பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!-எஸ்.எம்.எஸ். பரபரப்பு

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் இன்று இரவு டிவியில் பேட்டி அளிக்கவுள்ளதாகவும் ஒரு எஸ்.எம்.எஸ். உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் குறித்து தினசரி ஒரு புதுத் தகவல் வெளியாகி பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்ட வீடியோ படமும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இந் நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு இந்தியாவில் வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.

அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் கூறப்பட்டுள்ளதாவது..

”மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    மொத்தத்தில் எஸ்.எஸ்.எஸ் மூலம் படம் காட்டியுள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்றால் இதை அந்த தொலைக்காட்சி நிறுவனங்களே அறிவித்திருக்குமே?? பூ வைப்பதென்று முடிவெடுத்தால், எப்படியும் வைக்கலாம். உங்கள் காதுகள் பத்திரம்….

    Reply
  • raj
    raj

    Why tamils needs that man anymore. He let tamils down,betrayed loyal followers,he is not a freedom fighter, overall he is disgrace to the tamils.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    மாவீரர் தினத்துக்கு வருபவர். ஜீ டீவியில் இன்று வந்தாரா?

    Reply