இலங்கையின் வடக்கே இடம்பெற்று வரும் மோதல்களை உடனடியாக நிறுத்தி மோதல் வலயங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாறி கிளிண்டனும், பிரிட்டன வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இலங்கையில் மனிதாபிமான நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் நிறைய செய்ய வேண்டியிருப்பதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஹிலாறி கிளிண்டன் அங்கு நடக்கின்ற மோதல்களில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு உதவ முயற்சிக்க வேண்டியுள்ளது”எனத் தெரிவித்தார். அத்துடன் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு சகல இலங்கையர்க்கும் கிடைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்க்கு அர்த்தமுள்ள அரசியல் வாழ்க்கை கிடைபதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.