்ளியது.

    Reply
  • Kullan
    Kullan

    பார்த்தீபன்!
    நீங்கள்; பல்லி சொல்வதுபோல் ஆரம்ப காலகட்டங்களில் கூ.அணியுடன் நாம் இணைந்து போனோம். நாளடைவில் எமக்கு பாராழுமன்ற முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை இதன் உடைவுதான் இ.பேரவை விடுதலையியக்கம். அப்படி அமிர்தான் இதன்பின் இருந்திருந்தால் நாம் வாக்குவாதப்பட்டிருக்கும் போதே அன்றிப் பிரிந்துபோகும் போதோ இக்கொலைகளைச் செய்திருக்கலாம். சுந்தரத்தின் கொலையின் பின்புலம் புலி புளொட் என்பதில் சந்தேகம் இல்லை. இறைகுமாரன் கொலை அதைத்தொடர்ந்தது என்று கருதப்படுகிறது. செய்தவர்கள் உடந்தையானவர்கள் இலண்டனில் உள்ளார்கள் என்பதும் பலர் அறிந்ததே.

    Reply