இலங்கையின் வடகிழக்கே புதுமாத்தளன் பகுதியில் செயற்பட்ட தற்காலிக மருத்துவமனையில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் மீது இலங்கை சுகாதார அமைச்சு விசாரணைகளை நடத்திவருவதாக அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்ததாக பிபிசி செய்தி தெரிவிக்கின்றது.
யுத்த பிரதேசத்தில் கடமையாற்றிய இந்த மருத்துவர்களான டி.சத்தியமூர்த்தி, டி.வரதராஜா, வி.சண்முகராஜா ஆகிய மூவரும் அந்தப் பகுதியில் காயமடைந்த பொதுமக்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னதாக இவர்கள் மூவரும் யுத்த பிரதேசத்திலிருந்து தப்பிவந்தபோது, இவர்களை இராணுவம் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்மதி
அது எதுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பவரை (அம்மூன்று மருத்துவர்களுள் ஒருவர் என்று ஊகிக்கிறேன்) தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள புகைப்படத்தைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கீங்கன்னு கொஞ்சம் விளக்கிச் சொல்றீங்களா
மையநீரோட்ட ரிப்போர்ட்டிங்கின் அடிப்படை முன் அனுமானங்களை நீங்களும் எந்த அளவிற்கு மனதில் ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொள்ள கொஞ்சம் உதவியாக இருக்கும்
சாந்தன்
கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்த வசதி செய்து கொடுத்த வித்தியாதரனிலும் விடவா இவர்கள் தவறு செய்துவிட்டனர்?
எவ்வாறாயினும் உலக சுகாதார ஸ்தாபனத்தில் ஸ்ரீலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை விசாரனை செய்ய இஸ்ரேலிய ‘சியோனிஸ்டுகள்‘ கொண்டுவந்த பிரேரணையை ஸ்ரீலங்கா தனது ஜனநாயக சக்திகளான கியூபா, சீனா, ஜப்பான் போன்றவற்றுடன் இனைந்து முறியடித்துவிட்டதாக பெருமையாக அறிவித்துள்ளது. அஹா சீனப்புரட்சி கியூபப்புரட்சி எனும் கதைகளில் திளைத்திருந்தோமே, இஸ்ரேல் ஆயுதௌதவி செய்தபோது அவர்களில் கோபம் கொண்டோமே, உண்மை முகம் அறிந்து கொண்டோம்!
A proposal by Israel to send a comprehensive investigation team to Sri Lanka to inquire into what they termed as alleged human rights violations by the Government of Sri Lanka has been defeated by countries which are friendly with Sri Lanka at the 62nd General Assembly of the World Health Organisations.
Almost all representatives except Israel commended the Government’s efforts to liberate the country from the clutches of terrorism . Talking of Human Rights by a country like Israel is hilarious, the Minister said.