தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் குடும்பத்தினரும் உயிரிழந்து உள்ளனர்! – எஸ் பத்மநாதன் த வி பு

LTTE_Leader_Familyதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி மகள் துவாரகா இருவரும் கொல்லப்பட்டதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் உறுதிப்படுத்தி உள்ளார்.

வே பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்களுடைய இளைய மகன் பாலச்சந்திரன் பற்றிய செய்திகளை உறுதிப்படுத்த முடியவில்லையென செல்வராஜா பத்மநாதன் தெரிவித்து உள்ளார்.

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்!!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்து உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மனைவி மதிவதனி, அவருடைய மகள் துவாரகா மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. அவர்கள் அனைவரது தலையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுகிறது. நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடல் இருந்த இடத்திற்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.

இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் இருந்து தப்ப முயற்சித்த போது இலங்கைப் பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    கடந்த ஆறு மாதங்களாக,மாவிலாறு அணையை மூடியதிலிருந்து,மிக கேவலமான,முட்டாள்தனமான நகர்வுகளை விடுதலைப் புலிகள் செய்துள்ளனர். தங்கள் குடும்பத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்டவர்களுக்கு தெரியும், இவ்வளவு அப்பாவி பிள்ளைகளின் உயிர்களைப் வலுக்கட்டாயமாக பலியிட்ட பிரபாகரனின் குடும்பத்திற்கு இத்தகைய அவமானகரமான நிர்மூலம் தேவைதானா என்று?. ஆனால், இவ்வளவு கிரிமினலாக, ஒரு இயந்திர கதியில் பலியெடுத்த ஒருவன், இப்படி ஜாக்பாட் ஜாங்கோ(புனிதப் போர் இல்லாத)இராணுவத்திடம், மாட்டிக்கொண்டு பலியாக மாட்டார்கள். இந்த “ஆப்பரேஷன் பீக்கன்” நடந்த விதம், ஒரு”நிறுவனமாக்கிய அட்டவணையுடன்” நடைபெற்று முடிந்துள்ளது. பிரபாகரனை சுற்றி இருந்தவர்கள் “பிரபாகரனே வேண்டாம்” என்று அடிவயிற்றிலிருந்து எழுந்த கசப்புண்ர்வினால் மட்டுமே இத்தகைய ஒழுங்குமுறை சாத்தியம். இதன் மூலம் ஏதாவது இலாபம் அடைவதை விட, “இந்த சங்கை” ஆரம்பத்திலேயே, “ஊதி கெடுத்திருக்க வேண்டாம்”.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜெயபாலன், நீங்கள் எந்த அடிப்படையில் ஒற்றை வரியில் இதனைத் தந்துள்ளீர்கள் என்பது புரியவில்லை. இப்படி வதந்தியாகப் பலர் பல ஊடகங்களிலும் எழுதியுள்ளனர். ஆனால் இன்றுவரை இலங்கை அரசோ இலங்கை இராணுவமோ இதனை உறுதி செய்யவில்லை. அத்துடன் இன்றைய பிபிசி செய்தியில் இதனைப்பற்றி இராணுவப் பேச்சாளரிடமும் கேட்ட போதும் இது வதந்தியென்றும் பிரபபாகரனும் மகனும் கொல்லப்பட்டதையே உறுதி செய்தார். எனவே உறுதியான தகவல் எதுவும் தங்களிற்குக் கிடைத்திருந்தால் அதனைத் தெளிவாக்குங்கள். அதனைச் செய்யாமல் ஊக ஊடகமாக தேசம்நெற்றையும் மாற்றிவிடாதீர்கள்

    Reply
  • KUNALAN
    KUNALAN

    //இன்று (May 20)சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.//
    //நந்திக் கடல் அருகே பிரபாகரனது உடலுக்கு அருகே இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.//
    இப்படியொரு வேடிக்கையான செய்தியை இப்போதுதான் முதல்முறையாகப் படிக்கிறோம். பிரபாகரனும் இன்று 20ம் திகதிதான் சுடப்பட்டாரா ஜெயபாலன்? எழுதிய செய்தியை மீண்டும் படித்து சரி பார்ப்பதில்லையா நீங்கள்?

    குணாளன்

    Reply
  • lio
    lio

    விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொலை

    Reply
  • Akaran
    Akaran

    முன்பு உங்களைப் போன்றவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்பி வந்தீர்கள் பிரபாகரன் குடும்பம் வெளி நாட்டில் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று, இப்பொழுது உங்களுக்கு சந்தோசம் தானே. இனி நீங்களும் உங்களைப் போன்ற புலி எதிர்ப்பாளர்களும் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும்.

    Reply
  • john
    john

    இது கொடுமை.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    “ஆப்பரேஷன் பீக்கன்” அம்பலபடுத்தியதால் எனக்கு வந்த சிக்கல் கனவிலும் நினைக்க முடியாது. தற்போதும் சட்ட சிக்கலில் மாட்டியுள்ளேன்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சேது
    அப்ப இனி இலங்கை இராணுவம் இந்திய இராணுவத்துடன் கைகோர்த்து நோர்வே வரப் போகுதோ?? அப்ப இப்ப இதுக்கு என்ன பெயர் வைச்சிருக்கினம்?? “ஆப்பரேஷன் சேது பீக்கன்” எண்டோ??

