வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடு; சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசு பேசும் – பிரியதர்சன யாப்பா

anurapriyadarsanayapa.jpgவெளிநாடுகளில் புலிகளின் செயற்பாடுகளை முடக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் அரசாங்கம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துமென்று அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறையின் கீழும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுமென்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், கே. பீ. என்பவர், புலம்பெயர் தமிழர்களை ஒன்றுதிரட்டி, போராட்டத்தைத் தொடர்வார் எனக் கூறப்படுகிறதே” என்று செய்தியாளர் கேட்டபோது,

“கே. பீ.யைப் பற்றித் தெரியாது அவர் அவசியமும் இல்லை புலிகள் இயக்கம் உலக நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. கே. பீ.க்கும் பிடிவிறாந்து உள்ளது. இலங்கையில் தீவிரவாதம் தோன்றுவதற்கான மூலாதாரமே அழிக்கப்பட்டுவிட்டது. வெளிநாடுகளில் புலிகளின் செயற்பாட்டை முடக்குவது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். குற்றவாளிகளைப் பரிமாறும் நடைமுறையும் உண்டு. இனி எவ்வகையிலும் தீவிரவாதம் வளர்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது” என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • KUNALAN
    KUNALAN

    யாப்பு மச்சான் வச்சிட்டாண்டா ஆப்பு..!
    “குற்றவாளிகளைப் பரிமாறும் ஒப்பந்தம் பற்றியோ எந்தெந்த நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இருக்கின்றன என்ற விபரமாவது இந்தப் புலன்பெயர் புலிப் புண்ணாக்குகளுக்கு ஏதாச்சும் தெரியுமா?
    எந்தநாட்டு சிற்றிசன்சிப்பையும் இந்த ஒப்பந்தம் ஏறெடுத்தும் பார்க்காது. வழக்குத் தாக்கல் செய்துவிட்டு “ஏத்தி அனுப்பு” என்றால் கண்களை மூடிக்கொண்டு இந்த நாடுகள் அனுப்பிவிடும். துரையப்பாவைச் சுட்டதாக அகதி அந்தஸ்துப் பெற்ற அந்த 500இற்கும் மேற்பட்ட நபர்கள் உட்பட இதற்குள் அடங்கும். யப்பா…. யாப்பா இப்படி வயிற்றில் புளியைக் கரைக்கிறார்…

    குணாளன்

    Reply
  • மாயா
    மாயா

    புலத்து புலி மேடைகளில் வாய்ச் சவடால் விடுபவர்கள் , சிறீலங்கா தூதராலயங்களுக்கு சென்று மிரட்டிய நிகழ்வுகளும் உண்டு. அதில் முக்கியமானவை மகிந்த இருக்கும் இடத்தில் தலைவர் படம் தொங்கும் என்றும் அப்போது கவனிப்பதாகவும் சொன்னவை.

    மகிந்த அரசு வந்த பின் , சிறீலங்கா தூதுவராலயங்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக சில இராணுவ புலனாய்வுத் துறையினரை அனுப்பியது. புலத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்வதையும், புலிகளுக்காக முன்னணி வகிப்போர் குறித்த தகவல்களை திரட்டும் பணிகளை முக்கியமாக்கியது.

    தமிழ் தொலைக் காட்சிகளும், வானோலிகளும், புலி இணைய தளங்களும் ஒளி – ஒலி மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் இலகுவில் பெற்றுக் கொடுத்து பாரிய சேவை செய்துள்ளன.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இன்றைய நிலையில் இது மிகவும் தேவையான நடவடிக்கை. “புலன்” பெயர்ந்து தெருவில் நின்று அட்டகாசம் செய்யும் சிலரை இலங்கைக்கு திருப்பியனுப்பினாலே மற்றையவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.

    Reply
  • rohan
    rohan

    //துரையப்பாவைச் சுட்டதாக அகதி அந்தஸ்துப் பெற்ற அந்த 500இற்கும் மேற்பட்ட நபர்கள் உட்பட இதற்குள் அடங்கும். யப்பா…. யாப்பா இப்படி வயிற்றில் புளியைக் கரைக்கிறார்… // குணாளன்

    உண்மையா இது? ஆயுத்ம் ஏந்திய பின்னணி கொண்டோருக்கு அகதி உரிமை இல்லை என்பதல்லவா நிலைப்பாடு?

    Reply
  • sathian
    sathian

    கத்தும்… தவளைகள் கத்தட்டும்….. முடிவையும் அவர்களே தெரிந்துக்கொள்ளட்டும். இங்கே இருந்து சொந்த நாட்டுக்கு இவர்களை திருப்பி அனுப்பினாலும் திருந்தமாட்டார்கள்.
    சொந்த நாட்டிலேயே அகதிகளாகி… நிம்மதியையும் அமைதியையும் தேடும் அந்த மக்களுக்கு மீண்டும் ஏன் தலையிடி? நெருப்பு வாழ்க்கை?

    Reply
  • rohan
    rohan

    //சொந்த நாட்டிலேயே அகதிகளாகி… நிம்மதியையும் அமைதியையும் தேடும் அந்த மக்களுக்கு மீண்டும் ஏன் தலையிடி//

    பாதுகாப்புக்காக் விசா தரப்படுவது சரி தானே? இன்னொருநாடு “வா” என்று கூப்பிட்டு வாழ்க்கை தரத் தயாராக இருக்கும் போது அதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

    கல்விப் பின்னணியில் சொந்த நாட்டில் பொருளாதார ரீதியில் உயர் வகுப்பினராக இருக்க கூடியவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் கீழ்-மத்திய தரத்தில் அல்லாடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதே வேளை, சொந்த நாடுகளில் கீழ்-மத்திய தரத்தில் இருந்திருக்கும் நிலை கொண்டோர் புலம் பெயர்ந்த நாடுகளில் பாடுபட்டு வேலை செய்து உயர் வகுப்பினராக வளர்ந்ததையும் நான் அவதானிக்கிறேன்.

    எங்களில் பலர் முறையற்ற விதங்களில் வெளிநாடுகளுக்கு வந்து விட்டு மற்றவர்கள் வரும் வாய்ய்ப்புகளைப் பார்த்து முகம் சுளிக்கிறோம்!

    Reply