பிரபாகரனின் உடலைக் கண்ட செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கள்

karuna-daya.jpg
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்ற முல்லைத்தீவின் கடற்கரைப் பிரதேசத்துக்குச் செல்ல செய்தியாளர்களை இலங்கை அரசு தொடர்ந்து அனுமதிக்காமல் இருந்தது. இருந்தும் சில செய்தியாளர்கள் இராணுவத்தினரால் அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த 6 நாட்களாக கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.

பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.

பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது தெளிவாகாமல் உள்ளது என்றும், அந்த உடலில் சைனைட் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என்று படையினர் தம்மிடம் கூறியதாகவும் ரெட்டி நம்மிடம் தெரிவித்தார். அவர் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரபாகரனின் உடல் தவிர இராணுவ அதிகாரிகள், சார்ள்ஸ் அன்டனி உடலை காட்டியதாகக் குறிப்பட்ட அவர், பொட்டு அம்மானின் உடலை பார்க்கவில்லை என்றார். போர் பகுதியில் உள்ள உடல்களில் சில மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    திரு.உமாமகேஸ்வரன் எதற்காக சுட்டுக் கொல்லப் பட்டார்?.மாலத்தீவில்,தாக்குதல் நடத்தி, பலரை மாட்டி விட்டதால் எழுந்த கோபத்தாலா?.அதே கோணத்தில்தான் இதை ஆராய வேண்டும். இந்த புதைக் குழியில், பல முடிவுகள் பொட்டு அம்மான் வரை வந்து அங்கேயே முடிவெடுக்கப்பட்டு, மற்றவரை ரப்பர் ஸ்டாம்பாக வைத்திருந்தார்கள் என்று கூறப்படுகிறதே!,அது உண்மையா?.

    Reply
  • Hg
    Hg

    Prabha a Coward, Says Karuna
    NATIONAL Integration Minister Vinayagamurthy Muralitharan who was at one time a close aide of LTTE leader Velupillai Prabhakaran said yesterday that the latter was always a coward, and it had now been proven.

    Mr. Muralitharan flew to Mullaitivu last evening to identify the body of Prabhakaran. He confirmed that it was Prabhakaran’s body.

    “I told the media several times that Prabhakaran was a coward. He never went to the battle front. He encouraged a lot of his cadres to swallow cyanide or carry out suicide attacks. Nevertheless, he never did it. Even at the last moment, he had tried to escape into the jungle with a small team when the army attacked him,” Mr. Muralitharan who is informally known as Karuna Amman said.

    He said that the fate that befell most other terrorist leaders befell Prabhakaran as well, and it was a reality.

    “The entire country has now been liberated from terrorism. It is a blessing for the nation. Tamil people have now realized it,” he said.

    Mr. Muralitharan was the LTTE’s eastern commander in the past, and he broke away from the organization in 2004 following a rift with the leadership. He also participated in peace talks during the previous UNP regime representing the LTTE.(Courtesy: Daily Mirror)

    Reply
  • palli.
    palli.

    ஜயோஜயோ இவர்கள் இருந்த போதுதான் பிரச்சனை என்றால் இறந்த பின்னும் எரிப்பதா புதைப்பதா என்பது போல் பல பிரச்சனைகள் வருகிறதே. இவர்களை மறந்து(பாலாவின் பாஸையில் இந்த துன்பவியல் சம்பவத்தை) புதிதாக ஏதாவது சிந்திப்போம். எமது சிந்தனைகள் மக்கள் பறியதாகவே இருக்கட்டும். மறைந்து போன மிருகங்கள் பற்றி வேண்டாம். ஆனால் தற்ப்போதும் சில மிருகங்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதையும் கவனத்தில் கொள்வோம்.

    Reply
  • palli.
    palli.

    ஊடக கருத்து என்பதால் பல்லியும் தன் கருத்தை இங்கே எழ்துகிறது. இந்த போர் யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி??அரசுக்கு வெற்றியும் புலிக்கு தோல்வியும் என்பது பலரது கருத்து. ஆனால் பல்லியின் கருத்தோ ஒட்டு மொத்த தோல்வியும் இழப்பும் தமிழ் மக்களுக்கும். இறந்து போன ராணுவ குடும்பங்களுக்குமே. இதில் புலி ஏன் தோற்றார்கள்??? மக்களை பற்றி சிந்தியாமல் தம்மை பற்றி மட்டும் சிந்தித்து அதுக்கான போர் நடவெடிக்கைகளை அங்கும் இங்கும் செய்தது. தான் தோன்றி தனம். எதிரியை குறைவாக எடை போட்டது. கால தாமதமான முடிவுகள். எல்லாத்துக்கும் மேலாக மக்கள் உயிர் பற்றி சிறிதேனும் கவலை கொள்ளாதது.

