குவைத் தில் முதன்முதலாக பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான்கு பெண்களில் மூவர் பேராசிரியர்கள், ஒருவர் பொருளாதார நிபுணர். நாட்டின் வளர்ச்சியில் பெண்களும் பங்கேற்க வாக்களித்த வாக்காளர்களை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக ரோலா டஷ்தி என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
குவைத்தில் 2005 ம் ஆண்டு வரையில் பெண்கள் தேர்தலில் பங்கேற்கவோ, வாக்களிக்கவோ அனுமதியில்லை. குவைத் மன்னரின் உறவினர் பிரதமராக இருந்த போது, நிதியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்க நாடாளுமன்றம் முனைந்தது. இதனை தொடர்ந்து மன்னர் நாடாளுமன்றத்தை கலைத்தார்.