இரா.சம்பந்தன் புதுடில்லி பயணம்!

sampanthan.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் புதுடில்லி செல்லவுள்ளார்.
 
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்ததைத் தொடர்ந்தே கூட்டமைப்பு புதுடில்லி சென்று இந்திய அரசியல் தலைமையைச் சந்திக்கத் திட்டமிட்டது.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் என்பதே 13வது திருத்தத்தின் முக்கிய பகுதியென்பதைக் கூட்டமைப்பினர் இந்தியத் தூதுவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்ததுடன், மத்திய அரசாங்கத்திடம் காணப்படும் பெரும்பாலான அதிகாரங்கள் இதுவரை மாகாணசபைகளுக்கு பகிரப்படாமையையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்த விடயம் குறித்து புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரெனவும் இந்தியத் தூதுவர்கள் உறுதிமொழி வழங்கிச் சென்றுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • DEMOCRACY
    DEMOCRACY

    /….But the LTTE failed to utilize the opportunity. The tigers consulted their chief supporters in Tamil Nadu like P. Nedumaran and Vaiko. Unwilling to let the Congress and DMK gain credit the duo advised the LTTE to reject the offer.So the LTTE said “illai” (no)
    These moves were on with the concurrence of Muttuvel Karunanidhi the Tamil Nadu chief minister. The octogenarian leader, on a sudden whim, went on an indefinite fast.The situation was volatile…./—dbsjeyaraj.com —
    இப்படி தமிழ்நாட்டை சேர்ந்த மோட்டு “ஆக்டோஜெனேரியன்” மக்களை நம்பாமல் “டெரெக்டாக கொண்டாக்ட்” புது டில்லி,”ஹைபை ஆட்களுடன்” வைத்திருந்தால்,பல நண்மைகள் அடைந்திருக்கலாம்,என்ற கருத்தியலே தற்போது இலங்கைத் தமிழரிடையே வலுப்பெற்று வருகிறது.

    Reply
  • kokku
    kokku

    ஐயா சம்பந்தரே, இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுவது “ஆடு நனைகின்றது என்று ஓனாய் கவலைப்பட்ட கதை” போலல்லவா இருக்கின்றது. உங்களது ஜனாதிபதிதான் இப்போது இல்லையே. எதற்காக தலையைப்பற்றி கவலைப்படுவதை விடுத்து, கற்பனையில் வாழுகின்றீர்கள்? உங்களுக்கெல்லாம் இன்னும் சொற்ப காலம்தான். அப்புறம் உங்கள் எவருக்கும் சாண்ஸே இல்லைஎன்பதை மறந்து விடாமல், இறுதி முறையாக இந்தியாவுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்துவிட்டு வாருங்கள்.

    Reply
  • palli.
    palli.

    ஜயா இறுதி காலங்களில் பல்லி தங்களுடன் பேசியுள்ளேன்.(புலிகளின் இறுதிகாலம்தான்) அது சரி ஏன் இந்த டெல்லி பயணம்.? அதுதான் இருவரும் கொழும்பு வந்தனரே.அப்போது பேசவில்லையா? அங்கு போயும் இந்த இருவரும்தானே தங்களுடன் ஏசவோ அல்லது பேசவோ போகினம். எல்லாமே விபரீத விளையாட்டுதான்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    எதற்கும் சம்மந்தன் முதலில் ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்களிடம் சொல்லிப் போட்டோ புதுடெல்லி செல்லப் போறார். இல்லையேல் சம்மந்தன் ஏன் புதுடெல்லி போகின்றார் என்று ஜெயானந்தமூர்த்தி, சிவாஜிலிங்கம் போன்றவர்களிடம் கேட்டால், சம்மந்தன் தனது தனிப்பட்ட விடயமாய் செல்கின்றார் என்று சொல்லிப் போடுவினம்.

    Reply
  • msri
    msri

    தமிழ்மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!> 70-ம் ஆண்டுத் தேர்தல் முடிந்தபின்> தமிழரசுக்கட்சி தலைவர் செல்வநாயகம் அவர்களால் சொல்லப்பட்ட வார்த்தை! இது இன்றும் தமிழ்மக்களுக்குப் பொருந்தும்! தமிழ்மக்கள் இன்று யாருமற்ற அனாதைகள்! இந்தியா தமிழ்மக்களுக்கு> குரங்கு அப்பம் புறித்த வேலையையே செய்துள்ளது! புலிகளின் விடுதலைப் போராட்டம்! “மதிலில் எறிந்த பந்துபோல்” ஆகியது! டக்கிளசூ+சங்கரி+கருணா+பிள்ளையான்> என்ற ஐனநாயக நீரோட்க்கூட்டம்! சிங்களப் பேரினவாதத்திற்கு “நிரந்தர அடிமை” உயில் எழுதியே விட்டார்கள்! எஞசியுள்ள கூட்டணிக்காரர்கள்> கடந்தகால “கூத்தணி வேலைகளயே” தொடர்கின்றார்கள்! இந்தியமாயை உங்களை விட்டபாடில்லை! 74-ல் நீங்கள் தேரதல் வெற்றிக்காக முன்வைத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எவ்வித முன்யோசனையுமின்றி பிரபாகரன் கையில் எடுத்ததன் விளைவு > தானும்அழிந்து+தமிழ்மக்களை அழித்தும் அகதியாக்கியதுமே! தமிழ்இனம் இன்று செய்வதறியாது கூனிக்குறுகி நிற்கின்றுது! கூட்டணி கடநதகால கூத்துக்களை நிறுத்தி> அவர்கள் அபிலாசைகளை கணக்கில் எடுத்து குரல் கொடுத்தாலே போதும்!

    Reply
  • rohan
    rohan

    வக்கணை பேசி வாழ்ந்தோம் – அதனை நாங்கள் விடுகிற பாடாகவும் இல்லை. என்ன விதத்தில் சம்பந்தர் தமிழர் வாழ்க்கையை வளம் படுத்த முடியும் என்று பேசுவது நல்லதில்லையா?

    அழுத்தங்களின் கீழ் தான் கூட்டமைப்பு புலியை ஆதரித்தது என்பது தலைக்குள் சரக்குள்ள எல்லோருக்கும் தெரியும். அது இந்தியாவுக்கும் நிச்சய்ம் தெரியும். வேறு யாரும் கேட்டு தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தரப் போவதில்லை. பொலிஸ் உரிமை கேட்ட பிள்ளையானை கருணவைக் கொண்டு மட்டம் தட்டினர் ராஜபக்ச சகோதரகள்.

    சரியோ தவறோ, கருணாவுக்கும் டக்ளசுக்கும் சங்கரிக்கும் இருக்கும் அளவை விட பல மடங்கு மிகையாக ஜனநாயக் முறைபபடி தெரிவு செய்யப பட்ட லேபலும் தலைமை தாங்கும் வல்லமை உடையவர்கள் என்ற நம்பிக்கையும் கூட்டமைப்பு மேல் தமிழர்களுக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கும் நிச்சயம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த கணத்தை கூட்டமைப்பு உரிய முறையில் பயன் படுத்தும் வகையில் அவர்களது கரங்களைப் பலப்படுத்துவது தமிழருக்கு கொஞ்சமாவது உரிமைகள் – குறைந்தது சலுகைகளாவது – கிடைக்க வழி செய்யும்.

    Reply