இலங்கை அரசியல் அமைப்பில் தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கும் படி மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப்புலிகள் பெரும்பாலானவர்களை அழித்து விட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இது எந்த வகையில் அந்த அரசு அங்கு வாழும் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு மருந்தாகும் என்பது கேள்விக்குறி. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது அவசியம். இந்த உண்மையை உணர்ந்துகொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க ஆவன செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்த போர் கசப்பான அனுபவங்களையே தந்துள்ளது. இந்தப் போரில் வெற்றி பெற்று விட்டோம் என யாரும் பெருமிதம் கொள்ள அவசியம் இல்லை. போர் முடிந்து விட்டதால், அங்கு ஐ.நா., மற்றும் ஐ.சி.ஆர்.சி., போன்ற சர்வதேச அமைப்புகள் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். இந்திய அரசும் மறு சீரமைப்பு பணிகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தனி ஈழம் கோரிக்கை வைத்த அவர், இப்போது அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரபாகரன் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
R S S
சர்வதேச அளவில்(ஐ.நா.), “சிறுபான்மையினர்” என்ற “சட்ட பதத்தின் கீழ்தான்” நிறைய உரிமைகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன (சுயநிர்ணய உரிமை அல்ல). இந்த சட்ட “சொற்களுக்குள்” ஒளிந்துக் கொண்டுதான் “இலங்கை மற்றும் இந்திய முஸ்லீம்கள்” சலுகைகளை அனுபவிக்கிறார்கள்(பணக்காரர்களும், ஏழைகளும்). தன்னுடைய ஆழ்ந்த சமூக- கலாச்சார விழுமியங்களிலிருந்து, “மேற்குலகம்” இதை அங்கீகரிக்கிறது- “ஆற்காட்டு நவாப்” காலத்திலிருந்து இது நடைபெறுகிறது. அதனால் இலங்கை-இந்திய முஸ்லீம்கள், “தமிழ் என்ற சொல்லாடலின் கீழ்” எந்த ஒரு ஒழுங்கமைப்பையும்,”RIDICULE” செய்யவே விரும்புவார்க்ள்.
பார்த்திபன்
அம்மா இப்போ அவதானமாகவே வார்த்தைகளை பாவிக்கின்றார். மறந்தும் அவர் வாயிலிருந்து தமிழீழம் என்ற சொல் வர மறுக்கின்றது..