பிரபாகரன் உள்ளிட்ட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் படையினரால் அடக்கம் : பிரிகேடியர் தகவல்

Pirabakaran_Vதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட மேலும் 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது : வன்னியில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்று வந்த மோதல்கள் நிறைவுக்கு வந்ததையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் ஏனைய முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புலி உறுப்பினர்களின் சடலங்கள் படையினரால் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களுள் பல பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் அவற்றை உடனடியாக அப்பகுதியிலேயே அடக்கம் செய்ய வேண்டிய தேவை படையினருக்கு ஏற்பட்டது. இவ்வாறாக பிரபாகரன் உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களது சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டன.

இந்நிலையில் பிரபாகரனின் சடலம் கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதுடன் அவரது மகன் சாள்ஸ் அன்டனி, கடற்புலிகளின் தளபதி சூசை, புலனாய்வுப் பிரிவின் தளபதி பொட்டு அம்மான், அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரினதும் சடலங்கள் இவ்வாறாக அடக்கம் செய்யப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • மாயா
    மாயா

    அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பிரபா அடக்கம் செய்யப்பட்டதாக இவர்கள். உயிர்த்தெழுந்து இருப்பதாக புலம்பெயர் புலிப்புண்ணாக்குகள். இப்போ யேசுபிரான் கேக்கப்போகிறார். யாரடா தன்னுடன் போட்டிக்கு வந்தவன் என்ற. இயேசு உயிர்த்ததெழ 3நாட்கள் சென்றன. பிரபா இறந்த மறுநிமிடமே எழுந்துவிட்டாரே. வேலுப்பிள்ளையரிடம் கேட்கத்தான் வேண்டியிருக்கிறது இந்த மர்மம்பற்றி

    Reply
  • BC
    BC

    என்ன Kusumbo! தலைவர் இறக்கவே இல்லையாமே ! அது மட்டுமல்ல பொட்டு அம்மன் இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறாராம்.

    Reply
  • palli.
    palli.

    நானயகாரா ஏதோ மறைமுகமாக சொல்லுமா போலை இருக்கு.
    எதுக்கும் அவரிட்டை ஒரு போனை போட்டு என்ன சமாசாரம் என கேட்டால் என்ன.

    Reply
  • sivaji
    sivaji

    புலம்பெயர் புண்ணாக்குகள் அவர் உயிருடன் இருக்கிறார் என்று புலுடாவை விட்டதால் அரசாங்கமும் இந்த இறப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் எழ இருந்ததமிழர்களின் ஆர்ப்பாட்டங்களை ஊர்வலத்தை இலகுவாக அடங்க உதவிவிட்டார்கள் இப்ப விளங்கு தோயார் விசயம் தெரியாமலே யாருக்கு உதவுகிறார்கள் என்று…….

    பொராட்டம் என்பதின் அறிவே இல்லாத புண்ணாக்குகள் இன்னும் பல தில்லு முல்லுக்கள் செய்யப் போகினம் அதுவும் தமிழர்க்கு தலையிடிதான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஏன் எல்லோரும் இப்ப அவசரப்படுறியள். அண்ணை தம்பதி சமேதராய் குடும்பத்துடன் காட்சியளிப்பார். அப்போது எல்லோரும் தீபாராதனை செய்தால் போதும். ஆனால் எப்ப காட்சியளிப்பாரெண்டு எவருக்குமே தெரியாது.

    Reply
  • Tamillan
    Tamillan

    பட்டங்கள் பதவிகள் கொடுத்து இப்போது கருணநாயக்காவாக மாறிய கருணா தனது காட்டிக்கொடுப்பை பணத்துக்கும் பதவிக்குமாக சிறப்பாகச் செய்து வருகிறார்.

    இறந்த பிறகு புரட்டிப்பார்த்து இவர்தான் நபர் என்று திறம்பட காட்டிக்கொடுத்து தனது பதவிகளின் பயனைப் பெற்றுள்ளார் சிங்கள எஜமானர்களிடத்து. கருணா இப்போது கிழக்கு மாகாணத்தான் கிடையாது. அம்பாந்தோட்டயன்!

