நீர் மின்உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதல் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலை 6.30 முதல் இரவு 9.00 மணி வரையிலான காலப் பகுதியில் நாட்டின் நாளாந்த மின் பாவனை 28 மில்லியன் அலகுகளாகும். இந்த அளவை 22 மில்லியனாக குறைத்துக்கொள்ள முடியுமாயின் தற்போதைய மின்உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பிரதேசங்களில் சீரான மழை வீழ்ச்சி கிட்டும் வரை மிகவும் சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக இலங்கை மின்சார சபை மிகவும் அவதானத்துடன் செயல்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்