    Reply
  • muthu
    muthu

    இதைத்தான் ரெலோ குடும்பங்களுக்கு புலி செய்தது. இப்ப அதையே அரசு செய்யுது. அரசும் புலியும் ஒண்டுதான். இந்தக் கொலைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பிரபாவின் மனைவியும் மற்ற பிள்ளைகளும் நடேசனின் மனைவியும் செய்த குற்றமென்ன??

    Reply
  • Sethurupan
    Sethurupan

    பார்த்திபன் ஏன் என்மீது கோபம்.

    இதை நான் அம்பலபடுத்தியது உண்மை. அது நடந்தது 2004 இறுதி காலபகுதி.

    திட்டம் இணைத்தலைமை நாடுகளிடம் ஒரு தரப்பால் கொடுக்கபட்டது.

    விடயம் அம்பலபடுத்தியதால் எனக்கு வேறு பக்கத்தால் ஆப்பு அடித்தனர்.

    இது தொடர்பாக தேசம் என்னுடன் தொடர்பு கொண்டு விளக்கம் கெட்டதும் அதற்கு பதில் சொல்ல மறுத்தையும் மிகுதி விடயத்தையும் தேசம் இணையத்திடமே விட்டுவிடுகிறேன்.

    Reply
  • thevi
    thevi

    “ஆப்பரேஷன் பீக்கன்” அம்பலபடுத்தியதால் எனக்கு வந்த சிக்கல் கனவிலும் நினைக்க முடியாது. தற்போதும் சட்ட சிக்கலில் மாட்டியுள்ளேன்.”

    தலை போனதும் மெள்ள கிளம்புகிறார்கள். தமிழ் மக்களேு கவனம்!

    Reply
  • accu
    accu

    ஜெயபாலன் தயவுசெய்து ஊகச்செய்திகளை பிரசுரிக்காதீர்கள்.நன்றி.

    Reply
  • KUNALAN
    KUNALAN

    இன்று(20) மேலும் 7 புலிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசு சொல்கிறது.

    பிரிகேடியர் சூசை – கடற்புலிகளின் சிறப்புத்தளபதி

    லெப்டினன் கேணல். வெற்றிட்-சிரேஸ்ட உளவுப் பிரிவுத் தளபதி

    லெப்டினன் கேணல். றாம் குமார் உளவுப் பிரிவுத் தலைவர்

    லெப்டினன் கேணல். மணிமேகலா(கோமலி) –பெண் உளவுப்பரிவுத் தலைவர்

    லெப்டினன் கேணல். அண்ணாத்துரை – அரசியல் துறை பொறுப்பாளர்(மட்டக்களப்பு)

    லெப்டினன் கேணல்.வினோதன் –சிரேஸ்ட உளவுப்பிரிவுத் தலைவர்

    கேணல். றங்கன் – சிரேஸ்ட கடற்புலித் தலைவர்

    குணாளன்

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    ஒவ்வொரு ஊடகவியலாளனையும் போல் நான் எழுதுகின்ற தருகின்ற செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். ஆனால் இச்செய்தி ஊகமாகவும் பொய்யாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

    த ஜெயபாலன்.

    Reply
  • Gnanendran Thevaranjan
    Gnanendran Thevaranjan

    அதிர்ச்சி தகவல
    சார்லஸ் அந்தோனி என்று அரசாங்கம் அடையாளம் காட்டிய உடலின் DNA யும் பிரபாகரன் என்று அடியாளம் காணப்பட்ட உடலின் DNAயும் வித்தியாசம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கிட்டுவின் பழைய படத்தை திருகுதாளம் மூலம் மாற்றி இராணுவம் சார்லஸ் அந்தோனி என்று வெளியிட்டிருக்கிறார்கள் இதை நம்ப வேண்டாம்தலைவர் இருக்கிறார் -நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்

    Reply
  • Thirumalai Vasan
    Thirumalai Vasan

    பிரபாகரன் கொலை செய்யப்பட்டாரோ இல்லையோ புலி எதிர்ப்பாளர்களின் ஆழ்மனதின் ஆதங்கங்கள்-ஜெயபாலன் போன்றவர்களால் செய்திகளாக்கப்படுகின்றன என்றே கருதுகின்றேன். இன்று பிரபாகரனைச்சுற்றியும் அவரது மரணத்தைச் சுற்றியும் பின்னப்பட்டுள்ள கதைகளும்> அவர் உயிரோடு நலமாக தனது மரணக்காட்சிகளையே பிளாஸ்மா டீவியில் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற தமிழகத்து நக்கீரன் கட்டுரைகளும்> பல்வேறு இடங்களிலும் சூழலிலும் கிடைக்கப்பெற்ற அவரத உடல்கள் பற்றிய செய்திகளும்> ஏன் தற்பொழுது அரசாங்கத்தின் ஊடகம் கூடத் துணியாத அளவு கற்பனைத்திறத்துடன் ஜெயபாலன் கிளப்பிவிட்டுள்ள மதிவதனியின் மரணமும் (இந்தக்கதை நடேசனின் மனைவியின் கொலையுடன் கிளைவிட்டிருக்கக்கூடும்) கூட ஈழத்தமிழ்ப் போராட்டத்தில் கால ஓட்டத்தில் ஓரம்கட்டப்பட்டுவிட்ட மாஜி போராளிகளையும்> அவர்களின் அனுதாபிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தனவாகவே காணப்படுகின்றன.

