கடந்த 7 நாட்களாக பட்டினி போராட்டத்தை மேற்கொண்ட 2 பெண்கள் உட்பட ஆறு தமிழ் மக்களின் உண்ணாநிலை போராட்டத்தை நேற்று இரவு 7 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பீற்றர் பழச்சாறு கொடுத்து நிறைவுசெய்தார். அவர்களில் ஒருவரான நிமலன் கருத்து தெரிவிக்கையில்
“ அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களால் மட்டுமே தமிழர்களுக்கு ஒரு விடிவை பெற்று தர முடியும். ஆகவே ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரும் பிரித்தானிய நோக்கியும், கனடாவில் வாழ்பவர்கள் அமெரிக்கா நோக்கியும் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும். தமிழரின் போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. நிச்சயம் ஒரு முடிவு காணும” என தெரிவித்துள்ளார்