இலங்கைப் பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்
கொழும்பிலுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாயா
ஆம் , சமாதானம் இப்படியும் ஏற்படலாம் எனும் பரிமானம்.
rohan
சமாதானம் என்று சொல்கிறீர்களா மாயா? புலிக்கு வரிகள் மறையாது என்பார்கள். உங்கள் நிறமும் இங்கே தெரிகிறது.
சமாதானம் வர வேண்டும் என்பது எனது ஆத்மார்ந்த பிராத்தனை. சமாதானம் வரவில்லை என்றால் நீங்கள் வந்து வருத்தம் தெரிரவிக்கப் போவதில்லை என்றுநான் உறுதியாக நம்புகிறேன். அப்போது சுடுவதற்கு உங்களிடம் மனச்சாட்சி இருக்கிறது என்றுநம்புகிறேன்.
மாயா
rohan
இங்கே மங்கள சமரவீரவின் குரல் சுயநல அரசியல் சார்ந்தது. ஐதேகட்சி யுத்தம் செய்யவில்லையா? அனைத்து தீர்வு யோசனைகளுக்கும் முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் ஐதேகட்சியினரே. இவரும் ஐதேகட்சியோடு இணைந்து அரசை கவிழ்ப்பதிலே குறியாக செயல்படுகிறார். உங்கள் தேவைகளுக்காக மட்டுமே இவரது பேச்சை மதிக்கிறீர்களே தவிர, உண்மையான மன சுத்தியோடு இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
SWRD பண்டாரநாயக்க ,தன்னை பிரதமராக்கிக் கொள்ள சிங்கள – பெளத்த சட்டத்தை கொண்டு வருவதாக மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்த பின் அதை திருத்தியமைக்க பண்டா – செல்வா ஒப்பந்தம் கொண்டு வர இருந்த போது , அதைத் தடுத்தவர் ஐதேகட்சியின் ஜேஆர்.
இதில் முக்கியமான பகிடி என்னவெனில் ஜேஆரும் , பண்டாரநாயக்கவும் பெளத்தர்கள் இல்லை என்பதே. இவர்கள் இருவரும் கிறிஸ்தவர்கள். அரசியலுக்காக மதம் மாறியவர்கள். ( Solomon West Ridgeway Dias Bandaranaike ,Junius Richard Jayewardene). சிறீமாவோ பண்டாரநாயக்காவை திருமணம் செய்து சிறீமாவின் குல பெயரை இணைத்துக் கொண்டவர் பண்டா. JR சும்மாவே ஜயவர்தனாவை தொடுத்துக் கொண்டவர்.
சமரவீர , மகிந்தவோடு இருந்த காலத்தில் பிரபாகரனுக்கு 700 கோடி ரூபா கொடுத்து ரணிலை ஜனாதிபதியாக வர விடாமல் டீல் பண்ணியவர்களில் மிக முக்கியமான ஒருவர். இவை புரியாமல் நாமும் பேசக் கூடாது?
ரணில் , தமிழர் பகுதியை வளமாக்கி மக்கள் மனதை மாற்றலாம் என நம்பினார். மோதல் இல்லாத போது போர்க் குணம் மறைந்த போகும் எனவும் நினைத்தார். இதன் வெற்றியாக கருணாவின் பிரிவுக்கு காரணம் தாங்கள்தான் என்பது? கருணாவின் பிரிவுக்கு காரணம் வேறு?
புலிகளோ யுத்தம் இல்லாத போது மக்கள் சலிப்படைந்து போவார்கள் என்றும் போராளிகள் மன மாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் அடுத்த இயக்கத்தவரையாவது போட்டுத் தள்ளுவதில் ஊக்கம் கொடுத்து. அந்த போர் மூடில் போராளிகளை வைத்திருக்க முயன்றார்கள்.சொறிந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல எதிரி கிடைக்காவிட்டால் நண்பனையாவது போட்டு தள்ளி டிரெயினிங் எடுத்தவர்கள் புலிகள்.பின்னர் போரையும் வலிந்து தொடுத்தனர்.
