மூன்று தசாப்தங்களாக நிலவிய தீவிரவாதத்தை உலகின் எந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதளவுக்கு இலங்கை அரசு இரண்டரை வருடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என தகவல் ஊடகத்துறை அமைசச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்;.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் அவரது கதை முடிந்து விட்டது. அவரது அமைப்பும் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் பிரபாகரனை நிராகரித்து விட்டனர் என்பதை இந்தியாவின் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கர்ட்டுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
msri
உண்மைதான் மேன்மைதங்கிய மந்திரி அவர்களே! எத்தனை நாட்டு ஆயுதங்கள> எத்தனை நாட்டு இராணுவ ஆலோசகர்கள்> அவர்களின் நேரடிக் கணகாணிப்பு:> இவை ஒன்றும் இலலாமல்> உங்கடை ராணுவம் தீவிரவாதத்தை வலுகெதியா முடிச்சுப்போட்டுதோ? படையில் இருந்து “வீரர்கள்” (பயத்திலை) தலைதெறிக்க தப்பியோடுவதிலும்> அவர்களைப் பிடிக்க நீங்கள் ஓடுகின்ற ஓட்டச்சாதனையிலும்>இலங்கையை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாதுதாண்!
Tamil pulikal
புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளபோதிலும் அவரது கதை முடிந்து விட்டது. அவரது அமைப்பும் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் பிரபாகரனை நிராகரித்து விட்டனர் என்பதை இந்தியாவின் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் கர்ட்டுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
பார்த்திபன்
msri,
அட உண்மை தான். இறுதியாக நடந்த போரில், ஓடிய இராணுவத்திலிருந்து ஒருவரும் புலிகளிடம் சரணடையவில்லை. ஆனால் தப்பியோடிய புலிகள் இராணுவத்திடமல்லவா சரணடைந்துள்ளனர். இதையும் நீங்கள் எடுத்து விட்டிருக்கலாம்.
நண்பன்
//msri on May 20, 2009 3:31 pm உண்மைதான் மேன்மைதங்கிய மந்திரி அவர்களே! எத்தனை நாட்டு ஆயுதங்கள> எத்தனை நாட்டு இராணுவ ஆலோசகர்கள்> அவர்களின் நேரடிக் கணகாணிப்பு:> இவை ஒன்றும் இலலாமல்> உங்கடை ராணுவம் தீவிரவாதத்தை வலுகெதியா முடிச்சுப்போட்டுதோ? படையில் இருந்து “வீரர்கள்” (பயத்திலை) தலைதெறிக்க தப்பியோடுவதிலும்> அவர்களைப் பிடிக்க நீங்கள் ஓடுகின்ற ஓட்டச்சாதனையிலும்>இலங்கையை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாதுதாண்!//
உலகத்துக்கே பாடம் கற்பிக்க முயன்றதின் அறுவடை இது. பிளாஸ் பெக் காட்சிக்கு போய் பாருங்கோ. ரிங் என்று வரும்.
thevi
புலிகள் இன்னமும் அழியவில்லைதான். புலம் பெயர் நாடுகளில் விரும்பிய ரிவி யை ,காசு கட்டி எடுத்த சன் ரிவி யையோ ஐங்கரன் ரிவி யையோ புலி விட்டால்தான் பார்க்க அனுமதியுண்டு. இப்படி இருக்கிறது எங்களது நிலைமை. மூன்று நாட்களாக ரிவி சனல்களை மூடி வைத்து ஜிரி வியையும் தீபத்தையும் பார்க்க நிர்ப்பந்திக்கிறார்கள். இதைக் கேட்பார் யாருமில்லையா?
நண்பன்
//thevi on May 20, 2009 6:43 pm புலிகள் இன்னமும் அழியவில்லைதான். புலம் பெயர் நாடுகளில் விரும்பிய ரிவி யை ,காசு கட்டி எடுத்த சன் ரிவி யையோ ஐங்கரன் ரிவி யையோ புலி விட்டால்தான் பார்க்க அனுமதியுண்டு. இப்படி இருக்கிறது எங்களது நிலைமை. மூன்று நாட்களாக ரிவி சனல்களை மூடி வைத்து ஜிரி வியையும் தீபத்தையும் பார்க்க நிர்ப்பந்திக்கிறார்கள். இதைக் கேட்பார் யாருமில்லையா?//
புலிகளது ஆசீர்வாதம் இல்லாமல் தமிழர்கள் எதையும் செய்ய முடியாதவாறு ஒரு விதியை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதன் தாக்கம் இன்னும் சிறிது காலம் இருக்கும். அதிகம் பேர் சுமார் 20 – 25 வருடங்களாக எதையும் செய்யாமலே இருக்கப் பண்ணினார்கள். அது ஒரு கொடுமை. இனி அவை மாறியாக வேண்டும். மாறும். டீவீதானே உலக டீவிக்கள் எத்தனை? அதை பாருங்கள். இந்த தொலைக் காட்சிகள் தமிழரை அழிவுப் பாதையை நோக்கி கொண்டு செல்கின்றன. காட்டை குடுத்து விட்டு காசைக் கேளுங்கள்.
msri
தள்ளி நில் என்று சொல்ல தட்டியைத் திறந்தானாம்> இப்பாங்கில் பதில் சொல்கின்றார்கள் அன்பர்கள்! அட நான் சொல்ல வந்தது> இலங்கை ராணுவம் வெளிநாட்டு உதவியே இன்றி இவர்கள் சொல்லும் பயங்கரவாதத்தை இவ்வளவு வேகமாய் முடித்திருக்குமா என்பதே!
thevi
நண்பனின் கருத்திற்கு நன்றி.
பார்த்திபன்
//தள்ளி நில் என்று சொல்ல தட்டியைத் திறந்தானாம்> இப்பாங்கில் பதில் சொல்கின்றார்கள் அன்பர்கள்!- msri //
இலங்கை அரசு எந்தச் சந்தர்ப்பத்திலும் தனக்குக் கிடைத்த வெளிநாட்டு உதவிகளை மறுக்கவில்லை. அப்படியிருக்க நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டுப் போல உள்ளது உங்கள் கருத்து. சென்ற வருட மாவீரர் உரையினில் கூட தலை உலகத்தின் 3வது இராணுவத்தையே விரட்டியடித்த தனக்கு உந்த மகிந்தவின் போர் முன்னெடுப்புகள் எல்லாம் தூசு என்று வீராப்புத் தானே பேசியிருந்தார். இப்ப அந்த தூசு உங்கள் கண்களிலோ??
msri
நான் புலி ரசிகனல்ல!> எனக்கு டக்கிளசு-சங்கரியாரின் பாணியில் பதில்சொல்லவேண்டாம்! > என் கேள்வி இலங்கை ராணுவம் வெளிநாட்டு உதவியின்றி> தனித்து நின்று> அரசு சொல்லுகின்ற இந்த யுத்த்த்தை சுலபமாக முடித்திருக்குமா?> இதற்காகத்தான் நான் தள்ளிநில் என்று சொல்ல………….என்கின்றேன்!