    அரசாங்கம் என்ன செய்ய நினைத்ததோ அதை வெற்றிகரமாக நீங்கள் செய்கிறீர்கள் அவர்களின் சார்பாக. இத்தகைய ஆதாரமற்ற செய்திகளால் அங்கு வன்னிநிலப்பரப்பில் தீவிரமாக இடம்பெறும் இனக்கொலையின் சுவடுகளை அழிக்கும் பணிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது தவிர்க்கப்படுகின்றது. இன்று ஒரு உண்மையான ஊடகவியலாளனாக நடந்துகொள்ள முயற்சிப்பதாக இருந்தால்> எமது மக்களின் அழிவுக்கு எதிராக நாம் உலக அரங்கில் மேற்கொள்ளக்கூடிய பரப்புரைகளையிட்டே கவனம் செலுத்தவேண்டும். முள்ளிவாய்க்காலில் சேவையாற்றி இன்று அரச இயந்திரத்தின் இரும்புக்கரங்களுக்குள் காணாமல்போய் உள்ள வைத்தியர்களையும்> அரசாங்க அதிகாரிகளையும் பற்றி உலகம் அறிந்துகொள்ள நீங்கள் ஏதாவது செய்யலாம். அதன்மூலம் எதிர்காலத்தில் அவர்கள் ஒரு இன அழிப்பின் சாட்சிகளாக சர்வதேச நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் அளிக்காதவாறு மெளனிக்கச்செய்ய முயலும் அரசினை கொடூரத்திட்டத்தை அம்பலப்படுத்தலாம். இதைவிட்டு காழ்ப்புணர்ச்சிகளுக்கும்> சேறுபூசல்களுக்கும் தேசம்நெட் இடம்தரக்கூடாது. பொறுப்புடன் செயற்படவேண்டும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //கிட்டுவின் பழைய படத்தை திருகுதாளம் மூலம் மாற்றி இராணுவம் சார்லஸ் அந்தோனி என்று வெளியிட்டிருக்கிறார்கள். – Gnanendran Thevaranjan //
    நீங்கள் அடுத்தவர்களை முட்டாள்களாக்குவதிலேயே பேரின்பம் காணுகின்றீர்கள். DNA வித்தியாசம் என்று எந்த மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்?? அதுபோல் இலங்கை அரசு சார்ல்ஸ் அந்தோனியின் படத்தைக் காட்டவில்லை, உடலத்தைத் தான் காட்டியுள்ளது. உங்களுக்கு சார்ல்ஸ் அந்தோனியையும் தெரியவில்லை கிட்டுவையும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இப்படியொரு புரளியை எழுதியிருக்க மாட்டீர்கள்.

    Reply
  • Sooriasegaram, Mylvaganam
    Sooriasegaram, Mylvaganam

    ஜெயபாலன், நீங்கள் எந்த அடிப்படையில் ஒற்றை வரியில் இதனைத் தந்துள்ளீர்கள் என்பது புரியவில்லை. இப்படி வதந்தியாகப் பலர் பல ஊடகங்களிலும் எழுதியுள்ளனர். ஆனால் இன்றுவரை இலங்கை அரசோ இலங்கை இராணுவமோ இதனை உறுதி செய்யவில்லை. அத்துடன் இன்றைய பிபிசி செய்தியில் இதனைப்பற்றி இராணுவப் பேச்சாளரிடமும் கேட்ட போதும் இது வதந்தியென்றும் பிரபபாகரனும் மகனும் கொல்லப்பட்டதையே உறுதி செய்தார்—-பார்த்திபன்
    http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=49560
    The bodies of Mathvathani Erambu, identified as Prabhakaran’s wife and a girl Duvaraka and a young boy Balachandran identified as Prabhakaran’s children were found in the vicinity of the body of LTTE leader Velupillai Prabhakaran, according to a report today qouting the army.

    Reply
  • Raj
    Raj

    திருமலை வாசன் அவர்களே! உங்கள் ஆதங்கம் நியாயமானதுதான் ஆனால் நாம் இங்கிருந்து செய்யவெளிக்கிடும் எந்த காரியங்களும் புலன்பெயர் புண்ணாக்குகளின் செயற்பாடாகத்தான் பார்க்கப்படுவதுடன் நல்மனம் கொண்ட பலருக்கு 30 வருடகால பயதோஸம் முற்றாக விடுபடாத ஓர் தடையும் உள்ளதை ஏற்பீர்கள் தானே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    Sooriasegaram, Mylvaganam, நீங்க நேற்று ஜெயபாலன் இணைத்த செய்தி பற்றி நான் கேட்ட கேள்விக்கு, இன்று டெய்லி மிரர் இணைத்தத செய்தியின் இணைப்பைத் தந்துள்ளீர்கள். இதே செய்தியை நேற்றே தற்ஸ்தமிழ் இணையமும் இராணுவம் தெரிவித்ததாக வெளியிட்டிருந்தது. ஆனால் இந்த நிமிடம் வரை இலங்கை அரசோ, இலங்கை இராணுவமோ எதுவும் இதனைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இந்தச் செய்தியை முதலில் புலியாதரவு ஊடகங்களே வெளியிட்டன. சிலவேளை அனுதாபங்களை பெறும் நோக்கமாகவும் இருக்கலாம். இவர்கள் வெளியிட்ட செய்தியையே மற்றவர்களும் செய்தியை முந்தித் தரும் நோக்கத்தில் செய்தி உண்மையோ பொய்யோ என ஆராயாமலே தாமும் பிரசுரம் செய்துள்ளார்கள் என்பதே எனது சந்தேகம். இதனை இன்றுவரை எவரும் தெளிவாக்கவில்லை….

