மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் இடதுசாரிகளுக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
கடந்த தேர்தலில் இந்த மாநிலங்களில் பெரும் வெற்றி பெற்று தேசிய அளவில் 54 இடங்களி்ல் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை இந்த இரு மாநிலங்களிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தமே இடதுசாரிகளுக்கு 25 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.
கேரளத்தில் அந்தக் கூட்டணிக்கு கடந்த தேர்தலில் 19 இடங்கள் கிடைத்தன. அது இம்முறை 14 இடங்களை இழந்து 5 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
அதே போல கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களில் வென்ற இடதுசாரிகளுக்கு இம்முறை 16 இடங்களே கிடைத்துள்ளது.
இதன்மூலம் அவர்களது பலம் 25 ஆகக் குறைந்துள்ளது. அந்தக் கட்சிகளால் கடந்த முறையைப் போல மத்திய அரசின் மீது எந் நெருக்குதலையும் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்தியில் ஆட்சியமைக்க இவர்களது தயவே காங்கிரசுக்கு தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.