வளம் கொழிக்கும் தேசமாக கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும்

mahinda-rajapaksha.jpg‘எனக்கு முன்னிருந்த தலைவர்களால் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. இனிமேல், நான் உட்பட எவரும் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களைப் பாராட்டும் விழா நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடந்தது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக மீட்டெடுத்ததன் பின் நடத்தப்படும் முதலாவது தேசிய விழா இது. புலிகள் என்றதும் சிலரின் கால்கள் நடுங்கின. புலிகள் திறமைமிக்கவர்கள், அவர்களுடன் போராடி வெல்ல முடியாது. யுத்தம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இந்த நாட்டிலுள்ள சிலரும் எம்மிடம் கூறினர்.

இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூட கூறினர். ஆனால் நான் எனது முப்படைத் தளபதிகளை நம்பினேன். இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களை நம்பினேன். இந்த நாட்டிலுள்ள அனைவரிடத்திலும் நாட்டுப்பற்று இருக்கிறது. நாட்டின் மீது அன்பும் இருக்கிறது. இவை புதைக்கப்பட்டிருந்தது.

கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டு விட்டன. எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற போது, அங்குள்ள பிள்ளைகள் துப்பாக்கிகளை ஏந்தின. ஆனால் பிரபாகரனின் பிள்ளைகள் பாடசாலை சென்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு எமது தாய்மார் பாடசாலை கதவோரம் நின்று காவல் புரிந்தார்கள். ஏன் குண்டு வெடிக்கும் என்ற பயம் அவர்களுக்கு. இனி அந்த குண்டு வெடிக்காது என்பதை எமது தாய்மார்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.

தேசியக் கொடியை வடபகுதியில் பறக்க விட புலிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்த காலமொன்று இருந்தது. ஆனால் அந்தநிலை இனி இல்லை. எங்கும் தேசியக் கொடி பறக்கும். தலதா மாளிகைக்கு முன் பறக்க விடப்படும் தேசியக் கொடி தான் புதுமாத்தளனிலும் பறக்கும். இப்போது நாம் பெரும் வெற்றிக்களிப்பில் இருக்கிறோம். இந்த வெற்றி கொண்டாட்டமானது வேறு எவரது மனதையும் புண்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.

இன்று தமிழ், முஸ்லிம் வீடுகளிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நாடு பூரண சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள்.

தீவிரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோமோ அதே போன்று போதைப் பொருள் பாவனையையும், சட்ட விரோத மதுபான உற்பத்தியையும் ஒழிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவாலிலும் ஜெயிப்போம் என்றார் ஜனாதிபதி. பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களையும் பாராட்டும் தேசிய விழா பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • X and Y
    X and Y

    Dear every Commenter,
    It is very important to discus about our(Diaspora) future course. Please comment your political wish what should be done in Sri Lanka that you can feel and live as a proud citizen in Sri Lanka. Thank You.

    Reply
  • Srilal Miththapala
    Srilal Miththapala

    I HAVE A DREAM …..
    (With apologies to the Late Martin Luther King)

    I have a dream that one day this proud island nation will rise up and live out the true meaning of its creed: “We hold these truths to be self-evident, that all men are created equal.”

    I have a dream that one day on the streets of Hambantota and Mullaitivu, the sons of Tamils and Sinhalese will be able to sit down freely together at the table of brotherhood.

    I have a dream that one day even the towns of Tissamaharama and Jaffna, towns now sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice.

    I have a dream that my children will one day live in this “paradise” nation where they will not be judged by the language of their choosing or their ethnicity but by the content of their character.

    I have a dream today!

    I have a dream that one day, down in the South and up in the North, with its previous racists, with its local leaders having their lips dripping with words of “Themala” and Sinhalaya” — one day right there in these many towns, little Tamil boys and Tamil girls will be able to join hands with little Sinhalese boys and Sinhalese girls as sisters and brothers.

    I have a dream today!

    I have a dream that one day every valley shall be exalted, and every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight; “and the glory of God shall be revealed and all flesh shall see it together.”

    This is our hope, and this is the faith that I return to this island with.

    With this faith, we will be able to hew out of the mountain of despair a stone of hope. With this faith, we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. With this faith, we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day.

