விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதலுக்குப் பின்னரான புனர்வாழ்வு நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயக அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி விஜே நம்பியாரைச் சந்திக்கவிருக்கும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசாங்கத்தின் திட்டம்பற்றிக் கலந்துரையாடவுள்ளார்.