புதுமாத் தளன் பிரதேசத்திலிருந்து புலிகளின் இரண்டு கனரக கவச வாகனங்கள், மூன்று விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பிரதேசங்களில் படையினர் நடத்திவரும் பாரிய தேடுதலின் போதே நேற்றுக் காலை இந்த கனரக ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பெடல் துப்பாக்கி ரக ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது சுமார் ஒரு நிமிடத்திற்கு 600 ரவைகள் செல்லக் கூடியது.
இதிலுள்ள மற்றுமொரு கனரக ஆயுதம் 5 தொடக் கம் 7 அடி நீளமானது. இது 8000 மீற்றர் தூரம் செல்லக்கூடியதாகும். தொடர்ந்தும் படையினர் கனரக ஆயுதங்களை மீட்டெடுத்த வண்ணம் உள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.