    And this will be the day — this will be the day when all of God’s children will sing with new meaning:

    My country ’tis of thee, sweet island of liberty, of thee I sing.
    Land where my fathers died, land of our forefathers’ pride,
    >From every mountainside, let freedom ring!
    And if Sri Lanka is to be a great nation, this must become true.
    And so let freedom ring from the prodigious hilltops of Kandy.
    Let freedom ring from the fertile plains in Jaffna.
    Let freedom ring from the lovely beaches of Trincomalee.
    Let freedom ring from the beautiful landscapes of Nuwara-Eliya.
    Let freedom ring from the lagoons in Batticaloa
    But not only that:
    Let freedom ring from the skyscrapers in Colombo.
    Let freedom ring from humble homes in Vavuniya.
    Let freedom ring from every hill and anthill of Ratnapura.
    From every village, let freedom ring.

    And when this happens, when we allow freedom to ring, when we let it ring from every village and every hamlet, from every town and every city, we will be able to speed up that day when all of God’s children, Sinhalese, Tamils, Muslims, Burghers, Malays, will be able to join hands and sing in the words of the old spiritual:

    Free at last! Free at last!
    Thank God Almighty, we are free at last!

    Reply
  • rohan
    rohan

    மிக்க நல்லது ஐயா. விஷ்வ கீர்த்தி சிறீ சிங்களதீஷ்வரா என்ற பட்டம் உங்களுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

    Reply
  • palli.
    palli.

    தங்களது ஆசை கனிவதுக்கு எமது பாராட்டுக்கள். ஆனால் அது சாத்தியபடுமா என தாங்கள் தற்போதய ஈராக் அதிபரிடம்தான் கேக்க வேண்டும். புலிகள் அழிந்து விட்டனர் என்பதை தாங்கள் சொன்னால் நாம் நம்பலாம். ஆனால் ஜெவிபி இதையும் சில வருடங்களுக்கு முன்பு வேரோடு அழித்துவிட்டதாக கேட்டோம்(வரலாறல்ல)ஆனால் அவர்கள் இன்று சில தரணங்களில் மகிந்தா குடும்பத்தையே கடுப்பேத்துவதாக ரணில் பக்கம் சொல்கிறார்கள். எது எப்படியோ தங்களது தற்போதைய மகிழ்ச்சியை பல்லி கெடுக்க விருப்பம் இல்லை. அத்துடன் தயவு செய்து ராணுவத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயம் இல்லாமல் போன(இறந்த) வீரர்களின் குடும்பத்துக்கு அந்த உன்மையை சொன்னால் அவர்கள் தங்கள் பிள்ளைகளின் இறுதி கிரிகைகளை செய்வார்களே. பல்லி எங்கே வருகிது என்பது தெரியும்தானை.

    Reply
  • மாயா
    மாயா

    //Dear every Commenter,
    It is very important to discus about our(Diaspora) future course. Please comment your political wish what should be done in Sri Lanka that you can feel and live as a proud citizen in Sri Lanka. Thank You. – X and Y on May 23, 2009 7:57 am //

    Diaspora பற்றி நேற்று முன் தினம் மகிந்த சார்பு ஜேவீபீ விமல் வீரவங்ச சொன்னார் ” இது எங்கள் பூமி , இங்கு வாழும் மக்கள் அனைவரும் எமது மக்கள். இலங்கையில் பிறந்து வாழும் மக்கள் இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் வாழலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. கொழும்பில் சிங்களவரும் இருக்கிறார்கள். தமிழர்களும் இருக்கிறார்கள். முஸ்லீம்களும் இருக்கிறார்கள். பர்கர் மலே என ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வடக்கு கிழக்கிலும் மட்டுமல்ல, இலங்கையில் தான் விரும்பும் எந்த பகுதியிலும் இனி வாழலாம். இந்த வெளிநாட்டு நாடுகள் மட்டுமல்ல ,இந்த Diaspora காரர்களும் எங்களுக்கு வாழ வழி காட்டத் தேவையில்லை. எங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்”

    Diaspora வின் தேவை இனி அவர்களுக்கு இல்லை. அவர்களின் தேவை Diasporaவை வைத்து பிழைப்பு நடத்துவோருக்கு தேவைப்படலாம். (பிரபாவுக்கு முன் தேவைப்பட்டிருக்கலாம்)

    உலகத்தையே கண்டு கொள்ளாத மகிந்த அரசு Diasporaவை கண்டு கொள்ளுமா? கடையை பூட்டுங்க. அது நல்லது.

    கொசுறு செய்தி : டக்ளசுக்கும் அவர்களது குழுவுக்கும் வவுனியா பக்கம் போக வேண்டாம் எனும் கட்டளை மகிந்தவிடம் இருந்து கிடைத்திருக்கிறது.

    Reply