முள்ளிவாய்க்கால் மோதல் பகுதியில் அகப்பட்டிருந்த வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் நிலை குறித்து அறியத்தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சபாநாயகர் பிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சதாசி்வம் கனகரட்னம் கடந்த ஒருவார காலத்துக்கு முன்னர் தம்முடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டிருந்ததுடன், அதன் பின்னர் அவருக்கும் தமக்குமிடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
rohan
ஒரு கனடா வானொலிக்கு அரியனேந்திரன் தந்த தகவலின் படி கனகரத்தினம் குடும்பம் ஓமந்தை வந்திருக்கிறது.
அவரைக் குறுக்கு விசாரணை செய்யாது விட் இராணுவம் ஒத்துக் கொண்டிருக்கிறதாம்.
accu
பாலகுமார், யோகி, புதுவை இரத்தினதுரை இவர்களுக்கு என்ன நடந்தது.
KUNALAN
//பாலகுமார், யோகி, புதுவை இரத்தினதுரை இவர்களுக்கு என்ன நடந்தது.//
இதை தோழர்.கி.பி.அரவிந்தனிடம் அல்லவா கேட்க வேண்டும். தேசத்திடம் கேட்கிறீர்களே?! இப்போது வட்டுக்கோட்டையைத் தோழில் சுமந்து காவடி எடுத்துத் திரியும் ஈரோஸ் மத்தியகுழு உறுப்பினர் கி.பி.அரவிந்தன் என்று சொல்லப்படுகிற/ சுந்தர் என்று சொல்லப்படுகிற/கிறிஸ்தேப்பு பிராக்ஸிசிடம்தான் நாம் பல கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாள் எல்லோரும் வேலைக்கு லீவு எடுத்துக்கொண்டு பாரீசில் இருக்கும் அவரது இல்லத்தை கொடிகள் பதாகைகயுடன் முற்றுகையிட்டு நீதி கேட்போம்.
குணாளன்
நண்பன்
கீபீ கெதியா கட்சி மாறுவார். வட்டுக்கோட்டையை வட்டுக்க வச்சி நோர்வேக்கு கொண்டு வந்த அறிவுஞானம். கீபீ வீட்டுல சிங்க கொடி தொங்குறதா கேள்வி? உண்மையே?