    Reply
  • மாயா
    மாயா

    //Tamillan on May 23, 2009 5:12 pm ……… கருணா இப்போது கிழக்கு மாகாணத்தான் கிடையாது. அம்பாந்தோட்டயன்!//

    “சிங்களவன் இலங்கையில் இனி சிறுபான்மை எனஒருவருமில்லை. எல்லோரும் இந் நாட்டு மக்களே எனும் நிலை உருவாக வேண்டும்.” என்கிறான். தமிழன் இன்னமும் “அவன் மட்டக்களப்பான் இல்லை அம்பாந்தோட்டத்தான்” என பிரதேச வேறுபாட்டோடயே தமிழர் தாயகம் வேண்டி நிக்கிறான்.
    நீங்கள் சரியா நடந்து, அடுத்தவனை சரியா நடக்கச் சொல்லுங்கோ?

    Reply
  • KUNALAN
    KUNALAN

    மரணித்த போராளிகளுக்கு வருடாவருடம் மாவீரர் விழா எடுத்து உலகம் பூராவும் கொண்டாட வழி வகுத்த ஒரு தலைவனுக்கு அவனது இறுதிப் பயணத்தில் ஒரு கண்ணீர் அஞ்சலி எழுதக்கூட நாதியில்லாமல்ப் போய் விட்டது பாருங்கள். இதைவிடக் கொடுமை எங்குதான் நிகழக்கூடும். உணர்ச்சி பறக்கக் கவி பாடிய பிரபாவின் புலவர்களெல்லாம் எங்கே போய்த் தொலைந்தார்கள். இந்க் கூட்டத்தை நம்பித்தானா இத்தனை தலைமைகளையும் இயக்கங்களையும் மக்களையும் அழித்தாய் நண்பா?!

    குணாளன்

    Reply
  • peruchali
    peruchali

    தலைவர் கொல்லப்பட்டார் என்ற உண்மையை புலம்பெயர்ந்து வாழும் “உலக்கைத் தமிழர்களிடம்” கூறி எங்களது பிழைப்பில் மண்ணள்ளிப்போட நாங்கள் என்ன முட்டாள்களா? காணி வாங்கி வீடுகட்டி அரைகுறையில் கிடக்குது. புதுக்காரும் வாங்க வேண்டும். மனுசியும் முப்பது பவுண் தாலிக்கு ஓடர் பண்ணீட்டா. உதெல்லாம் வலு கெதியில வாங்கட்டா வீட்டில மனுசியோட இருந்தபாடில்ல. எனக்குப்பிறகு காசு சேத்தவங்கள் எல்லாம் பெரிய லெவலா வாழுறாங்க. என்ர விசயம் முடியும் வரைக்கெண்டாலும் தலைவர் சாகவில்லை, உசிரோட உங்க லண்டனிலதான் குடும்பத்தோட இருக்கிறார். விசயத்த வெளியில விட்டுடாதீங்கோ, பங்களிப்பை மட்டும் அள்ளி அள்ளித்தாங்கோ.அலுவல் முடியும் வரை கப்சிப்…..

    Reply
  • Karan
    Karan

    //i am sik of this internet war . why don’t you something constructively. it is the fact that many civilans were killed in the war including Tamils and Sinhalese and Muslims. Also young talented tamil and sinhala soldiers were killed as well. i respect all those fought and died. there is no point in counting the numbers to compare which side was more. both parties were brutal. if possible try for a truth and reconciliation programme or try to help those still alive. plese do not waste your time fighting an internet war.//
    ragavan

    Reply
  • A.Chandrakumar
    A.Chandrakumar

    புலிகளின் கதை ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதை போல் ஆகிவிட்டது.

    Reply
  • sivan
    sivan

    Hi Karan i am sick of the peoples publish felthy articles about LTTE in the independant too, they would have keep low profile at this time somebody died.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    மின் அஞ்சலில் வந்த செய்தி:
    //எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல – புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன்
    —————————————————————————
    யாழ்.குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்” என்று யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவித்தார்.
    எம் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருப்பதாகவும் சிங்கள இராணுவ பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    சிங்கள இராணுவம் இன்று பாரிய உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு யுத்தத்தை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் மக்களை மிகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் கேட்டுள்ளார்.//

    மண் விழுந்தானுகள் இருக்கிற மிச்ச சொச்ச பொடி பெட்டைகளையும் தலைவருக்கு பொடி காட்டா அனுப்ப திட்டம் தீட்டிட்டுதுகள் போல. இல்லையெண்டா, மீதியாக உள்ளவர்களையும் போட்டுத் தள்ளினாத்தான் புலத்து புலிகளால நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்குதுகளோ யார் அறிவார்?

    இணையத்தில புலிப் போரில் தொடர்ந்து தமிழீழம் வரை போர் தொடரும். இல்லை தமிழரில்லா தாயகமாக ஒரு வழி பண்ணும். சிவ சிவா?

    Reply