74 புத்தர் சிலைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சுவீடிஷ் பிரஜை கைது

74 புத்தர் சிலைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முயன்ற சுவீடிஷ் பிரஜை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இவர் நடத்திவரும் பௌத்த கலரிக்கு இவற்றை அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பும் நிறுவனத்திடம் இவர் இந்த சிலைகளை அனுப்புவதற்கு ஒப்படைத்திருந்தார்.

இந்த புத்தர் சிலைகள் பொதியை சுங்க அதிகாரிகள் பரிசோதித்த போது இவை கண்டுபிடிக்கப்பட்டன.  இவரின் பௌத்த கலரி இணையத் தளத்தின் மூலம் அங்குள்ள புத்தர் சிலைகளை பார்த்தபோது அவை இதற்கு முன்னரும் இவரால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடல்கோள் அனர்த்தங்களின் போது இலங்கைக்கு வந்திருந்தார் எனவும் நீர்கொழும்பில் ஏத்துக்கால் பகுதியில் பெண் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. றொனால்ட் அல்வ்ரன் காரன்ஸ் (58 வயது) என்பவரே அந்த சுவீடிஷ் பிரஜையாவார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • chandran.raja
    chandran.raja

    புத்தர் சிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தடையா? ஆடர் கொடுத்து மரத்தால் செய்யப்பட்ட சிலையா? பழமைவாய்ந்த சிலைகளா? களவாடப்பட்ட சிலைகளா? போலீஸ்சார் கைது செய்யும்மளவிற்கு அப்படி என்ன பெருமையுள்ளது?

    Reply