குவாந்தனாமோ தடுப்பு சிறையை மூடுவது என்ற தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியாயப்படுத்தியுள்ளார். இந்த தடுப்புச்சிறையும், கொடூரமான விசாரணை முறைகளும் அமெரிக்காவை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாரும் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.