மகிந்தவை பதவிக்கு கொண்டு வந்து, மகிந்தவையே போட்டுத் தள்ள முனைந்த போது மகிந்த அதே பாணியில் இறங்கினார்.இங்கே கோட்டாபயவும் சரத் பொண்சேகாவும் சேர்ந்ததால் பலம் அதிகரித்தது. இரண்டு சண்டியர்களில் ஒருவர்தான் பலமாக இருக்க முடியும்.அதுதான் இது……….முடிவு பலமானவன் கையில்.
யுத்தத்தின் பின் சமாதானம் இப்படியும் வரும்? அமெரிக்க ஜப்பான் போரின் பின்னும் , ஜெர்மன் ஐரோப்பிய போரின் பின்னும் சமாதானம் வந்தது. அங்கே வாழும் மக்கள் வெறுத்து விட்டால் அடுத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. இன்று ஜேவீபீ மற்றொரு புரட்சிக்குத் தயாரில்லை. இலங்கை வாழ் தமிழரும் இன்னொரு இழப்புக்கு தயாரில்லை. புலிகளது ஆயுதத்துக்கு பயந்தே புலி வாலை விட முடியாமல் அநேகர் இருந்தனர்.
யாழ்பாணம் மாறிவிட்டது. திருகோணமலை மாறிவிட்டது. மட்டக்களப்பு மாறிவிட்டது. கொழும்பு – மலையகம் புலத்துக்கு சமம். புலத்தில் இணைய வழி நீங்கள் போராட்டம் நடத்தலாம். புலத்தில் தமிழீழம் உருவாக்க முடியாது. காந்தி கூட இந்தியா சென்றுதான் சுதந்திரத்துக்காக போராடினார். எனவே இலங்கை போக கட்டுநாயக்கா மட்டுமே ஒரே ஒரு விமான நிலையம். சொல்வது புரிகிறதா?
rohan நீங்கள் சொன்னவை உங்களுக்கே மறந்து விட்டது என நினைக்கிறேன். பழைய பதிவுகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். புலிகளுக்கும் சரி, புலி ஆதரவாளர்களுக்கும் சரி, ஞாபக மறதி அதிகம். சமாதானம் வேண்டுமென்றால், கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை புலிகள் தட்டிக் கழித்திருக்க மாட்டார்கள்.
திலகர் சர்வதேச பொறுப்பாளராக இருந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவம். சமாதான பேச்சு வார்த்தை தொடர்பாக நோர்வே நாட்டுக்கு வந்திருந்த சந்திரிகாவை சந்திக்க, பாரீஸிலிருந்து திலகர் புறப்பட்டுச் செல்லும் போது என் நண்பன் விமான நிலையத்தில் வைத்து திலகரிடம் கேட்டான் ,
” சந்திரிகாவோடு பேசி பிரச்சனையை தீர்த்துட்டு வருவயளே அண்ண?”
திலகர் சொன்ன பதில்
” அடேய், தீர்க்கவா போறன். குழப்பிட்டு வர எல்லடா போறன்.”
இதுதான் புலிகளது சமாதான பேச்சு ஸ்டைல்.
அதே போல //”சமாதானம் வர வேண்டும் என்பது எனது ஆத்மார்ந்த பிராத்தனை”- rohan// என சொல்வதால் சமாதானம் வராது. அதற்காக செயல்பட வேண்டும். மனதளவிலாவது வாழ வேண்டும்.
இவர்களை பாருங்கள். இவைகளை பார்த்து உங்கள் மனச் சாட்சி சுடுகிறதா என உங்களையே கேளுங்கள் rohan?
http://www.youtube.com/watch?v=FBBc9xg2MvE&feature=player_embedded
palli.
