நாட்டிலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்திருந்தார்.
இதன்படி கடந்த 13 வருடங்களாகப் பதவி உயர்வு கிடைக்காமையினால் பாதிக்கப்பட்ட அதிபர் பிரிவு 2-2 இலுள்ள 1743 அதிபர்கள் அதிபர் பிரிவு 2-1 க்கும், அதிபர் பிரிவு 2-1 இல் இருந்த 2582 அதிபர்கள் அதிபர் பிரிவு 1 க்கும் தரமுயர்த்தப்படவுள்ளனர்.
அரச சேவை ஆணைக் குழு நியமிக்கப்படும்வரை இவர்களுக்கான பதவி உயர்வை வழங்கும் அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.