    Reply
  • Enaas
    Enaas

    Please anybody can tell me where we can read more about ‘operation peagun’? you all are talking about..

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //Sethurupan on May 20, 2009 7:48 pm “ஆப்பரேஷன் பீக்கன்” அம்பலபடுத்தியதால் எனக்கு வந்த சிக்கல் கனவிலும் நினைக்க முடியாது. தற்போதும் சட்ட சிக்கலில் மாட்டியுள்ளேன்.//
    நீங்கள் யார் என்பதை அனைவரும் அறிவார்கள் சேது…….. உமது நிதர்சனம் இணையதளத்தை உமது இல்லை என மறுதலித்தவர் நீர். உமக்கே கொலை மிரட்டல் விடுத்து, நீரே போலீசில் புகார் செய்யும் மனிதர் உம்மைத் தவிர வேறு யார். உமக்கு ,….. நான் ஏற்கனவே உம்மைப் பற்றி மகிந்தவுக்கு போட்டுக் கொடுத்துட்டன். வாலை சுருட்டிக் கொள்ளும்.

    ஐயோ…ஐயோ…எப்பவும் சட்ட சிக்கல். பிறகு அதையும் எல்லாருக்கும் forward பண்ணும். நீங்கள் புலத்தின் முக்கிய புலி. அது அனைவரும் அறிவர்

    Reply
  • KUNALAN
    KUNALAN

    சேது அண்ணா! மெல்ல மெல்ல தலையை நீட்டி எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? புலியுடன் இருந்தால் இனியும் பொழைப்பு நடக்காதென சடன் முடிவு எடுத்து விட்டீர்களா? தப்பண்ணா! தப்பு!! புலியின் பெயரால் பணம் பார்த்தவர்கள் ஏற்கனவே திட்டங்கள் வகுத்து விட்டார்கள். தங்களது கல்லாப் பெட்டியை காய விட மாட்டார்கள். அவசரப் படாதீர்கள். கடை இப்போதைக்கு சாத்தப்பட மாட்டாது.

    குணாளன்.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    “ஆப்பரேஷன் பீக்கன்”

    நான் சொல்ல வந்த விடயம் “ஆப்பரேஷன் பீக்கன்” என்ற விடயம்.

    இப்படி ஒரு திட்டம் இருந்தது ஆனால் அது தொடர்பாக எந்த தமிழ் இணையத்திலும் வரவில்லை நண்பன் அண்ணா. அதற்கும் அப்பால் நான் மேற்கொன்டு அதைபற்றி கதைக்க விரும்பவில்லை.

    தேசம்நெட்டுக்கு அது தொடர்பாக விரிவாக தெரியும்.

    அதை அம்பலபடுத்தினென் ஆனால் எந்த தமிழ் இனையமும் நான் அந்த தகவலை போடவில்லை.

    03 சந்தர்பங்கள் இறுதி 50 நாட்களுக்குள் தரப்படும் அதை பயன்படுத்த தவறினால் தலை கொய்யபடும் என்று சொன்னேன் இந்த தலை கொய்யும் திட்டத்தை உரியவர்களுக்கு காட்டியும் ஒருவரம் நம்பவில்லை.

    ஆனால் நான் சொன்ன அந்த 40 நாட்களுக்குள் சொன்ன திகதிகளில் அவை நடந்து முடிந்தவிட்டது.

    இந்த திட்டத்தை நான் அம்பலபடுத்தியதற்கு சாட்சி கொழும்பில் உள்ள வித்தியாதரன் உட்படபலர்.

    எரிக் சொல்கைமை பாலித கோகன்ன ஆகியோருக்கு தெரியாமலே ஒரு சக்தி தொடர்பாடலை ஒட்டுக்கேட்டு என்கவுன்டர் முறை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தியுள்ளார்கள் என்பதை சற்று சிந்தித்தால் இந்த விசித்திரமான பை பாஸ் ஒப்பரேசன் எப்படி நடைபெற்றது என்று ஊகிக்க முடியும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சேது,
    நீர் சொல்வது உண்மையோ பொய்யோ என்பதில் எவருக்கும் இங்கு அக்கறையில்லை. எல்லாம் இலங்கை அரசு திட்டமிட்டபடி நடாத்தி முடித்து விட்டது. அப்படியிருக்க அந்த விடயம் பற்றி எதற்காக இங்கே தெரிவிக்க விரும்புகின்றீர்?? வெறும் சுயதம்பட்டம் தான் நோக்கம் என்றால் அதை உமது சொந்த இணையத்தளத்திலேயே செய்யலாமே??

