விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்களான மனைவி மதிவதனி, மகள் துவாரகா மற்றும் சிறிய மகனான பாலச்சந்திரன் ஆகியோர் தொடர்பில் படைத்தரப்புக்கு இதுவரையில் எவ்விதத் தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்தும் இதுவரையில் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
அதேவேளை அவர்கள் மூவரது சடலங்களும் படையினரால் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
rohan
டி பி எஸ் ஜெயராஜ் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். ஜெயராஜ் **பொதுவாக** போதிய ஆதாரங்களுடன் தான் எழுதுவார் என்பது என் கணிப்பு. மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் கிடைத்தன என்று அவர் உறுதி செய்கிறார். மேலும், சுட்டுக் கொல்லப் பட்ட சாள்ஸ் அன்ரனி என்று காட்டப் பட்டது சாள்ஸ் அன்ரனி அல்ல என்றும் சொல்கிறார் ஜெயராஜ். அவ்வபோது சிறிது புனைவதில் டி பி எஸ் பின் நிற்பதில்லை. மகேஸ்வரி வேலாயுதம் மரணம் பற்றி அவர் எழுதிய கதை எமக்குத் தெரிந்தது தான். அவரது பிரபாகரன் கதையில் 80% உண்மை இருந்தாலே புலியின் கதை கந்தல் தான்.
ஒரு பொய்க் கதையை வைத்துக் கொண்டு ராஜபக்ச, பொன்சேகா, மேனன், நாராயணன் எல்லோரும் பந்தல் கட்ட மாட்டார்கள் என்ற என் கருத்தை ஜெயராஜும் எழுதியுள்ளார். நாளை பிரபாகரன் முளைத்து வந்தால் இவர்கள் எங்கே போய் முகத்தை வைப்பர்?
கேபி பழைய தகவலை வைத்து கொண்டு அவசரப் பட்டு விட்டாரோ என்று (அதை ஏன் செய்ய வேண்டும் என்றும் எனக்குப் புரியவில்லை) நான் நினைத்தேன். உண்மையிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் புலி ஆதரவாளர்கள் தம் மன வருத்ததை வெளிவிடவாவது அனுமதித்திருக்கலாம். அதுவும் ஜெயராஜ் எழுத்தில் வந்திருக்கிறது.
http://dbsjeyaraj.com/dbsj/archives/615
palli.
சீதைகூட 16 வருடம்தான் சிறை இருந்தார்(படித்ததுதான்) அனால் இந்த அம்மையாரோ 25 வருடம் வனவாசம் இருந்து விட்டார். இப்போது
முடிந்து விட்டார் எனவும் சொல்லுகிறார்கள். ஆனால் அப்படி நடக்காவிட்டால் மிகுதி காலமாவது மனவாசம் கிடைக்க எங்காவது வாழட்டும்மே. இதில் இதைவிட கருத்து சொன்னால் தொழில் நுட்ப்ப உதவியுடன் பல்லியை குப்பற போட்டு உளக்கிவிடுவார்கள்.