860 பட்டதாரிகளுக்கு நாடளாவிய ரீதியில் ஆசிரிய நியமனங்களை கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வழங்க அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் முகமாக இம்மாதத்திலிருந்து ஆசிரிய நியமனங்களை கல்வி அமைச்சு வழங்கவுள்ளது.
இவ்வாறு நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கான முன் ஆயத்த பயிற்சிக் கற்கைநெறி இம்மாதத்திலிருந்து இடம்பெறுகிறது. இதில் தமிழ்மொழிமூல பட்டதாரிகள் 259 பேர் மட்டக்களப்பு தாளங்குடா கல்வியியல் கல்லூரியிலும், சிங்கள மொழிமூல பட்டதாரிகள் 458 பேர் மகாவலி சியதே கல்விக்கல்லூரியிலும், பண்டுவஸ்நுவர கல்வியியல் கல்லூரியிலும், முஸ்லிம் பட்டதாரிகள் அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியிலும் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுகின்றனர். பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இந்த ஆசிரிய பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நியமனம் பெறும் பட்டதாரிகள் ஐந்து வருடங்கள் அதேபாடசாலையில் கடமையாற்றவேண்டும். பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் தரம் 31 பிரிவுகளுக்குள் உள்வாங்கப்படுவர்.