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    இச்செய்தியின் நம்பகத் தன்மை பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது. சில சந்தேகங்கள் தவிர்க்க முடியாதது. யுத்தத்தில் முதலில் சாகடிக்கப்படுவது உண்மை என்பார்கள். அப்படி இருக்கும் போது கொல்லப்பட்டவர்கள் பற்றிய உண்மையை அறிந்து கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல என்பதும் யதார்த்தமானது. யுத்த பிரதேசத்திற்குள் சுயாதீனமாக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. புலிகளும் ஒரு இருப்புத்திரையிட்டு இரகசியமாக இயங்கும் அமைப்பு. இந்நிலையில் தகவல்களுக்கு மூன்றாம் தரப்பிடம் தங்கி இருப்பது தவிர்க்க முடியாதது.

    இச்செய்தியின் மூலம் இந்திய புலனாய்வு வட்டாரங்களே. மேலும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மதிவதனி பிரபாகரனதும் பிள்ளைகளினதும் மரணத்திற்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்து உள்ளார். அவரைத் தனது சகோதரி என்று குறிப்பிட்டுள்ள அவர் இந்த மரணம் அநியாயமானது என்றும் தெரிவித்து உள்ளார். இச்செய்தி இந்தியா ருடேயிலும் வெளியாகி இருந்தது.

    இந்த யுத்ததின் பின்னணி இந்தியா என்பதில் எனக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை. அந்த வகையில் இந்திய புலனாய்வு வட்டாரங்களின் தகவல்கள் முக்கியமானவை. அவையும் சரிபார்க்கப்பட வேண்டும். மேலும் இச்செய்தியை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக மறுக்கவில்லை.

    நண்பர் திருமலைவாசனின் ‘ஆழ் மன’ வெளிப்பாடுகள் இன்று புலம்பெயர்ந்துள்ள பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் வெளிப்பாடாக உள்ளது. எமது விருப்பங்கள் என்பது வேறு உண்மை வேறு. உண்மையை மூளை தர்க்கித்து ஏற்றுக்கொள்ளும். ஆனால் மனம் தனது விருப்பத்திற்கு மாறான உண்மையை அவ்வளவு இலகுவில் ஏற்றுக்கொள்ளாது. காலம் தான் மனதைப் பக்குவப்படுத்தி உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்கும். ஆனால் அது ‘ரூ லேற்’ ஆகிவிடும்.

    புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் ஜனவரி அளவில் கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் காப்பாற்றி இருக்கலாம். அதனை சிவாஜிலிங்கம் போன்றவர்களே அறிந்திருந்தனர். ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் ஒரு முடிவைக் கொண்டுவரலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை அவர் ஐபிசியில் நேயர்களுக்குச் சொன்னால் அன்று அவரை துரோகி என்றிருப்பார்கள். அதனால் அவர் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் புலியாதரவு தமிழர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களது மனம் பக்குவப்படவில்லை. அவர்கள் கற்பனையிலும் சாகசங்களிலும் தான் நாட்களைக் கடத்தினர்.

    புலிகளின் ஒவ்வொரு போராளியும் கொல்லப்பட்ட போது அவர்களுக்கு கெள்ரவம் வழங்கப்பட்டது. இன்று எத்தினை நூறு பொராளிகள் கொல்லப்பட்டு விட்டனர். ஆனால் அவர்கள் யார் எவர் என்பது பற்றியே அறியாதவர்களாக அவர்களது குடும்பங்கள் தவிக்க விடப்பட்டு உள்ளன.

    திருமலைவாசன் போன்றவர்கள் யதார்த்தத்தை உணர வேண்டும். வெறும் நம்பிக்கைகளும் விம்பங்களும் ஒரே நாள் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக வேண்டும்.

    த ஜெயபாலன்.

    Reply
  • thevi
    thevi

    “03 சந்தர்பங்கள் இறுதி 50 நாட்களுக்குள் தரப்படும் அதை பயன்படுத்த தவறினால் தலை கொய்யபடும் என்று சொன்னேன் இந்த தலை கொய்யும் திட்டத்தை உரியவர்களுக்கு காட்டியும் ஒருவரம் நம்பவில்லை”

    ஓ! நீர் புலிக்கு வேலை செய்துதான் உள்ளீர். தமிழர்களின் அதிஸ்டம் தான் உரியவர்கள் அதை நம்பாதது.

    Reply
  • Sethurupan
    Sethurupan

    பொதுவாக அக்கறை உள்ள அனைவருக்கும்.

    ஒரு தகவலை தேடி எடுத்து அதை ஒரு ஊடகத்தின் ஊடாக அம்பலபடுத்தினால் அது புலிக்கு வேலை செய்யும் தொழிலா? புலிக்கும் வேலை செய்பவனுக்கும் ஒரு விசாரனை தகவல் திரட்டும் செய்தி தேடுபவனுக்கும் வித்தியாசம் தெரியாத தாங்கள் இணையத்தில் கருத்து எழுததனும் வளந்தள்ளமை வரவேற்கதக்கது.

    நான் சுய தம்பட்டம் அடிக்கவில்லை.

    எனது கருத்து இலங்கையில் உள்ள ஒவ்வொரு 2 இலட்சம் தமிழருக்கு ஒரு அரசியல் குழு இருக்கிறது. 20 லட்சம் தமிழருக்கு 45 தமிழ் ஆயுத குழு.

