வடக்கு, கிழக்கு உட்பட 83 தேசிய பாடசாலைகளில் நிலவும் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதன்படி கல்வி நிர்வாக சேவையில் தரம்1, தரம்11, தரம்111 உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர் சேவையில் தரம்1, தரம்11 அதிபர்களும் விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரிகள் தாம் விரும்பும் மூன்று பாடசாலைகளின் பெயர்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட முடியும்.
கண்டி மதீனா தேசிய பாடசாலை, புத்தளம் சாஹிரா மத்திய மகா வித்தியாலயம். மட்டக்களப்பு புனித மைக்கல் மத்திய மகா வித்தியாலயம், கொழும்பு ஹமீட் அல் ஹுசைனி மத்திய மகா வித்தியாலயம், அக்குறணை அல்-அஸார் மத்திய மகா வித்தியாலயம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாதிமா தேசிய கல்லூரி, மட்டக்களப்பு வின்சன்ட் உயர் மகளிர் கல்லூரி, திருகோணமலை சென்ட் ஜோசப் கல்லூரி, ஹந்தெஸ்ஸ அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், மல்வானை அல் முபாரக் மத்திய மகா வித்தியாலயம், கம்பொளை சாஹிரா கல்லூரி, மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு சிவானந்தா மத்திய மகா வித்தியாலயம், ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம், கல்ஹின்ன அல்மனார் மத்திய மகா வித்தியாலயம், பேருவளை அல்-ஹுமெய்சரா மத்திய மகா வித்தியாலயம், சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை, வவுனியா மடுகந்த மகா வித்தியாலயம் உள்ளிட்ட 83 பாடசாலைகளின் பெயர்களையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.