இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மோதல்கள் நடைபெற்ற பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் படவேண்டும் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் இதற்கு நாமும் உதவிசெய்வோம்” என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமைகள் குறித்துத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கையில் நிலைமை மாறிவருகிறது இதனால் தகவல்கள் எதுவும் தெளிவாகவில்லை.
தற்போது காணப்படும் நிலையை எம்மால் உடனடியாகத் தம்மால் உறுதிப்படுத்தமுடியாதிருக்கின்றது. மோதல் பகுதிகளிலுள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என நாம் நம்புகிறோம் என்றார்.
ramesh
புலம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்த பாதுகாப்பான இடம் அமெரிக்காவாக இருக்குமோ?