    “இலங்கைதீவில் தமிழருக்கு ஆயுதம் ஏந்திய எந்த ஒரு ஆயுதக் குழுவாலும் தீர்வு கிடைக்கபோறது இல்லை” இலங்கையில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அது ஒட்டமொத்த தமிழனின் குருதியில் எழுதப்படும் ஒரு திர்வாகவெ இருக்கும்.

    இண்று மலையக வாக்குரிமை இல்லாத தமிழரைவிடவும் சிறுபான்மை சமூகமாக வடக்கு கிழக்கு தமிழரை மாற்றிய பெருமை தமிழ் ஆயுத குழுக்களை சாரும்.

    Reply
  • palli.
    palli.

    இந்த கட்டுரையை நம்புவதா அல்லது நக்கீரனை நம்புவதா?? இருப்பினும் அரசு ஏதோ அவசரபட்டு விட்டோமோ என ஆதங்க படுவது ஊகமல்ல செய்தி.

    Reply
  • palli.
    palli.

    //ஒவ்வொரு ஊடகவியலாளனையும் போல் நான் எழுதுகின்ற தருகின்ற செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். ஆனால் இச்செய்தி ஊகமாகவும் பொய்யாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். த ஜெயபாலன்.//

    உன்மையில் ஜெயபாலன் மனம் நிறைந்த பாராட்டுக்கள். ஒரு எதிரியை விமர்சிப்பது வேறு ஆனால் அந்த எதிரியே இறக்கும் போது அதில் மகிழ்வது மனித பண்பல்ல எதிரியை கூட கருத்தால் தான் வெல்ல வேண்டுமே ஒழிய கொலையால் அல்ல என்பது பல்லியின் கருத்து மட்டுமல்ல கனவுகூட. ஆனால் பல்லி இப்படி எழுதுவது பலருக்கு கோமாளிதனமாக இருக்கலாம். ஒரு ஊடகவியாளன்(ஜெயபாலன்) இப்படி எழுதியது பல்லிக்கு மகிழ்ச்சி.

    Reply
  • santhanam
    santhanam

    இது ஆபிரிக்காகண்டத்தில் 90களில் இப்படித்தான் விடுதலைபோரட்டங்களை உலக உளவு நிறுவனங்களின் ஆதரவுடன் வளர்க்கப்பட்ட இயக்கங்கள் சமாதானம் பேசி அவர்களின் தலைவர்கள் அழிக்கபட்டனர் ஆகவே இவைகள் எல்லாம் புதியவிடயம் அல்ல.

    Reply
  • palli.
    palli.

    சேது ரூபன் தாங்கள் சொன்னதில் ஒரு வீதம் 44 ஆயுத குழுக்களுக்கும் மீதம் 99வீதமும் தமது புலி ஆயுத குழுவுக்கும் பொருந்துமென
    பல்லி சொல்வது தவறா?? இது பற்றி நேரம் இருக்கும் போதெல்லாம் தேசம் பக்கம் வாங்கோ. விவாதிப்போம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வையும் ஜனவரி அளவில் கிளிநொச்சி வீழ்ந்த கையுடன் காப்பாற்றி இருக்கலாம். அதனை சிவாஜிலிங்கம் போன்றவர்களே அறிந்திருந்தனர். ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைப்பதன் மூலம் ஒரு முடிவைக் கொண்டுவரலாம் என்று கூறியிருந்தார். ஆனால் அதனை அவர் ஐபிசியில் நேயர்களுக்குச் சொன்னால் அன்று அவரை துரோகி என்றிருப்பார்கள். அதனால் அவர் அதனைச் செய்யவில்லை. ஏனெனில் புலியாதரவு தமிழர்கள் உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களது மனம் பக்குவப்படவில்லை. அவர்கள் கற்பனையிலும் சாகசங்களிலும் தான் நாட்களைக் கடத்தினர்.- ஜெயபாலன் //

    சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு ஏற்றவாறு தன் செய்திகளைச் சொன்னார் என்பதுவே பொருந்தும். புலியாதரவு ஊடகங்கள் எல்லாவற்றிலும் புலிகள் வெல்லுவார்கள், தமிழீழத்தை பெறுவார்கள், அந்நாள் நெருங்கி வந்துவிட்டது என்றும் புலம் பெயர் மக்கள் அனைவரும் வீதியில் இறங்கிப் போராடுங்கள் என்றும் திரும்பத் திரும்ப சொல்லி வந்தவர் இவர். உண்மையில் நடக்கப் போவதை இவர் உண்மையாகவே அறிந்திருந்தால் தன் வீர வசனங்களை கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். அத்துடன் இவர் கூட இந்தியத் தேர்தலில் எப்படியும் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்று புலிகளைப் போல் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். தேர்தல் முடிந்த பின்னும் முடிவுகள் அறிவிக்கும் வரை இதையே திரும்பத் திரும்ப GTV மற்றும் தீபம் தொலைக்காட்சியில் மாறி மாறி சொல்லிக் கொண்டேயிருந்தார்.

