குழந்தை ஒன்று பிறந்தவுடன் ஒரு தாயின் முதலாவது கடமையும் உரிமையும் தாய்ப்பால் கொடுப்பதாகும். அதேபோல குழந்தையின் முதலாவது உரிமையும் தாய்ப்பாலாகும். ஆனால், அந்த உரிமையும் கடமையும் தற்போது மறுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இவ்வாறு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சேனைக்குடியிருப்பு “சேவோ’ அமைப்பு ஏற்பாடு செய்த சிறுவர் ஊர்வலமும் குறைகேள் மன்றமும் கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார்.
சேவோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய டாக்டர் ரமேஸ்; சிறுவர் உரிமைகள் பற்றி பல நிறுவனங்கள் பலதரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகின்றன. ஆனால், ஒரு தாய் தனது பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது அக்குழந்தையின் உரிமையை தாயே மீறும் போது இக்கருத்தரங்குகளும் விழிப்புணர்வுகளும் அர்த்தமற்றதாகிவிடும்.
தாய்ப்பால் இன்றி குழந்தைக்குப் போதிய போஷாக்குக் கிடைப்பதில்லை.அதனால், அக்குழந்தையின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. ,மின்சாரம் இல்லாதது ஒரு தடையாக அமையாது. தன்னம்பிக்கை இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். இதற்கு உதாரணமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.