    சரி அரசின் வெற்றி எப்படி?? அரக்கதனமான ராணுவ தாக்குதல். சீனாவின் பொருளாதார ஆயுத உதவி? பாகிஸ்தானின் ஆயுத உதவி மற்றும் நம்பிக்கை. இந்தியாவின் பண .ஆயுத.சதுர உதவி. அத்துடன் தொழில்நுட்ப உதவியையும் மறக்ககூடாது அல்லவா.
    ஜரோப்பா நாடுகளின் பொருளாதார உதவி.
    ஈரானின் ஆயுத .பொருளாதார உதவி.
    அமெரிக்காவின் பொருளாதார உதவி.
    நோர்வேயின் உளவு வரை பட உதவி.
    கருனாவின் உளவு எதிரியின் பலம்
    பற்றிய கணிப்பு மற்றும் பல உதவி.
    சங்கரி.டக்களஸ் இன்னும் பல (தேசம் உட்பட) புலியின் அடங்கா பிடாரிதனத்தை உலகுக்கு எடுத்து காட்டிய உதவி.
    பல ஆயிரம் ராணுவத்தினர் மடிந்தும் அது பற்றி எதுவும் பேசாது அமைதியாய் இருந்த சிங்கள மக்களின் உதவி.
    எப்படிதான் தமிழரை அழித்தாலும் கேக்க யாருமே இல்லை என்னும் போக்கை தமிழரக்கிய நாம் மகிந்தாவுக்கு கொடுத்துதவியது. இப்படி உதவிகளையே பலமாக வைத்து வெற்றி கொடி நாட்டிய அரசு வெற்றிகழிப்பில் மிட்டாய் கொடுப்பது போல் ஆவது வன்னி மக்களுக்கு ஏதாவது செய்யாதா என வன்னி மக்கள் போல் பல்லியும் ஏங்குகிறேன்.

    Reply
  • Sooriasegaram, Mylvaganam
    Sooriasegaram, Mylvaganam

    பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்தை விடுத்துப் பாருங்கள். 30 ஆண்டுகள் உலகின் கவனத்தைத் தன் மீது திருப்பி வைத்திருந்தவர் பிரபாகரன். அவரது உடல் என்று ஒன்றைக் காட்டும் ராணுவத்தினருக்கு, அது பிரபாகரனுடையதுதான் என்பதை அழுத்தமாக நிரூபித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளது.

    அதிலும், ஜனநாயக நாடு, தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் நாடு என இலங்கையை அறிவித்துள்ள ராஜபக்சே, பிரபாகரன் மரணத்தை உரிய விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்த வேண்டும்.

    அடுத்து அவரது உடலை அப்படியே பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்தினர் அந்த உடலை எப்போது கேட்டாலும் கொடுக்க வேண்டிய கடமை, பொறுப்பு இலங்கைக்கு உள்ளது. போரில் பிடிபட்ட பிணங்களைக் கூட சர்வதேச சட்டப்படி அவர்களது குடும்பத்தினர் இறுதிக் கடன் செய்ய வசதியாக ஒப்படைக்க வேண்டும்.

    எனவே பிரபாகரன் உடல் என்று இவர்கள் காட்டுவதை, அந்த மரணம் உறுதியாகும் வரை வைத்திருந்து பின்னர், அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்

    Reply
  • Tamillan
    Tamillan

    விடுதலைப் புலிகளினால் புகழ்பெற்ற கருணா தலைமை ஆசையுடன் தனக்கென தனி ஆதரவு திரட்டல் புறப்பட்டு கடைசியில் மட்டக்களப்பை விட்டே ஓட வேண்டி ஏற்பட்டது.

    குழந்தை குட்டியுடன் அலைந்த இந்த நபரை பாவம் என்று கண்ட சிலர் காப்பாற்றிவிட்டனர். தலை தப்பிவிட்டது என்பதை உறுதி செய்ததும் அவரால் ஓரிடத்தில் இருப்புக்கொள்ள முடியவில்லை. பணத்துடன் புரண்ட கருணாவுக்கு தினமும் பணத்தைக் காணாமல் இருந்தது பேரிழப்பாகத் தோன்றியது. தக்க நேரத்தில் மகிந்த தனது தூண்டிலை வீச கவ்விக்கொண்டார் பணம் என்ற இரையை. பல விடயங்களிலும் தனது தலையை நுழைத்து அனைத்திலும் விரட்டப்பட்டதுடன் இறுதியில் பிள்ளையானும் இந்த நபரை விரட்டிவிட்டார்.

    இப்படித் தூக்கி வீசப்பட்ட விலாங்குமீனை ராஜபக்ச பிடித்து தனது கட்சிக்குள்ளேயே நீந்த விட்டுள்ளார். பட்டங்கள் பதவிகள் கொடுத்து இப்போது கருணநாயக்காவாக மாறிய கருணா தனது காட்டிக்கொடுப்பை பணத்துக்கும் பதவிக்குமாக சிறப்பாகச் செய்து வருகிறார். இறந்த பிறகு புரட்டிப்பார்த்து இவர்தான் நபர் என்று திறம்பட காட்டிக்கொடுத்து தனது பதவிகளின் பயனைப் பெற்றுள்ளார் சிங்கள எஜமானர்களிடத்து.

    கருணா இப்போது கிழக்கு மாகாணத்தான் அல்ல. அம்பாந்தோட்டயான்!

    இலங்கை விவகாரம் முடிந்தபின் இந்தியாவிலும் ஏதாவது காட்டிக் கொடுப்பு வேலை கிடைக்குமோ என்ற நினைப்பில் இந்தியா சென்று ராகுலையும், பிரியங்காவையும் சந்திக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை அன்பர் தெரிவித்துள்ளார்.

    அவரால் ஒரு இடத்தில் இருப்புக்கொள்ள முடியாது. பிரித்தானியாவில் பிடிபட்டு விரட்டிவிட இலங்கைக்கு வந்து மந்திரியாகிப்போனவர் இலங்கைத் தமிழ் இயக்க அங்கத்தவர்கள் 1200 பேரை கொன்றதனை வாக்குமூலம் கொடுத்ததை ஊடகங்கள் பதிவு செய்து வைத்துள்ளன என்பதை மறந்துவிட முடியாது. அவர்களைக் கொலை செய்ததன் மூலம் தனக்கு சலிப்பு ஏற்பட்டதாகக் கூறியவர் என்றைக்கும் தமிழனாக முடியாது.

    Reply