    Reply
  • X and Y
    X and Y

    If you do not mind, I can tell you that Mr. K. P is the main person who killed whole LTTE including Mr. Prabaharan and his family. The government of Sri Lanka is always sensitive about Diaspora Tamils because the Diaspora Tamils have got enormous ability that Sri Lanka never ever seen. The mistake Mr. K. P did was his latest comment via channel 4 to Diaspora Tamils.

    Now the LTTE structure is totally demolished. In the future the supporters of LTTE could not do any think in Sri Lankan internal politics, so the Diaspora Tamils should realize themselves whether they want to live in Sri Lanka with harmony or they want to live as slaves in western countries?

    Reply
  • மாயா
    மாயா

    விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் புதைக்கப்பட்டதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பிரபாகரனை அடையாளம் காணுவதற்காக DNA ஆய்வு ஒன்று செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    ______

    இவ்வளவு பலம் பொருந்திய இயக்கமாக இருந்தும் இறுதியில் விடுதலைப் புலிகளின் தலைவரது உடலத்தை சட்டரீதியாகப் பெற்று கெளரவிக்கக் கூட புலிகளால் முடியவில்லை என்பது வருத்தத்தையும், அவர்களது இயலாமையையுமே காட்டுகிறது. அதை ஏற்றுக் கொள்ளும் மனம் கூட இல்லாமல் போய்விட்டது வேதனையானது.

    அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    LTTE leadership safe: Tiger intelligence official
    [TamilNet, Friday, 22 May 2009, 09:49 GMT]
    Head of International Secretariat of the Intelligence wing of the LTTE, Mr. Arivazhakan, who contacted TamilNet Friday categorically denied the reports that the LTTE leader Mr. Velupillai Pirapharan has been killed. Mr. Arivazhakan urged the global Tamil community not to trust the “engineered rumours,” being spread by the Government of Sri Lanka and its military establishment.

    “Our beloved leader is alive,” he said and added that the LTTE leadership will make contact with its people at a suitable time in future. “These rumours have been set afloat to confuse the global Tamil community which has been voicing support for the liberation of Tamil Eelam,” he further said. Mr. Arivazhakan, who verified his identity through a senior reporter in Sri Lanka, did not reveal his location due to security reasons.

    Reply
  • rohan
    rohan

    மாயா //விடுதலைப்புலிகளது தலைவர் பிரபாகரன் உட்பட 300 புலிகளின் உடல்கள் முல்லைத்தீவில் புதைக்கப்பட்டதாக பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.//

    ஆனால் உடல் எரிக்கப் பட்டதாக அல்லவா முன்னர் இவர் சரடு விட்டிருந்தார்?

    Reply
  • மாயா
    மாயா

    // rohan on May 22, 2009 3:20 pm, ஆனால் உடல் எரிக்கப் பட்டதாக அல்லவா முன்னர் இவர் சரடு விட்டிருந்தார்?//

    Bodies of 300 LTTE cadres buried with Prabakaran’s

    (Lanka-e-News, May 22, 2009, 6.35 PM) Army spokesman Brigadier Udaya Nanayakkara says that over 300 bodies of the LTTE cadres including Prabakaran’s were buried in Mullaithivu area. Most of the corpses were decomposed as they were buried. The Army spokesman said that a DNA test was not carried out to identify the body of the LTTE leader. Brigadier Nanayakkara further stated that legal action would be initiated in future regarding the LTTE members now in custody.

    http://www.lankaenews.com/English/news.php?id=7722

    விடுதலைப் புலிகளது சரி – தவறுகள் எதுவானாலும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களது உடலத்தை ஆகக் குறைந்தது விடுதலைப்புலிகளது ஆசீர்வாதத்தோடு வாழ்கை நடத்திய TNA யாவது பெற்று கடைசி மரியாதையை செய்திருக்கலாம். இந்திய அரசியல்வாதிகளாவது கேட்டிருக்கலாம்.

    முடியாது என்று யாராலும் சொல்ல முடியாது. சதாம் குசைன் உடலத்தை அவர்களால் பெற்று இறுதி கிரிகைகளை செய்ய முடிந்தது. நமது இனத்தில் வாய்ச் சவடால் விட்ட எவருமே வாய் திறக்காதது ஏன்?

    இறந்தது பிரபாகரன் இல்லை என்றால் , உடலத்தை பெற்று அது பிரபாகரனது இல்லை என்று உலகத்தின் முகத்தின் காட்டியிருக்கலாம்.

    அது அனைத்து தமிழர்களது கடமையாக இருந்திருக்க வேண்டும். அவர் சாகவில்லை என்று அவரை அநாதையாக்கி புதைக்க சதிகாரர்களாக இருந்தவர்கள் என்னைப் பொறுத்தவரை தேசத் துரோகிகளாகவே கருதுகிறேன்.

    உங்களது சுயநல முகங்கள் இப்போது தெரிகின்றன.

    தமிழர்களது விடுதலைக்காக 30 வருடங்களுக்கு மேலாக போராடி படுகொலை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரனுக்கும் சக போராளிகளுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

    Reply
  • Nanpi
    Nanpi

    யார் இறந்துள்ளார்? யாரை எங்கே புதைப்பது? இதனைப் பற்றி மட்டுமே கதைத்துக் கொண்டிருக்காமல் மிங்சியிருக்கும் மனிதரையாவது காப்பாற்ற முயற்சிக்கலாமே. அடுத்தவன் துயரத்தைப் பற்றி சிறிதளவும் கவலைப்படாமல் தேசம்நெற்றும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றதே. கொள்கையைக் கொள்கையாலேயே எதிர்ப்போம். வன்முறை தீர்வைத்தராது.

