குடும்ப நலனுக்காக கருணாநிதி ஆட்சியில் பங்கு கேட்கிறாரென கட்சிகள் குற்றச்சாட்டு

karunanithi.jpgதி.மு.க.வின் சுயநலப் போக்கு மத்திய அமைச்சரவையில் தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. குடும்ப சுயநலத்திற்காக ஆட்சி நடத்துவதற்கு தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி முயல்கிறாரென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ். ஷேக் தாவூத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

கருணாநிதியின் குடும்ப அரசியல் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அல்லது 5 பேர் மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை கேட்டு அமைச்சரானால் ஒரு குடும்ப ஆட்சி இந்தியாவில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டுவந்தது போல் அமையாதா? படித்தவர்கள் அரசியல் வித்தகர்கள் என்ன நினைக்கிறார்கள்? இது ஜனநாயகக் கேலிக்கூத்து.

ஆகவே ஒரு குடும்ப ஆட்சிமுறை மறுக்கப்பட வேண்டும். ஆனாலும், கருணாநிதி குடும்ப நலன் காரணமாக பிடிவாதமாக தி.மு.க.விற்கு மத்தியில் 9 அமைச்சர்கள் கேட்டு அது மறுக்கப்பட்டு 7 அமைச்சர்கள் காங்கிரசாரால் ஒத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி அதுவும் மறுக்கப்பட்டு காங்கிரசின் புதிய திட்டப்படி 9 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மத்திய அமைச்சர் என்ற நிலையை தி. மு.க நிராகரித்துவிட்டதாக நாளேடுகளில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு என்று கருணாநிதியால் சொல்லப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மொத்தத்தில் மழை ஓய்ந்தும் தூவானம் விடாமல் இருக்கிறது.

கருணாநிதி அவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து தமிழகம் திரும்பினால் தமிழகத்திலும் கருணாநிதி தலைமையிலான மந்திரி சபை ஆட்டம் காணுகின்ற சூழல் உருவாகும். தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் தான் தி.மு.க சிறுபான்மை அரசு ஆட்சியில் உடும்புப் பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆதரவு தமிழகத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் காங்கிரசை ஆதரித்து காங்கிரஸ் ஏன் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கக்கூடாது? இது ஒரு நல்ல முன்மாதிரியாக காங்கிரசாருக்கு அமையும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்று தமிழ் மாநில முஸ்லிம் லீக் நம்புகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • raja
    raja

    கருணாநிதிக்கு காங்கிரசின் ஆப்பு எப்படி இருக்கிறது. தமிழனை வைத்தே தமிழனை அடித்த டில்லி இப்போ அந்த தமிழனுக்கே ஆப்பு வைத்து விட்டது. கருணாநிதி தனது குடும்ப நலனை மனதில் வைத்து இலங்கைத் தமிழனை காட்டிக்கொடுத்தார். இலங்கையில் விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்கு கருணாநிதியின் தேவை டில்லிக்கு இருந்தது அந்த வகையில் கருணாநிதியை பயன்படுத்தி இந்தியாவின் பங்களிப்பையும் சிங்களத்தின் இராணுவக் கொடூரங்களையும் உலகின் கண் முன் மறைத்து தனது கோரமுகத்தை மறைத்து சாதுவாக காட்டி தமிழினத்தை அழித்து அவர்களை சீரழித்தார்கள். தாம் நினைத்தது நடந்து முடிந்ததும் கருணாநிதியை கழற்றி விட்டார்கள்.

    முன்னர் கருணாநிதியை நேரில் வந்து சந்தித்து கதைத்த அமைச்சர்கள் இப்போது டில்லி போன கருணாநிதியை விருப்பமென்றால் அமைச்சில் பங்கு கொள். அல்லது பறவாயில்லை என்று விட்டார்கள். கருணாநிதிக்கு விளங்கவில்லை. இன்று இலங்கைத் தமிழர்களுக்கு நேர்ந்த கதி தான் இந்திய தமிழர்களுக்கும் நடைபெறப்போகின்றது என்பது கருணாநிதிக்கு விளங்கவில்லை.

    நல்லா இருப்பார் கருணாநிதி. உம்மால் தான் தமிழனுக்கு இந்த கதி.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    திணமணி,தலையங்கம்:இதற்கு இதுவா நேரம்!:First Published : 23 May 2009
    மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

    2004-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

    இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்துவேறுபாடு கொண்டு, அதை ஒரு நாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, தில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்……………………………………
    http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=63757&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

    Reply
  • msri
    msri

    உடன்பிறப்புக்களுக்கு கலைஞரின் கடிதம்!
    என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே!
    தமிழகம் காத்திட>மந்திரிப்பதவி வேண்டி டில்லி சென்றிட> காஙகிரசின் தலைமை மறுத்திட>மன உடைவால் நோயும் வந்திட> மருத்தவமனை நோக்கி வந்திட>பிரதமர் அழைப்பும்> தூதுவரும் வந்திட> இப்போ சுகதேகியாகிவிட்டேன்! உடன்பிறப்பே! இருந்தும் தினமணியின் தலையங்கம் கண்டு நின்மதியற்றவன் ஆகிவிட்டேன்! மகிநதாவின் கூட்டாளி என்றும்-சர்வாதிகாரி நீரோமன்னன் என்றும்-இலங்கையில் தமிழ்இனம் அழிய> பிள்ளைகள் பேர+பூட்டப்பிள்ளைகுளுக்கு மந்திரிப்பதவிச் சண்டை பிடிக்கின்றேன் என்கின்றது தினமணி! உடன் பிறப்பே நான் டலலியில் சண்டை பிடித்ததது> என் குடுமபத்திற்காக அல்ல> தமிழக மக்களுக்கும் >இலங்கையில அல்லலுறும் எம் தொப்புள்கொடி உறவுகளுக்குமே! இதை நீ அறிவாய்! தமிழ்மக்கள் அறிவர்! நான் என்றும் தமிழ்இனக் காவலனே! சென்றமாதம் மருத்துவமனையில் படுத்திருந்து ஓர் வெற்றிக்கனி பறித்தேன! இப்போதம் படுத்திருந்து வெற்றிக்கனி(என் குடும்ப மந்திரிப்பதவிகள்) பறிப்பேன்! உடன்பிறப்புக்களே குளம்பாதீர்கள்! கடமை கண்ணியம் கட்டுபபாட்டுடன் பெரியார் அண்ணா வழி செல்வோம்!

    Reply