கண்டிப்பாக சமாதானம் கிடைக்குதோ இல்லையோ, ஆனால் எந்த ஒரு ஆயுத போரையும் ஈழதமிழர் (புலம்பெயர் தமிழரை கணக்கில் எடுக்கவில்லை) விரும்பவோ அல்லது ஆதரித்து வளர்க்கவோ மாட்டார்கள். காரனம் அவர்கள் 30 வருடத்தில் பட்ட துன்பம் ஏராளம். ஆனால் அதுக்கு அவர்களுக்கு பட்டதோஅல்லது கிடைத்த நின்மதியோ ஒரு துளி கூட கிடையாது. ஆயுதம் மக்களின் உனர்வுகளையும் உரிமைகளையும் அடக்கியதே தவிர, அதை மக்களுக்கு எதுவும் பெற்று தரவில்லை. இந்த ஆயுதம் சில கணவன் மனைவி உறவில்கூட புகுந்து நாடாண்மை பண்ணியதை யாரும் மறந்துவிட முடியாது. இறுதி நேரத்தில் கூட மக்களில் எந்தவித அக்கறையும் இல்லாமல் ஆயுதத்தை காப்பாற்றவே புலிகளின் வியாபாரிகள் உலகம் முளுவதும் ஓலமிட்டனர். ஆகவேதான் இனி ஒரு தடவை ஆயுத போராட்டமோ சதிராட்டமோ ஈழ தமிழர் விரும்பவோ அனுமதிக்கவோ மாட்டார்கள். ஆனால் இந்திய நக்சலைட்டுகள் மாதிரி சில ஆயுததாரிகள் மீசைகார வீரப்பன்போல் காட்டுவாசிகளாக வலம் வரலாம். அது சிலருக்கு வியாபாரமாக கூட (அரசியல்) இருக்கலாம். ஆனால் இதை சொல்லி மக்கள் முன் வந்தால் கல்எறி வாங்குதல் தவிர்க்க முடியாது.
rohan
//இவர்களை பாருங்கள். இவைகளை பார்த்து உங்கள் மனச் சாட்சி சுடுகிறதா என உங்களையே கேளுங்கள் ரொகன்?// மாயா
எனது திருவாயைச் சாத்தி வைத்துக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன். புலி விசுவாசிகளும் சரி புலி வசைபாடிகளும் சரி – ஒற்றைக் கண்ணால் தான் உலகைப் பார்க்கிறார்கள்.
இவர்களுக்கு இவர்கள் அல்லாதோர் எல்லோரும் அவர்கள் மாதிரித் தெரிகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் அல்லாதோர் எல்லோரும் இவர்கள் மாதிரித் தெரிகிறார்கள்.
தர்க்கிக்கத் தெரியாமையும் கருத்துக்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ளலும் மேலதிக்மாக இடறுகிறது.
மேலேயே பாருங்கள். நான் மங்கள பற்றி எதுவுமே சொல்லவில்லை. சமாதானம் என்ற முத்திரையுடன் தான் நான் முரண்பட்டேன். மங்களவின் விசுவாசமும் திலகரின் திருகுதாளங்களும் பிரசங்கிக்கப்பட என்ன தேவை இங்கே?
பிரேமதாசவுடனான் பேச்சுவார்த்தைய்ன் போது கிரமமாக புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொடர்பில் இருந்த ஒருவரையும் திலகர் பரிசில் இருந்த போது அவரோடு ஒவ்வொரு நாளும் பேசிய ஒரு இந்திய இடதுசாரி பத்திரிகையாளரையும் எனக்கு நெருக்கமாகத் தெரியும்.
அது ஒரு புறம் இருக்க,
//ரொகன் நீங்கள் சொன்னவை உங்களுக்கே மறந்து விட்டது என நினைக்கிறேன். பழைய பதிவுகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள். // என்று ஒன்றுமில்லாத தொடர் ஒன்றை இழுத்து விட்டிருக்கிறீர்கள். தேசம் வாசகர்களின் புத்திக் கூர்மை பற்றி இப்படி ஒரு இளக்காரமா உங்களுக்கு?
மாயா
//தேசம் வாசகர்களின் புத்திக் கூர்மை பற்றி இப்படி ஒரு இளக்காரமா உங்களுக்கு?- rohan//
நினைவு கூர்மைக்கு நன்றி