புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தை மரபணு பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் குறித்து மரபணுப் பரிசோதனைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக கொழும்பிலிருந்து வன்னிக்கு அனுப்பப்பட்ட விஷேட வைத்தியர் குழுவொன்றினூடாக பரிசோதனைக்குத் தேவைப்படும் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் விமானம் மூலம் இன்று காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் பிரதான எதிரியாக குறிப்பிடப்பட்டுள்ள பிரபாகரன், மரணித்துள்ளமையை நீரூபிக்கும் வகையில் விஞ்ஞான ரீதியில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் விடுத்த கோரிக்கையினை அடுத்தே அரசாங்கம் குறித்த பரிசோதனையைச் செய்வதற்கான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Kamalsutha
    Kamalsutha

    மரபணுப்பரிசோதனையை இலங்கை அரசாங்கம் செய்வதைவிட மூன்றாம் தரப்ப நாடுகளில் செய்வதே பொருத்தமாகும். இலங்கை அரசு செய்யுமாக இருந்தால் ஒரே ஒரு விடைதான் பரிசோதனையின் பின்னர் கிடைக்கும். இந்த நாடகங்கள் எல்லாம் இலங்கையில் எத்தனை தடவைகள் அரங்கேறியுள்ளன?

    Reply
  • Kusumbo
    Kusumbo

    உடனே மரபணுப்பரிசோதனை செய்து அறிக்கையையும் இராணுவமும் அவர்களின் இணையத்தளங்களும் வெளியிட்டுவிட்டனவே தெரியாதா? / உலகிலே விஞ்ஞானத்தில் முன்னேறிய வல்லரசு இலங்கை என்பதை அறியீரே. உலகில் மரபணுப்பரிசோதனை செய்வதற்கு பலநாட்கள் எடுக்கும். இலங்கையில் மட்டும்தான் உடனுக்குடன் உபகரணங்கள் இன்றி மரபணுப்பரிசோதனை செய்யப்படுகிறது.

    Reply