முதல் அமைச்சர் கருணாநிதியை இன்று காலையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இல்லத்தில் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
கேள்வி: இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உங்களை சந்தித்துப் பேசியதைப் பற்றி?
பதில்: நேற்றைய தினம் பிரதமருடனும், சோனியா காந்தியுடனும் நான் பேசிய தின் தொடர்ச்சியாக இன்றைக்கு அவர் இலங்கைக்கு செல்கிறார். அங்குள்ள சூழ் நிலைகளை அறிந்து வந்து மீண்டும் என்னைச் சந்தித்து விவரங்களை கூறுவார்.
கேள்வி: இலங்கைக்கு நிவாரணம் அளிப்பது பற்றி குறிப்பிட்டு ஏதாவது கேட்டிருக்கிறீர்களா?
பதில்: இலங்கை தமிழர் பகுதிகளில் நிவாரணத்திற்காக எவ்வளவு தேவையோ அவ்வளவையும் நிறைவு செய்வோம் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்.
msri
கலைஞர் பிள்ளைகளுக்கு மந்திரிப்தவி வாங்கபபோய்> வன்னிமக்களுக்கும் நிவாரணமும் வாங்கியுள்ளார்! வன்னி மக்களுக்கு செய்ய வேண்டியவைகள் எல்லாம் செய்து முடிச்சாச்சு! இந்த லட்சணத்திலை ஓர் நிவாரணமோ?
பார்த்திபன்
கலைஞரையும், சோனியாவையும் எவ்வளவு கேவலமாக சித்தரிக்க, விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாகவும் கீழ்த்தரமாக நடந்தவர்கள் எம்மவர்கள் சிலர். இதன் பின்பும் இந்திய அரசு எமது மக்களுக்கு உதவ முன்வருவது அவர்களது பெரும் தன்மையே. இதை விமர்சிக்க எம்மவர்களுக்கு என்ன தகுதி??
msri
இது பெருந்தன்மையல்ல> பிராயச்சித்தம்!
பார்த்திபன்
msri,
சரி நீங்கள் சொல்வது போல் பிராயச்சித்தமாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாயின் எமது பக்கத் தவறுகளுக்கு நாம் என்ன பிராயச்சித்தம் செய்துள்ளோம்.
msri
பார்த்திபன்!புலிகளினதும்> அதன் புலம்பெயரவுகளினதும் தவறுகளை> பொதுமைப்படுத்தவேண்டாம்! > தமிழ்மக்களின் பிரதான எதிரி சிங்களப்பேரினவாதமும்! அதைப் பாதுகாக்கும் இந்தியா போன்ற மேலாதிக்க சக்திகளுமே! தமிழ்மக்களின் மனிதப்படுகொலைகளுக்கும்> இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கும் இந்தியாவும் பிரதான காரணியே! இந்த லட்சணத்தில் நிவாரண் உதவியென்பது: என்னைப் பொறுத்தவரையில் பாவச்செயலுக்கான பிராயச் சித்தமே!
பார்த்திபன்
msri, அடுத்தவர்களை குற்றவாளியெனச் சொல்வதற்கு, நாம் நேர்மையானவர்களாக நடந்திருக்க வேண்டும். திரும்பத் திரும்ப புலிகள் செய்த அதே தவறுகளை நாமும் செய்து, உலகையே பகைத்துக் கொள்ளாமல் எனியாவது புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு, எமது எதிர்காலச் சந்ததியையாவது நிம்மதியாக வாழ வழி சமைப்போம். அதற்கு இந்தியாவினதும் ஏனைய நாடுகளினதும் உதவிகளைத் தார்மீக ரீதியில் பெறுவது முக்கியம்.
நண்பன்
ராஜீவ் கொலையாளிகளுக்கு உங்கள் தண்டனைகளை கொடுத்து விட்டீர்கள். இனியாவது பகை விலகட்டும். தமிழர் வாழ்வு சிறக்க உதவுங்கள். இல்லை உதவாது போனாலும் உபத்திரவம் கொடுக்க வேண்டாம்.
rohan
கடவுளுக்கு நன்றி – எங்கள் கருத்தாளர்கள் சிலர் இந்தக் கிணற்றுக்குள்ளேயே நின்று விடுகிறார்கள்!