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா? என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே! ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, சகல மக்களையும் நேசித்த சகல மக்களும் நேசித்த மன்னன்.

    கருணா தலைமையிலான ஆயுததாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகவும், அவர்களுடன் தாமும் இணைந்த செயற்பட விரும்புவதாகவும் திட்டமிட்டு பிரபாகரனால் கிழக்கிற்கு அனுப்பப்பட்ட ஆயுததாரிகள் வெள்ளைக் கொடியினை எந்தியவாறு கருணா தரப்பினருடன் இணைவதாக நாடகமாடி வெருகல், கதிரவெளி ஆகிய கிராமங்களில் நிலைகொண்டிருந்த 310 இளைஞர்களையும், யுவதிகளையும் 10.04.2004 ந் திகதியன்று தெரு நாய்கள்போன்று ஒரே நாளில் சுட்டுக்கொன்றனர், அவர்களை சுட்டுக்கொன்றது மட்டுமன்றி அவர்களின் உடல்களை அடக்கம் செய்யவிடாது நாய்கள், நரிகள், காக்கைகள் போன்ற பிராணிகளும் பறவைகளும் உண்பதற்கு வழியமைத்தனர்.
    -வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply
  • THATSTAMIL
    THATSTAMIL

    வவுனியா: பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்துவிட்டனர் என விடுதலை புலிகளின் வெளி விவகார தலைவர் பத்மாநாபன் தன்னிடம் கூறியதாக இலங்கை அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார்.

    விடுதலை புலிகளின் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கருணா கடந்த 2004ல் அந்த அமைப்பில் இருந்து விலகினார். தற்போது இலங்கை அமைச்சராக இருக்கிறார்.

    இந்நிலையில் அவர் கூறுகையில்,

    இலங்கை ராணுவத்துக்கு எதிரான போரில் பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் இறந்துவிட்டதாக அந்த அமைப்பின் வெளிவிவகார பிரிவு தலைவர் பத்மாநாபன் என்னிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் சொல்வதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் போர் பகுதியில் இருந்திருந்தால் நிச்சயமாக உயிர் தப்பியிருக்க முடியாது.

    பிரபாகரன் அரசியல் தீர்வை ஏற்க மறுத்துவிட்டார். அவரால் தான் 1 லட்சம் தமிழர்கள் இறந்துள்ளனர். பல கோடி கணக்கில் சொத்துக்கள் நாசமாகியுள்ளது என்றார் கருணா.

    இந்நிலையில் போர் உக்கிரமாக துவங்கிய சமயத்திலே பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களது உடல்களை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.

    இளைய மகன் எங்கே?:

    அதே நேரத்தில் அவரது இளைய மகன் பாலச்சந்திரன் எங்கு இருக்கிறார் என்பதும் மர்மமாகவே உள்ளது.

    Reply
  • palli
    palli

    ரெம்பதான் முக்கியம்;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //விடுதலைப்புலிகளது ஆசீர்வாதத்தோடு வாழ்கை நடத்திய TNA யாவது பெற்று கடைசி மரியாதையை செய்திருக்கலாம். இந்திய அரசியல்வாதிகளாவது கேட்டிருக்கலாம்.- மாயா //

    இதை கூத்தமைப்பினர் செய்திருந்தால் கூத்தமைப்பினரும் படு துரோகிகள் என்று அறிக்கைகள் வந்திருக்கும். இந்திய அரசியல்வாதிகள் இன்றுவரை பிரபாகரன் இறக்கவில்லையென்று தானே வாதாடுகின்றார்கள். பின்பு எப்படி பிரபாகரன் உடலத்தை வாங்குவார்கள். ஆக மொத்தத்தில் புலிகளும், புலியாதரவாளர்களும் பிரபாகரனை அநாதையாகவே அனுப்பி வைத்துவிட்டனர்.

    Reply
  • thevi
    thevi

    கருணாவிற்கும் பத்மநாதனுக்கும் உறவுகள் ஆரம்பமாகின்றதோ?

    Reply
  • rohan
    rohan

    //அவர் சொல்வதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால், அவர்கள் போர் பகுதியில் இருந்திருந்தால் நிச்சயமாக உயிர் தப்பியிருக்க முடியாது. //

    அது உண்மை தான் கேணல் கருணா அம்மான். நீங்கள் செத்துப் போய் விட்டதாக உறுதி செய்த பிரபாகரனுக்கே உச்சந்த்தலையில் கோடாலி வெட்டு விழுந்திருக்கிறது. இலங்கை இராணுவத்தின் அந்த அருமையான சாதனை பற்றி நீங்கள் மூச்சே விடவில்லை. மதிவதனி – துவாரகா கிடைத்திருந்தால் இலங்கை இராணுவம் என்ன செய்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

    …. ஊடகக்காரர்கள் – கருணாவை நாலு கேள்வி உருப்படியாகக் கேட்க வக்கில்லை!

    Reply