இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – அமைச்சர் டளஸ்

dalas.jpgஇந்த நாடு ஒரு இனக்குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப்பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று (11) மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;

அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம். இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.

ஆனால் தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பிக்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான பொதுமக்கள் இறந்து வருகின்றனர்.

ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Thirumalaivasan
    Thirumalaivasan

    ஆனால், இலங்கை இராணுவம் முன்னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். ///அமைச்சர் எந்த நாட்டில் நின்று பேசுகிறார்> குறைந்தபட்சம் இணையத்தளங்களையோ> பத்திரிகைகளையோ கூடப்பார்க்க மடியாதா? வன்னியில் கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகள் எல்லாம் என்ன மனிதாபிமானமாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளா? கடுப்பேத்தும் செய்திகளை முன்னுரிமைதந்து வழங்கவேண்டாம். தலைப்புக்கும் செய்தியின் கருவுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.

    Reply
  • msri
    msri

    படிப்பது புத்ததர்மம்! இடிப்பது புத்தவிகாரை> இதுதான் மந்திரியின் வியாக்கியானம்!

    Reply
  • accu
    accu

    எவனொருவன் தான் சாதி பார்பதில்லை என்கிறானோ எவன் தான் இனத்துவேசி இல்லை என்கிறானோ அவர்களெல்லாம் உண்மையில் அந்த எண்ணம் கொண்டவர்களே! அமைச்சர் டளஸின் பேச்சும் அவரின் உள்மன எண்ணத்தையே காட்டுகிறது.

    Reply