சில நம்மவர்கள் சொன்ன கருத்துக்களுகாக்த் தான் இந்திய அரசியல் தலைவர்கள் முடிவுகளை எடுக்கிறார்கள் என்று எண்ணுவது எனக்கு வியப்பைத் தரவில்லை.
இலங்கையின் முக்கிய குரல்களால் கோமாளிகள் என்று விமர்சிக்கப் பட்டவர்கள் தமிழகத்து அரசியல் வாதிகள். அவ்விமர்சனத்துக்குள் கருணாநிதியின் கூத்துகளும் அடங்கும். இதற்காக் அவர் ஈழத்தையே பிய்த்து எடுத்துத் தந்திருக்கலாமே!
நண்பன்
இனவாதம் பேசும் ஜேவீபீ சோமவன்சாவே மாறிவிட்டார். இனி தமிழ் முஸ்லீம் பெர்கர் ஆகிய இனங்கள் சிறுபான்மையினம் இல்லை. அனைவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் .இனி இலங்கையில் அனைவரும் இலங்கையர்கள் என தெரிவித்தார். பிறகென்ன? மகிந்த நல்லாவே வெருட்டித்தான் வச்சிருக்கிறார்.
அப்பு:- நாட்டின் மேல் நேசமுள்ளவர்களையும் , நேசமில்லாதவர்களையும் எப்படி அறிவது?
மகிந்த:- அடுத்த தேர்தலில்தான்
accu
//எங்கள் கருத்தாளர்கள் சிலர் இந்தக் கிணற்றுக்குள்ளேயே நின்று விடுகிறார்கள்!// ரோகன் நல்லது அவர்கள் கிணற்றுக்குள் நிற்கிறார்கள் ஆனால் நீர் பட்டைகிடங்கில் அல்லவா நிற்க்கிறீர்! இந்தியா என்பது தமிழ்நாடு என்ற மாநிலம் மட்டுமல்ல.இந்தத் தேர்தல் முடிவின் பின்பாவது தமிழ்நாட்டில் கூட புலியாதரவு இல்லையென்பது உங்களுக்குப் புரியவில்லையா? இதில் ஈழத்தை பிய்த்து தருவார்களாம். ஜெயலலிதாவைக் கேட்டால் புடுங்கித் தருவா.
msri
பார்த்திபன! ஏகாதிபத்தியங்களிடம் “தார்மீகம்” என்ற ஒன்று இருந்தால் எல்லோ> அதை கேட்டுப் பெறுவதற்கு! எதிரிகளிடம் தார்மீகம் பெற்று எதர்காலச் சந்தியை நிம்மதியாக வாழவைப்போம்! சோக்கான சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பு! நல்ல த்த்துவம்! புலிகளின் வீழ்ச்சியோடு> உது எழுச்சி பெறும்!
பார்த்திபன்
//ஏகாதிபத்தியங்களிடம் “தார்மீகம்” என்ற ஒன்று இருந்தால் எல்லோ> அதை கேட்டுப் பெறுவதற்கு!- msri //
அட அப்படியாயின் எதற்காக உந்த ஏகாதிபத்திய நாடுகளில் போராட்டமென்றும், உண்ணாவிரதமென்றும், ஆர்ப்பாட்டமென்றும் உந்த இளையோரின் வாழ்க்கையை பாழடித்தீர்கள். பொழுது போக்கிற்காகவா??
msri
பார்த்திபன்! நான் ஓர் புலி ரசிகன் என்ற பாங்கில் இருந்து> தொடர் கேள்விகள கேட்கின்றீர்? என் பின்னூட்டங்களை பின் நவீனத்துவப் பாணியில் படிக்கினறீரோ தெரியவில்லை! இருந்தம் புலிகளின புலம்பெயர்வுகளும்> உம்மைப்போல்>”ஏகாதிபத்தியங்களிடம் தார்மீகம்” உண்டென்று நம்பியே> நீர் குறிப்பிட்டுள்ள திருவிழாக்களைச் செய்தார்கள்! விளைவு > நான் சுட்டிக்காட்டியதுபோல்> ஏகாதிபத்தியங்களிடம் “தார்மீகம்” என்ற ஒன்று இருந்தால்தானே> அதை கேட்டுப்பெறுவதற்கு!